நவீன இஸ்ரவேல்.

 

அனேகமானவர்கள, யூதர்களும், இஸ்ரவேலர்களும் ஒருவரே என்று எண்ணுகி ன்றார்கள். யூதா என்பவர்கள் யூத இனத்தின் வழித்தோன்றல்களாகும். இவர்கள் யாக்கோப்பின் ஒரு கோத்திரத்தாராவார்கள். அவருடைய பெயரைக் கர்த்தர் இஸ்ர வேல் என்று மாற்றியுள்ளார்.( ஆதி 35; 10)

இவர்கள் இஸ்ரவேல் சகோதரர்களிருந்து பிரிந்து லேவி கோத்திரத்தாரோடும், பென்யமின் கோத்திரத்தாருடனும் இணைந்து யூதா என்னும் குடும்பத்தை உருவாக் கினார்கள்.மிகுதியான கோத்திரத்தார் யாவரும் இணைந்து “இஸ்ரவேல் குடும்பத்தை” உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் வாக்குத் தத்த பூமிக்குத் திரும்பி வரவேயில் லை .

இன்று அவர்கள் தொலைந்து போன கோத்திரத்தார் என்று  அழைக்கப்படுகின்றார்கள். யூதா குடும்பத்தாரும் சிறையிருப்பாகக் கொண்டு போகப்பட்டார்கள், ஆனால் பல வருடங்களுகுப்பின்பாக அவர்கள் பாலஸ்தீனத்திற்கு திரும்பி வந்தார்கள்.. யூதா குடு ம்பத்தைச் சேர்ந்த அனேகர் இன்னு இஸ்ரவேல் தேசத்தில் குடியிருக்கின்றார்கள்.. குறிப் பிட்ட காலப்பகுதில்,தொலைந்து போன கோத்திரத்தாரான  இஸ்ரவேல் குடும்பத்தார் ஐரோப்பாவிலும், பிரித்தானியாவிலும் குடியேறியுள்ளதாக தொல் பொருள் ஆராய்ச் சியாளர்கள் கூறுகின்றார்கள். யோசேப்பின் மூத்த மகனாகிய மனாசேயின் கோத்திரத்தார்  அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குள் குடியேறி இன்றுவரையும் வாழ்ந்து வருகின்றார்கள். யோசேப்பின் இளையமகனாகிய இப்பிரகாமின் கோத்திரத்தார் இன்றும் பிரித்தானியாவின் நாடுகளிலும், கனடாவிலும்,தென் ஆபிரிக்காவிலும், அவுஸ்திரேலி யாவிலும், நியூசிலாந்திலும் வாழ்ந்துவருகின்றார்கள்.

தற்கால இஸ்ரவேல் குடும்பத்தாரைப்பற்றி வேதாகமம் அனேக கணிப்புக்களைக் கூறியுள்து.(யூதர்கள் அல்லது யூதகுடும்பம் என்பவற்றுடன் இணைத்து குழப்பம டையவேண்டாம்)  ” இஸ்ரவேல் என்ற பதம் தற்கால இஸ்ரவேலர்களைக் குறிக் கும்,அதாவது முன்னோடியான இப்பிரகாம், மனாசே  என்கின்ற  யாக்கோபின் குடும்பத்தாரைக் குறிக்கும்.

ஐரேப்பாவில் உருவாகிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்து நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். தற்கால அசீரியா என்று அழைக்கப்படும் ஜேர்மன் தேசத்தின் தலமைத்துவத்தில் இது உருவாகும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. இது யூதா குடும்பத்தையும், இஸ்ரவேல் குடும்பத்தையும் பேரழிவிற்கு உள்படுத்தும் நோக்கம் கொண்டது. இவ்வாறான அமைப்பு உலகில் உருவாகும் போது, காலம் குறுகிவிட்டது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும். ஐரேப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்திற்கான அறிகுறியாகவே யூரோ உருவாக்கம் பெற்றுள்ளது என்று இத்தாலிய பிரதமர் கூறியுள்ளார்.

இந்த ஐராப்பிய அதிகாரத்துடன் , ஆரம்பத்தில் இஸ்ரவேல் குடும்பம் சினேக பூர்வமான உறவுகளை மேற் கொள்ளும்.. இவர்களுடன் விவசாய ,தொழில்நுட்ப வியாபாரங்களில் ஈடுபடும். ஓசியாவில் இந்த வியாபார உடன்படிக்கை குறித்து கூறப்பட்டுள்ளது. ஓசிய 12:1. ஆனால் இந்த நட்பறவு நீடிக்குமா? இல்லை!. நம்பமுடி யாத தாகவே தோன்றுகின்றது. ஐக்கிய அமரிக்கா,கிறேட்பிரிட்டன், அதனோடொத்த கொமன் வெல்த் நாடுகள், என்பன அவற்றின் முன்னய நட்புநாடுகளாலும், தற்கால அசீரிய நாட்டின் வழிநடத்வலுடன் இயங்கும்  ஐக்கிய ஐரேப்பியா நாடுகளாலும் தூக்கியெறியப்படும். இந்த அமைப்பானது யூதா குடம்பத்தையும், இஸ்ரவேல் குடும்பத்தையும் அடிமைப்படுத்தும்.

 

Mic 5:5 இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன். Mic 5:6  இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார். Mic 5:7  யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள். Mic 5:8  யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.

சரித்திரத்தோடு இது எவ்வாறு இணைந்து போகின்றது என்பதைப்பார்ப்போம். 1940 இல் நவீனகாலத்து அசீரியா, அடோல் கிட்லரின் தலமையில் , உலக யுத்தம் 2 இன்போது, கிறேட் பிரித்தானியாவைத் தாக்கியது, ஆனால் பிரித்தானியா அசீரியாவை ​வெற்றி கொள்ள கர்த்தர் இடம்கொடுத்தார்.

பிரித்தானியா ஒரு நல்ல கோத்திரத்தைச் சேர்ந்தவர்களானபடியால், அவர்களுடன் போர் தொடுக்க கிட்லர், மிகவும் ஆவலாகவிருந்தார். இருந்தும், அவர் ஆகாகய மார்க்கமாக இங்கிலாந்தைத் தாக்கினார், இது 1940 செப்ரம்பர் 7 முதல் நவம்பர்13ம் திகதிரை நடைபெற்றது. இந்த யுத்தத்தின் முடிவில் ஜேர்மனி பல அழிவுகளைச் சந்தித்தது, அனேக நகரங்கள் அழிக்கப்பட்டன.

கர்த்தர் இரண்டுமுறை ஐக்கிய அமெரிக்காவை அசீரியனுடைய தாக்குதலிருந்து காப்பாற்றியுள்ளார் என்பது சரித்தி உண்மையாகும்.

முதலில் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்த சில உண்மைகளைப் பார்ப்போம்.ஜேர்மன் நாட்டு கயிஷர் வில்கேம் 11  (Kaiser Wilhelm II) என்பர் 100 வருடங்களுக்கு முன்பாக அமேரிக்காவுடன் யுத்தம் செய்வதற்கு திட்டமிட்டிருந்தார். அவர் நியூயோக் நகரத்தையும் போஸ்ரன் நகரத்தையும்  100 கப்பல்களுடனும் 100,000 போர் வீர்ர்களுடனும் தாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தார்.அந்த நாட்களில் அமெரிக்காவிடம் 54 இராணுவ கப்பல்கள் மட்டும்தான் இருந்தன. அவருடைய முழுத்திட்டமும் தெற்கு அமெரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதும், பனாமாக் கால்வாயைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டுவருவதாகவிருந்தது.

10 வருடங்களாக இந்தத்திட்டத்தை தீட்டியும் அவரால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. 1914 இல்  கயிஷர் வில்கேம் 11 (Kaiser Wilhelm II )ஜேர்மன் தேசத்தை முதலாம் உலக யுத்த்த்தில் வழிநடத்தினார்.

அடோப் கிட்லரின் பிரித்தானியாவின் மீதான தாக்குதலுக்கு மேலதிகமாக , 1941 டிசம்பர் 11 இல் ஐக்கிய அமெரிக்காவுக்கான யுத்தத்தை அறிவித்தார். இது யப்பான் தேசத்தின் பேள் துறைமுகத்தை Pearl Harbor தாக்கியதன் இரண்டு நாட்களுக்குப் பின்பு நிகழ்ந்தது. அதன்பின்பு, அமெரிக்காவின் கப்பல்கள்  எங்கு காணப்பட்டாலும் அவற்றை அழிக்கும்படி கிட்லர் அறித்தார்.

. ஒரே நேரத்தில் அனேக யுத்தங்களை  அதாவது , ஐரோப்பாவில், ஆபிரிக்காவில், மத்திய கிழக்கில், ருஷ்ஷியாவில், அத்துடன் அமெரிக்காவில் யுத்தம் செய்தபடியால்,  கிட்லர் இந்த யுத்தத்தில் தோல்விகண்டார். இப்படிப்பட்ட யுத்த தீர்மானங்கள் எதிர்காலத்தில் அதாவது இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்படும். இந்த யுத்தத்தில் அசீரியா வெற்றி கொள்ளும்.

இந்த யுத்தத்தின் இறுதியில் கிட்லர் தன்னுடைய வாழ்நாளின் முடிவில் அவதானித்துதான் உலகத்தில் ஒருத்தரை ஒருத்தர் தாக்கக்கூடிய வல்லரசாக  ருஷ்ஷியாவும், அமெரிக்காவும் காணம்படும் என்பதாகும். இந்த இரண்டு வல்லரசுகளும் ஐரோப்பாவிற்கு எதிரானவையாகவே தற்போது உருவாகியுள்ளன. (Klaus P. Fischer, Nazi Germany–A New History, 1995, pp. 563–564).

மீகா 5; 7-9 விபரிப்பதாவது, தற்கால இஸ்ரவேல் குடும்பத்தார், “யாக்போபின் மிகுதியானவர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.. அவர்கள் வல்லமையுள்ளவர்கள் என்றும், மற்ற தேசங்களுக்குள் சிங்கத்தைப்போல் இருப்பார்கள் என்றும், அவர்கள் செல்வம் மிகுந்தவர்களும், ஆசீர்வாதமானவர்களும், யுத்தத்தில் வெற்றி கொள்பவர்களுமாக இருப்பார்கள் என்று விபரிக்கின்றது.

ஆனால் மீகா 5; 10-15 வசனங்களை வாசிக்கும் போது நிலமை மாற்றமடைவதை எம்மால் பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் எப்படி எதற்காக ஏற்படுகிறது. (அந் நாட்களில் என்ற சொற்தொடரானது- கடைசி நாள்கள் அல்லது கர்த்தருடைய நாள் என்பது மனிதருடைய அரசியலில் கர்த்தர் குறுக்கிடும் நாள் என்று பொருள்படும்

 

Mic 5:11  உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி,

Mic 5:12  சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.

Mic 5:13  உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.

Mic 5:14  நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,

Mic 5:15  செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.

 

கோபத்தோடும் உக்கிரத்தோடும் என்ற சொற்பதமானது  கர்த்தருடைய கோபத்தைக் குறிக்கின்றது. இது வெளிப்படுத்தல் புத்தகத்தில்  கடைசி நாட்களில் மனித பரம் பரையின் மீது ஊற்றப்படும் என்று குறிப்பிடப்படுகின்றது.

கர்த்தருடைய கோபம்  இஸ்ரவேல் குடும்பத்தார் மீதுதான் முலில் ஆரம்பிக்கும். அதாவது கீழ்படியாத தேசங்களான ஐக்கிய அமெரிக்கா, கிறேட் பிரத்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்பவையாகும். இந்த முறை இந்த நாடுகள் அழிக்கப்படும்,  கர்த்தர் இதை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்துயுள்ளபடியால் இது நிறைவேறும்.

Jer 30:3  இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பி வரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

யூதா குடும்பமும், இஸ்ரவேல் குடும்பமும்  சிறையிருப்பாக் கொண்டு போகப்படு வார்கள் என்றும் அவர்கள்  யாவரும்   கர்த்தரினால் விடுவிக்கப்பட்டு கர்த்தர் ஆபிரகாமுக்கும், ஈசாக்கிற்கும், யாக்கோப்பிற்கும் கொடுப்பேன் என்று வாக்களித்த தேசத்திற்கு கொண்டு போவார் என்று ஜெரேமிய  கூறுகின்றார். ஏற்கனவே முடிந்த சரித்திரத்தை நாம் கவனிக்கும்போது சிறைப்பிடிக்கப்பட  இஸ்ரவேல் குடும்பத்தார் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் மீண்டும் திரும்பி வரவில்லை, ஆனால் சிறிதளவான யூத குடும்பத்தார் நாட்டுக்குள் துரும்பி வந்தார்கள். ஆனால் இங்கு கூறப்பட்ட தீர்க்கதரிசனமானது இனி வருங்காலங்களில் இடம்பெறப் போகின்றவையாகும்.

ஜெரேமியா 30; 6-7 இந்த விடயத்தை மிகவும் விரிவாக விளங்கப்படுத்துகின்றது, இனி வரப்போகும் யுத்த, சிறையிருப்பு, அடிமைத்தனத்திலிருந்து முழுமையான விடுதலை, என்பன இடம்பெறும் என்பதை மிகம் ஆணித்தரமாக வெளிப்படு த்தியுள்ளது. “ஆணாய்ப்  பிறந்தவன்  பிரசவிக்கிறதுண்டோ  என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற  ஸ்திரீயைப்போல்  புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம்  மாறி  வெளுத்திருக்கிறதையும்  நான் காண்கிறதென்னஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.

.கர்த்தருடைய நாளானது இனி வரப்போகும் பெரிய நாளாகும்.அது வருங்காலத்தில் இடம்பெறப் போகின்ற நாளாகும். இது ஒரு தனிப்பட்ட “சிறப்பான நாளாகும்” இதைப் போல ஒத்த நாள் இல்லை. நாங்கள் இது இந்த யுகத்தின் முடிவில் இடம்பெறப் போகும் உபத்திரபகால  சம்பவமாகும் என்பதை நினைவுகூருதல் வேண்டும்..மிகுந்த உபத்திரப நாள் என்பதும்,கர்த்தருடைய நாள் என்பதும்  இரண்டும் ஒரே காலத் திற்குரிய நிகழ்வுகளாகும்.  .மிகுந்த உபத்திரப காலம் இரண்டரை வருடங்கள் நீடிக்கும்,தொடந்து கர்த்தருடைய நாள் ஒருவருடம் நீடிக்கும். முற்றுமுழுதாக மூன்றரை வருடங்கள் இஸ்ரவேல் வீட்டார் தண்டிக்கப்படும் காலமாகும்.​ புறஜாதிகள் ஜெருசலேமை காலால் மிதிக்கும் காலமுமாகும். “இது ஜாக்கோபின் இக்கட்டுக்காலம்” என்று கூறப்படுகின்றது.இது இஸ்ரவேலரைக்குறிக்கின்றது. கர்த்தர் அவர்களின் உபத்திரப காலத்தில் அவர்களை மீட்டுக் கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உபத்திரபத்தினூடாக அவர்கள் முதலில் செல்லுதல் வேண்டும்.

ஜெரேமியா 30; 8 இவ்வாறு கூறுகின்றது. ”  அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை”.

. கர்த்தர் குறுக்கிடும் காலத்தில் , “அவனுடைய நுகத்தை” அவர்களுடைய கழுத்திலிருந்து உடைத்து என்பது குறுப்பிடுவதாவது, ” அடிமைத்தனத்தின் நுகம்” என்பதாகும்.

தற்கால அசீரியர்களினால் யூதர்கள் அடிமைத்தனத்தின் நுகத்தில் பிணைக்கப்படுவான் என்பது நாம் அறிந்ததே, அத்துடன் அவர்கள் கிறிஸ்துவின் வருகையின்போது கர்த்தரால் விடுவிக்கப்படுவார்கள்.”அவருடைய நுகம்” என்ற சொற்பதமானது,அசீரியா தனது நுகத்தை யூதா குடும்பத்தின்மீது மட்டுமல்லாமல், இஸ்ரவேல் குடம்பத்தின்மீதும் ஏற்படுத்தும் என்பதாகும்.

கர்த்தர் அவர்களை அடிமைத்தன நுகத்திலிருந்து விடுதலையாக்குவார். அவருடைய வசனங்களைக் கவனிப்போமாகில், ” அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை. அப்படியாயின் , அந்நியர், அல்லது வெளிநாட்டு வல்லமை, அவர்களை அடிமைப்படித்தியிருந்தது என்று தோண்றுகின்றது.கர்த்தர் தலையிடும்போதும் அவர்கள் அடிமைத்தனத்திலேயே இருந்து கொண்டிருக் கின்றார்கள்..ஜெ​ரேமியா  30;9 தெரியப்படுத்துவது என்ன?  இவைகள் நடைபெறும்போது, “தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்“. இந்த நிகழ்வானது பரிசுத்தவான்களின் அதாவது நீதிமான்களின் உயிர்ததெழுதலின் போது இது இடம்பெறும். இந்த நிகழ்வானது இயேசுக்கிறிஸ்து உலகத்திற்கு மீண்டும் வரும்போது இடம்பெறும்.

 

.ஜெரேமியா 30:10 தெரிவிப்பது என்னவென்றால், “ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.”

கிறிஸ்துவின் வருகையின்போது நீதிமான்கள்உயித்தெழுவார்கள். யாக்கோபின் வித்தாகிய இறுதிக்கால யாக்கோபின் சந்த்தியாராகிய  அமெரிக்கர்களும், பிரித்தானியர்களும் அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வைத்திருக்கும் தேசத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

…” அந்தத்தேசம் எது? அதற்குரிய விடை ஜெரேமியா 23:7–8 இல் உள்ளது. “ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக் கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணாமல், இஸ்ரவேல் வீட்டின் சந்ததியாரைத் தங்கள் சுயதேசத்தில் குடியிருக்கும்படிக்கு வடதேச த்திலும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து அழைத்து வழி நடத்திக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம் பண்ணுவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்”

வடதேசத்திலிருந்தும் ( இங்கிருந்துதான் வடக்கு ராஜா வருவார்) மற்றும் அந்நிய வல்லமை ஆட்கொள்ள அனுமதித்த தேசங்களிலிருந்தும், இ​ஸ்ரவேல் பரம்பரையினரை கர்த்தர் கொண்டுவருவார் .அவர்​ ஜெருசலேம் தேசத்தின் வடசேத்தில் அடிமைப்படுத்தப்படுவார்கள் அது ஐரோப்பிய நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியாகும். அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை அங்கிருந்து வேறு நாடுகளுக்கு துரத்துவார்கள். குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால்  அசீரியர்கள், முன்னய காலத்திலும், தற்போதைய காலத்திலும், சிறைப்பிடக்கப்பட்டவர்களைத் தங்கள் நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்கு கொண்டுசெல்வார்கள்.

தற்கால இஸ்ரவேல் குடும்பத்தாரும்,யூத குடும்பத்தாரும் அடிமைப்படுத்தப் படுவார்களென்று வேதாகமம் கூறவில்லையே என்று சிலர் விவாதிக்கலாம். அது உண்மையா?  தற்கால இஸ்ரவேலர்கள்மேலும், யூதர்கள் மேலும் “நுகம்” இடப்படும் என்பதை  நாம் பார்த்துள்ளோம். (ஏசா.14;25, 52;2) “அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள் மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்.” தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு.  விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ”

 

“நுகம்” என்றால் உண்மையில் என்ன, இஸ்ரவேல் குடும்பத்தின்மீது நுகத்தை இடப்போகிறவன் யார்? நுகம் என்பதற்கு வேதாகமம் கூறும் வரையறை என்னவென்று கவனிப்போம்.

ஏசாயா 47;1 இன் தீர்க்கதரிசன வார்த்தையிலிருந்து ஆரம்பிப்போம்.” பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.

இந்தத் தீர்க்கதரிசனத்தில் “ பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையை” குறித்துக் கூறப்பட்டுள்ளது. இது பழைய காலத்து பாபிலோனைக் குறிப்பிடவில்லை. ஆனால் இங்கே சந்ததியாகிய குமாரத்தியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இங்கு “பாபிலோன் ” என்று குறிப்பிடப்படுவது,  இனி வரப்போகும் பொருளாதார, இராணுவ,மத அதிகாரத்தைக் கொண்டுள்ள ஐரோப்பிய அமைபைக்  குறிப்பிடுவதாகும்.

ஏசாயா 47 ;6 கூறுவதைக் கவனித்துக் கொள்ளுவோமாக.” -“நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வையாமல், முதிர்வயது ள்ளவர்களின் மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கினாய்”.  இங்கு “நுகம்” என்று கூறப்படுவது நேரடியாக அடிமைப்படுதுதலேயாகும். இங்கு இஸ்ரவேல் குடும்பத்தின்மீதும் யூதாகுடும்பத்தின்மீதும் கர்த்தர் நினைத்திருந்த அளவைவிட  மிகவும் கடினமாக அடிமைப்படுத் தலைக்குறிக்கின்றது.

அதனாலே ஏசாயா 47;9,11 இல் இவ்வாறு வாசிக்கிறோம்.” சந்தான சேதமும் விதவை யிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்( தற்கால பாபிலோன்). உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும். ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்.”

இந்த பகுதியில் தற்கால பாபிலோன்மீது, அழிவு சடுதியாக ஒரே நாளில், ஒரேநேர த்தில் வரும் என்று கூறுகின்றது.

வெளிப்படுத்தல் 18;8,10 என்பதில் கூறப்பட்டவை மிகவும் துக்கமானவையாகும்.” ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத் தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமை யுள்ளவர்.அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள். ” இஸ்ரவேல் குடும்பத்தின்மீதும்,யூதாகுடும்பத்தின்மீதும் பாபிலோன்  அடிமைத் தனத்தை அதிகமாகச்  ஏற்படுத்தியபடியால், அவள் கர்த்தரிடமிருந்து இரக்கத்தை எதிர்பார்க்கமுடியாது,  அவள் மிகவும் விரைவாக அழிக்கப்பட்டுப் போவாள்.

முடிவுகாலத்தில் இஸரவேலின் நுகம் என்பதற்கான இன்னுமொரு குறிப்பை உபாகம்ம் 28; 47-51 இல் காணமுடிகிறது. ” சகலமும் பரிபூரணமா யிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற் போன தினிமித்தம், சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத் தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள். கிழவன் என்று முகம் பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும், உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத் திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார். நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான்.

உலக யுத்தம் 11 இல் காலஸ் பிஷர் Klaus Fischer என்பவரால் குறப்பட்டது,வெற்றி கொள்ளப்பட்டதேசத் தாரை ,வெற்றிகொண்டவர்கள் எவ்வாறு நடத்தினார்கள் என்பதை சிந்திக்கும்போது “ஜேர்மன் மக்களில் காணப்பட்ட அசீரியர்களின் இயல்புகள்.” தெரியவந்தது என்று கூறுகின்றார். பழைய காலத்தில்  ஆட்சி கொள்ளையடிக்கப்பட்டது. பரவாயில்லை நான் கொள்ளையடிக்க த்தீர்மானித் துவிட்டேன், அதிகமாக கொள்ளையடிப்பேன். (quoted by Klaus Fischer, Nazi Germany, p. 486)

கிட்லர் கூறியதாவது, “‘எங்கள் கொள்கை,  இவர்கள் எங்களின் பொருளாதாரத் தேவைகளுக்கா உயிருடன்  இருப்பதை நியாயப்படுத்த முடியும், இவர்களின் எல்லைகளிலிருந்து எவ்வளவு சுரண்டமுடியுமோ, அவ்வளவற்றையும் சுரண்டவேண்டும்.

உபாகம்ம் 28 ;68 இவ்வாறு கூறுகின்றது, “ இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டு போகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக் காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.”

தற்கால இஸ்ரவேல் தேசத்தாரும்,யூதா தேசத்தாரும் எகிப்திற்கு கப்பல்மூலம் அழைத்துக் கொண்டு போகப்படுவார்கள். இது ஒரு அடிமைத்தனத்தின் அடையாளமாகும். இங்கு எல்லோரும் எகிப்பு தேசத்திற்குப் போவார்கள் என்று சொல்லவில்லை.

நாம் உலகயுத்தம்11இல் கங்கேரியில் ஏற்பட்ட கீழ்காணும் உதாரணத்தை கவனிப்போமாக   (Klaus Fischer, Nazi Germany, p. 511):

நாசி வாசிகள் புதியதொழில் நுட்பத்தை பரீட்சித்துப் பார்ப்பதற்கு அரைமனதுடன் செயற்பட்டனர். அதாவது யூதர்களை மேற்குலக நாடுகளுக்கு விற்பனை செய்வதற்குத் திட்டமிட்டனர். ஆனால் துர்அதிஸ்டவசமாக மேற்குலக நாடுகளை இத்திட்டம் கவரவில்லை. இதனை உபாகம் 28 ; 68 நாம் வாசிக்கலாம். “ இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.

தற்கால இஸ்ரவேலர்கள் பற்றி  எசேக்கியேல் தீர்க்கதரிசி மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸதிரேலியா,மற்றும் கொமன்வெல்த் நாடுகள் என்பன வரப்போகும் யுத்தத்தில் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள  நவீன எதிரிகளால் தோற்கடிக்கப் படுவார்கள். இது மனித வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும். இதைப்போல ஒரு பயங்கரமும் கொடுமையான நிகழ்வுகளும் முன்பு ஒருபோதும் நிகழவில்லை, அது இனி எப்போதும் நடக்கப் போவதுமில்லை. இதுதான் மகா உபத்திரபத்தின் காலமாகும்.( Eze 5:9  நான் முன்பு செய்யாததும் இனிச்செய்யாதி ருப்பதுமானவிதமாய் உனக்கு உன் எல்லா அருவருப்புகளினிமித்தமும் செய்வேன். )

எசேக்கியேல் 6;1-2 இல் கர்த்தர் எசேக்கியேலுக்கு சொல்லும்படி  கூறுகின்றார். ” நீ இஸ்ரவேலின் பர்வதங்களுக்கு “பேசு என்கிறார். 6ம் வசனத்தில் கர்த்தர் சொல்லுகிறார் ” உங்கள் பலிபீடங்கள் நிர்மூலமும் பாழுமாகும்படிக்கும், உங்கள் நரகலான விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்கள் சிலைகள் வெட்டுண்டு, உங்கள் கிரியைகள் குலைந்துபோகும்படிக்கும், உங்களுடைய சகல வாசஸ்தலங்களிலுமுள்ள பட்டணங்கள் நிர்மூலமும் உங்கள் மேடைகள் பாழுமாகும்.” இது இன்னமும் பழைய இஸ்ரவேலில் நடைபெறவில்லை. ஆனால் அசீரியர்கள் சமாரியாவை வெற்றி கொண்டபோது நகரங்கள் அழிக்கப்படவில்லை, ஆனால் குடியேற்றப்பட்டார்கள்.

எசேக்கியேல் 6;7 இல்தொடர்ந்து கூறப்படுவதாவது ” ” கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.”  தற்கால அமெரிக்கா,பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா ஆகியோர் உண்மையில் கர்த்தரை அறியவில்லை.அத்துடன் கர்த்தர் தங்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார் என்பதை அறியாமலிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அசைக்கப்பட்டபிற்பாடுதான், கர்தரே தங்களை அசைத்தார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் மகா உபத்திரபத்திற்குள் அவர்களைக் கொண்டு செல்லும்போதுதான் அவர்கள் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்வார்கள். மத். 24; 21-22.” ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படா திருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப் பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.

 

நவீன காலத்து இஸ்ரவேலர்களை கர்த்தர் எச்சரிக்காமல் விட்டதேயில்லை. அவர் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பதாகவே இயற்கை அழிவுகள் ஏற்படுத்துவதன்மூலம் அவர்களை எச்சரித்து வந்துள்ளார். அத்துடன் நீடித்த காலங்களுக்கான வரட்சியை ஏற்படுத்தியுள்ளார், அதனால் பஞ்சத்தை அதிகரித்து எச்சரித்தார். ஏற்கனவே ஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் வரட்சியையும் தொற்று நோய்களையும் ஏற்படுத் தியுள்ளார் என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கின்றோம். இவைகள் யாவும் தேசமானது விழிக்கும்படியாக கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட எச்சரிக்கைகளாகும். அதேவேளை இவர்கள் தங்கள் பாவத்தை விட்டு மனம் திரும்பாவிடில் இதற்கும் மேலான அழிவுகளை ஏற்படுத்துவேன் என்ற எச்சரிக்கையேயாகும்

தற்கால  இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு ஆண்டவர் ஆமோஸ் தீர்க்கதரிசிக்கூடாக ஆமோஸ் 4; 7-9 இல் கூறுவதைப்பார்ப்போம்.” இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத் தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.  இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக் கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலை களிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற் போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”  அடுத்துவரும் இரண்டு வசனங்களையும் வாசிப்பீர்களானால்,யுத்தத்தையும், முழு அழிவையும் நீங்கள் சந்திப்பீர்கள் என்று கர்த்தர் கூறுவதைக்காண்பீர்கள். மனம்திரும்புங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள்.

இதை ஒத்த எச்சரிப்புக்களை  உபாகம்ம் 28 ; 23-24, 38-39, 42  ” உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும். உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும். திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும்.  

வரட்சியை நாம் சாதாரணமாக எடை போடக்கூடாது. பாவம் செய்யும் மக்களை விழித்தெழச்செய்வதற்காகவும், அவர்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டுவதற்காகவும் கர்த்தர் வரட்சியை உபயோகிக்கின்றார். (ஆகாய் 1;11பார்க்கவும்) அவர் திரும்பவுமாய் அவ்வாறு செய்வேன் கர்த்தர் கூறுகின்றார். (சகரியா 14;17,வெளி 11;6 பார்க்கவும்) கர்த்தர் சரியானதையே செய்வார்.

எசேக்கியேல. 6;8-10. மிகவும் தெளிவாக  தற்கால இஸ்ரவேலர் மனம் திரும்பாவிடில் அதாவது விழித்தெழாவிட்டால்  அடுத்து என்ன நடக்கும் என்பதை விளங்கப் படுத்துகின்றது. ” நீங்கள் தேசங்களில் சிதறடிக்கப்படும்போது, புறஜாதிகளுக்குள்ளே பட்டயத்துக்குத் தப்புவாரை உங்களுக்கு மீதியாக வைப்பேன். என்னை விட்டுச் சோரம் போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம் போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்க ளுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து, இந்தத்தீங்குகளையெல்லாம்தங்களுக்குநேரிடப் பண்ணு வேன்என்றுகர்த்தராகியநான்விருதாவாய்ச்சொன்னதில்லையென்றுஅறிந்து கொள்வார்கள்என்றார். இவைகளே கர்த்தர் கொடுக்கும் எச்சரிக்கைகளாகும். நாங்கள் இவற்றிற்குச் செவி கொடுக்கிறோமா?

எசேக்கியேல் 39; 21-29 சிறையிருப்பிலிருந்து முழுமையாக விடுவிப்பேன் என்று உறுதியாகக் கூறுகின்றார். “இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும் அவர்கள்மேல் நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளும் காண்பார்கள். அன்றுமுதல் என்றும் நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று இஸ்ரவேல் வம்சத்தார் அறிந்து கொள்வார்கள். இஸ்ரவேல்  வம்சத்தார் தங்கள் அக்கிரமத் தினிமித்தமே சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது புறஜாதிகள் அறிந்து கொள்வார்கள்; அவர்கள் எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணின படியால், என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் அனைவரும் பட்டயத்தால் விழுந்தார்கள். அவர்களுடைய அசுத்தத்துக்குத் தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன். ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் தங்கள் அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாய்த் தங்கள் தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாய்த் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து தீர்த்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்துக்கும் இரங்கி, என் பரிசுத்த நாமத்துக்காக வைராக்கியமாயிருப்பேன். நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பி வரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது, தங்களைப் புறஜாதிகளிடத்தில் சிறைப்பட்டுப்போகப்பண்ணின நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்கள் சுயதேசத்திலே திரும்பக்கூட்டிக்கொண்டுவந்தேன் என்பதினால், நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.”

கர்த்தர் அவர்களை அடிமைத்தனத்திற்குள் அனுப்பினார், அத்துடன் அவர்களை  அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக் கொள்வார், அவர்கள்மேல் தன்னுடைய ஆவியை ஊற்றுவார். இந்தச் செயற்பாடானது இன்னமும் நடைபெறவில்லை. இது வருங்காலத்தில் நடக்கவிருக்கும் செயற்பாடாகும்.

எசேக்கியலைப்போல ,ஜெரேமியாவும் தற்கால இஸ்ரவேலர்களின் எதிர்காலம் குறித்து அதிகம் கூறுகின்றார். இன்னும் சில பகுதிகளைப் பார்ப்போம், அவைகளும் தற்கால இஸ்ரவேலர்களின் அழிவுகள் குறித்துச் சந்தேகமின்றி கூறுவதோடு மட்டுமல்லாமல, மகிமையான எதிர்காலம் பற்றியும் கூறுகின்றது. ஜெரேமியா 30; 18-24 இவ்வாறு கூறுகின்றது. “ கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும். அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை. அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன். அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்து வரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணைப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன். இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும். கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள். ” இது வருங்காலத்தில் நடக்கவிருக்கும் தீர்க்கதரிசனமாகும். கடைசி நாட்களில் ,தற்கால இஸ்ரவேலர்கள் தங்கள் பாவங்களுக்காக மனம்திரும்பும்போது, சர்வ வல்லமையுள்ள கர்த்தரினாலே அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

ஜெரேமியாவின் தொடர்ச்சியான வசனங்களைப்பார்ப்பொம். 31; 1-9.” அக்காலத்திலே( இது தான் டைசிக்காலம்) நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், ( யாக்கோப்பின் சந்த்தியாராகிய யூதர்களும் இதில் அடங்குவார்கள்)அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  பட்டயத்திற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம் பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள் ளுகிறேன். இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்க ளின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய். மறுபடியும் சமாரியாவின் மலைக ளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள். எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக் காரர் கூறுங்காலம் வரும். கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபி னிமித் தம் மகிழ்ச்சியாய்க் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள். இதோ, நான் அவர்களை வடதேசத் திலிரு ந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்துக்குத் திரும்புவார்கள். அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப் பண்ணு வேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.”

ஜெரேமியா.32 ; 37-40 “தொடர்ந்து கூறுவதாவது, ” இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மை யுண்டா கும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக் கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, “

இந்தப்பந்தயில் கர்த்தர் சொல்வதைக் கவனித்துப் பாருங்கள், கர்த்தர் அடிமைகளாக்கப்பட்ட தற்கால இஸ்ரவேலர்களை  கர்த்தர் சிறையிருப்பிலிருந்து மீட்டுக் கொள்ளுவார், அதேநேரத்தில், புதிய உடன்படிக் கைக்குள்  நுழையும் ஒரு முன்நிபந்தனையாக அவர்களுக்குப் பரிசுத்த ஆவியை அருளுவார்.  மீண்டும் , நாம் கவனிக்கவேண்டியது யொதெனில், தற்கால இஸ்ரவேலர்களுக்கு எதிராக சிறையிருப்பும், அடிமைத்தனமும் தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்க்க தரிசனம் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமானதல்ல, யூதா குடும்பமாகிய யூதகோத்திரத்தாருக்கும்,பென்யமீன் கோத்திரத்தாருக்கும் ,லேவி கோத்திரத்தா ருக்குமானதாகும். இந்த குடும்பத்தாரும் இயேசுக்கிறிஸ்து மீண்டும் வரும்போது விடுதலை யாக்கப்படுவார்கள்.

திரும்பவும் இது ஜெரேமியாவில் கூறப்படுவதைப் பாருங்கள்,  33;7-9.” நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, ( இங்கு கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், இஸ்ரவேல் குடும்பத்தார்,  முன்னய காலத்தில் அசீரியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு அடிமைப்ப டுத்தப்பட்டபோது, அவர்கள் தங்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு திரும்பி வரவே இல்லை என்பதாகும்.) முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து,அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங் களையும் மன்னிப்பேன். நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச் சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

. இஸ்ரேல் கைதிகளும் மற்றும் ஜூதாவின் கைதிகளும் ஒன்றாகவே கர்த்தர் விடுவிக்கும்போது திரும்பி வருவார்கள், கர்த்தர்அவர்களுடைய பாவத்தை மன்னிப்பார். இரண்டு தேசத்தாரும் ஒன்றாக விடுவிக்கப்ட்டது சரித்திரத்தில் முன் எப்போதும் இடம்பெறவில்லை.

திரும்பவுமாய் ஜெரேமியா 46; 27-28 தற்கால இஸ்ரவேல் குடும்பத்தாரை கர்த்தர் சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்குவார் என்று உறுதிப்படுத்துகின்றது. ”  என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை.  என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய்த் தண்டிப்பேன்; ஆனாலும்  உன்னை நான் குற்றமில்லாமல்  நீங்கலாக விடுவதில் லையென்கிறார். ?

கர்த்தர் யாக்கோபின் சந்ததியை இரட்சிப்பேன் என்று வாக்குக் கொடுக் கிறார்.,அதாவது, தற்கால யாக்கோபின் பரம்பரையினர் — இவர்கள் இஸ்ரவேல் குடும்பத்தார் -அவர்கள் அடிமைப்பட்டதேசத்திலிருந்து விடுதலையாக்குவார். இந்த அடிமையாகுதலும், விடுதலையாக்கப்படுவதும் உண்மையானவையா?

இஸ்ரவேல் குடும்பத்தாரின் சிறையிருப்பானது உண்மையில் சிறையிருப்பல்ல என்று சிலர் விவாதிக்கின்றார்கள். ஆனால் இஸ்ரவேல் குடும்பத்தார் கிறிஸ்து மீண்டும் வரும்போது வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்ட தேசத்தில் வாழாமல் வேறு தேசத்தில் வாழ்வார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் வேதாகமம் சந்தேகமில்லாமல் சிறையிருப்பை உண்மை என்றே கூறுகின்றது.

வேதாகமம், “ஆவிக்குரிய” சிறையிருப்பைத்தான் கூறுகின்றது என்று சிலர் வாதிடுகின்றார்கள். ஆனால் எல்லா மனிதர்களும் பாவத்தினால்  பிசாசினால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்கள். இதில் சில உண்மைகள் உண்டு அதாவது சிலர் பாவம்செய்வதனால் அவர்கள் பாவத்தை விட முடியாத அளவிற்கு பிசாசு அவர்களைச் சிறைப்பிடித்துள்ளது. ஆனால் இந்த தற்கால இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா கடும்பத்தாரும்  ஆவிக்குரிய சிறையிருபில்தான் இருப்பார்கள் என்பதுதான் இதன் அர்த்தமல்ல. இதை வேதாகமத்தின் கண்னோட்டத்தில் கவனிப்போமாக.

தற்கால யூதா குடும்பத்தார் உண்மையான சிறையிருப்புக்குப் போவார்கள் என்பதைக்குறித்து திட்டவட்டமாக வேதாகம வார்த்தைகளுக்கூடாக ஏற்கனவே பார்த்துள்ளோம். சிறையிருப்பு பற்றிக் கூறும்போது இஸ்ரவேல், யூதா ஆகிய இரண்டு குடும்பத்தார் பற்றியுமே கர்த்தர் கூறுவதைக் கவனித்தோம்.

ஜெரேமியா 50 :4-5    ” அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.”

இரண்டு குடும்பத்து-தற்கால இஸ்ரவேல, யூதா–பிள்ளைகளும் ஒன்றாக மனம் திருமப்வேண்டும் என்ற மன நிலையிலும்,நோக்கத்துடனும் புதிய உடன்படிக்கைகுள் வருவார்கள், உண்மையில் இது வரப்போகின்ற நி​லமைக்கான தீர்க்கதரிசனமாகும். இது இன்னமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

எங்கிருந்து அவர்கள் வருவார்கள், ஜெரேமியா 50 ;8 தெளிவாக்க் கூறுகின்றது. ” பாபிலோனின் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள். ”  இது பழைய காலத்து பாபிலோனைப்பற்றிக்கூறவில்லை அல்லது பழைய காலத்து கல்தேயரைப்பற்றிக்கூறவில்லை. ஆனால் தற்போதைய அரசியல்,இராணுவ மாற்றங்கள்  ஐரோப்பாவில்  இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இஸ்ரவேல் குடும்தாருடையதும், யூதா குடும்பத்தாருடையதுமான சிறையிருப்பாளர்கள் தற்கால பாபிலோனிலிருந்து  இயேசு மீண்டும் வரும்போது விடுவிக்கப்ப டுவார்கள். ஜெரேமியா 3; 18 இல் கூறப்பட்டுள்ள தீர்க்க தரிசனமானது இன்னும் நிறைவேறாமல் காத்திருக்கின்றது. ” அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.  “வடதேசத்திலிருந்து” இரண்டு சந்த்தியாரும் ஒன்றாக நடந்து வருவார்கள்.

 

 

ஜெரேமியா 50; 33-34. இவ்வாறு இனி நடக்கும் நிகழ்வுகளை விளங்கப்படுத்துகின்றது.” சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள். அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப்பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.”  ( இது ஆவிக்குரிய சிறையிருப்பு என்று சொல்ல முடியாது)

 

அவர்களுடைய மீட்பர் வல்லமையுள்ளவர்.சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம். தேசத்தை இளைப்பாறப்பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.”

 

கடத்தியவர்கள், (தற்கால பாபிலோனியர்களின் அமைப்பு,;) இஸ்ரவேலர்களையும் யூதா குடும்த்தரையும்  அடிமைப்படுத்துவார்கள், அவர்கள் விடுவிக்க மறுத்து விடுவார்கள், . பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாபிலோனியர்கள் யூதாதேசத் தாரை மட்டும் சிறைப்பிடித்துச் சென்றார்கள்.ஆனால் இஸ்ரவேலர்கள் சில காலத்திற்கு முன்பாகவே அசீரியர்களினால் சிறைப்பிடிக்கப்பட் கொண்டுபோகப்பட்டார்கள். ஆனால் இயேசுக்கிறிஸ்து மீண்டும் வரும்போது இந்த இரண்டு குடும்பத்தாரையும் உண்மையான சிறையிருப்பிலிருந்து விடுவிப்பார்.

இதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமலிருப்பின் பழைய ஏற்பாட்டுத் தீர்க்க தரிசி ஆமோஸ் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்.

“கர்த்தருடைய நாள் ” எப்பொழுது ஏற்படும் என்று சரியான காலப்பகுதியை ஆமோஸ் சுட்டிக் காட்டுகின்றார். 5; 18-20. “ கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும். சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.  25ம் வசனத்தில் இஸரவேலர்களுக்கு ஆண்டவர் சொல்லுகிறார். இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?”  27 ம் வசனத்தில் விரைவில் வரப்போகின்ற “கர்த்தருடைய நாளில்” தற்கால இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு என்ன நிகழும் என்பதை விளக்குகின்றார். “ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்“.

 

திரும்பவுமாய் கர்த்தர் தற்கால இஸ்ரவேலருக்கு எதிரான எச்சரிக்கையைக் கொடுக்கின்றார். விஷேசமாக இப்பிரகாமின் கோத்திரத்தாருக்கும், மனாசே கோத்திரத்தாருக்குமாகும். ஆமோஸ் 6; 3-7 இல் இதைப் பார்க்கலாம்.  ​” தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து,  தங்கக் கட்டில் களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிக ளையும் தின்று,  தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத் தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி  பெரிய பாத்திரங்களில் மதுபான த்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள். ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்த  வர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும். ”

ஆமோஸ் ஒன்பதாம் அதிகாரத்தில் மீண்டுமாய் தற்கால இஸ்ரவேலர்கள் சிறைப்பிடி க்கப்பட்டுப் போவார்கள் என்பதை உறுதியாக்க் கூறுகின்றார்., அத்துடன் அவர்கள் தங்கள் பாவங்களுக்காக மனம்திரும்புவார்கள் என்றும் கிறிஸ்து வரும்போது விடுவிக்கப் படுவார்கள் என்றும் கூறுகின்றார். இந்த உற்சாகமளிக்கும் வார்த் தைகளைக் கவனிப்போமாக.” இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்ச ப்பழங்களை ஆலையாடுகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, பர்வத ங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்பு வேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.” (Amos 9:13–15).

இது எதிர்காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கான தீர்க்க தரிசனமாகும். அன்று தொடக்கம் இன்றுவரை இஸ்ரவேல் குடும்பம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குத் திரும்பி வரவேயில்லை . ஆனால் தங்களுடைய சிறையிருப்பிலிருந்து இந்த தேசத்திற்கு கிறிஸ்து மீண்டும் வரும்போது கொண்டுவரப்படுவார்கள்.

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட

பழைய ஏற்பாட்டு ஓசியா தீர்க்கதரிசியின் தீர்க்க தரிசனங்கள், தற்கால இப்பிரகாமின், மனாசே ஆகிய தேசங்களின் முடிவுகாலம் பற்றி இன்னுமொரு சாட்சியாக காணப் படுகின்றன. அவர் ஒசியா 9 ; 3இல் இவ்வாறு கூறுகின்றார். ” அவர்கள் (இஸ்ரவே ல்9;1) கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர்  திரும்ப எகிப்துக்குப்  போவார்கள்;  அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள்.”

இதுவரை நாம் வாசித்த பகுதிகளிலருந்து, தற்கால இரண்டு தேசங்களாகிய இஸரவே லரும், யூதாவும்,  சிறை பிடிக்கப்பட்டு கொண்டுபோகப்படுவார்கள் என்பதாகும். இஸ்ரவேல் தேசத்தின் சிறையிருக்கும் இடம், விஷேசமாக இப்ராமியருக்கு, தற்கால அசீரியாவேயாகும். அவர்கள் அங்கே அசுத்தமானதை உண்பார்கள். ஓசியா 11 ; 3, 5 என்பவைகள் இவ்வாறு கூறுகின்றன. ” நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். மனந்திரும்ப மாட்டோமென்றதினால் அவர்கள்  எகிப்து  தேசத்துக்குத்  திரும்பிப்போ வதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா.

எகிப்து என்பது  அடிமைத்தனத்திற்கு அடையாளமாகும். சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் எகிப்திற்குத் திரும்புவார்கள் என்பது, அடிமைத்தனத்திற்குள் போவார்கள் என்பதாகும். அவர்கள் திரும்பவும் எகிப்து தேசத்திற்குள் போவதில்லை என்று கூறப்பட்டு ள்து,அதாவது அவர்கள் அசீரியர் ராஜாவினால் அதாவது ” யாரேப் ராஜா”வினால் அடிமைப்படுத்தப்படுவார்கள் என்பதே அதன் பொருளாகும்.

கிறிஸ்து அவர்களை விடுவிக்க வரும்போது,அவர்கள் எங்கிருந்து வருவார்கள் என்பதை கவனித்தல் வேண்டும். “அவர்கள்( இப்போதும் இப்பிராகீம் மக்களையே குறிப்பிடுகிறது) கர்த்தரைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வரு வார்கள். எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும், அசீரியா தேசத்திலிருந்து புறாக்க ளைப் போலவும் பயந்து வருவார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘”(Hosea 11:10–11).

 

இஸ்ரவேல் குடும்பத்தாரைப்பற்றியும், யூதா குடும்பத்தாரைப்பற்றியும்  கூறப்பட்ட தீர்க்கதரிசனங்களை ஏசாயாவின் புத்தகத்தில் கவனிப்போமாக. ஏசாயாவின் கணிப்பின் பிரகாரம் பெரும் செழிப்பும் சமாதானத்திற்கும் பிற்பாடு விசாரணைக்குள் படுத்தப்படுவார்கள்.

ஏசாயா  11:11–12 குறிப்புட்டுக் கூறுவதைப்பார்ப்போம், “அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியான வர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி, ஜாதிக ளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப் பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.

கர்த்தர் எப்படி யூதா மக்களை பாபிலோனிலிருந்து திருப்பி கூட்டி வாக்குப் பண்ணப்பட்டதேசத்திற்குள் கொண்டுவந்தார் என்பதை நாம் அறிந்துள்ளோம். இஸ்ரவேலர்கள் மீண்டும் திரும்பவில்லை.திரும்பவும் கிறிஸ்து பூமிக்கு வரும்போது, இரண்டாம் விசை யூதாமக்களை மட்டும் கூட்டிச்சேர்ப்பதற்காகத் தன்கைகளை நீட்டமாட்டார், ஆனால் இஸ்ரவேலர்களையும் சிறையிருப்பிலிருந்து மீட்பார். இது இன்னமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

அனேகமான  சிறைப்பிடக்கப்ட்டவர்கள் எங்கே இருப்பார்கள் என்பதை ஏசாயா 11;16 வலியுறுத்திக் கூறுகின்றது. ” இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய ஜனத்தில் மீதியான வர்க ளுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும். ”

ஏசாயா 27 ; 13 கூறுகின்றது, கிறிஸ்து மீண்டும் வரும்போது, இஸ்ரவேல் மக்கள் அசீரியரின் தேசத்தில் அடிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். அப்பொழுது, யூதாவின் வம்சம் எகிப்து தேசத்தில் அடிமைப்பட்டிருப்பார்கள். ” அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்”.

இது உண்மையாகவே இடம் பெறுமா?

இன்றய நிலையைக் கவனிப்போமாயிருந்தால், ஐக்கிய அமெரிக்காவையும்,பெரிய பிரித்தானியாவையும்,ஐரோப்பாவினால் ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என்று சிலர் கூறலாம். ஏற்கனவே ஐரோப்பாவிடம் இந்த்த்திட்டம் இருந்தது என்பதை மறந்துவிடவேண்டாம், அனால் அந்த திட்டம் நிறைவேற கர்த்தர் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அனேக தடவைகள், ஐரோப்பாவையும, பிரித்தானி யாவையும் (ஐரோப்பா)ஜேர்மன் தாக்கியழிக்க முற்பட்டபோது,மோசமான வானிலை யைக்கர்த்தர் அனுப்பி அவர்களைப் பாதுகாத்தார். ​கர்த்தர் தன்னுடைய பாதுகாப்பை பின்வாங்கும்பொது  , இந்த நிலமைகள் தீர்க்கதரிசனத்தின் பிரகாரம் இடம்பெறும்.

கடந்தபெரும் யுத்த்த்தின்பொது, பிரித்தானியாவையும் ஐக்கிய அமெரிக்காவையும் கிட்லர் தாக்கும்போது அவரால் வெற்றி கொள்ள முடியாமல் பொய்விட்டது. காரணம் அவர்,ஐரோப்பா,ஆபிரிக்கா, ருஷ்சியா ஆகிய நாடுகளையும் சுற்றி வளைத்திருந்தார். அடுத்து இனி வரும்  யுத்தத்தின்போது ஐரோப்பா நாடுகள் யாவும் ஒன்றாக இணைந்து ருஷ்சியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கு எதிராகவும்கிழக்கிலுள்ள வல்லமையான நாடுகளுக்கு எதிராகவும் யுத்தம் செய்யும். இது நாளடைவிலேயே நடைபெறும். பிற்பாடு தற்கால ஐரோப்பிய ஒன்றியமும்,அராபிய ஒன்றியமும் இணைந்து, பிரத்தானியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் எதிராக யுத்தம் செய்து வெற்றிபெறும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கர்த்தரை அவர்கள் தள்ளிவிட்ட படியாலேதான், அவர்களுக்கு கொடுத்திருந்த பாதுகாப்பை விலக்கி கொண்டு, சாத்தான் அழிவை ஏற்படுத்துவதற்கு அனுமதியளிப்பார்.

றேம ராஜ்ஜியமானது உயிரடைந்து ஐரோப்பிய வல்லமையாக மாறிவருவதைக்கண்டு ஜனங்கள் திகைப்படைவார்கள் என்று வேதாகமம் கணிப்பிடுகிறது. ஹிட்லரின் மூன்றாம் ரீச் உலக காட்சியில் இருந்து காணாமல் போன போது, அனேகமானோர் இனி ஒரு போதும்  ஜேர்மனி உயிரடைவதில்லை என்று எண்ணினார்கள். (Klaus Fischer writes in Nazi Germany on page 560″) ஆனாலும் எதிர்கால குற்றவியல் தலமைநாடாக மாறும் என்று எண்ணினார். அவர்களுக்கு வேறு வழியில்லை, யூலை 20, 1944 இற்குப்பிற்பாடு பிசாசின் தலைவர்களைப்  பின்பற்றுவதை விட வேறுவழியில்லை.

ஐரோப்பா நரகத்தில் தொடர்ந்து இருக்காது, இது திரும்பவும் ஒரு முறை உயிர டையும். ஐரோப்பிய அமைப்பானது வெளிப்படுத்தல் புத்தகத்தில் கூறப்படும் “மிருகத்திற்கு” ஒப்பிடப்படுகின்றது. இந்த மிருகமான றோம ராஜ்ஜியமானது மீண்டு பாதாளத்திலிருந்து எழும்பி வந்து உலகத்தில் அழிவுகளை ஏற்படுத்தும்.. திரும்ப வுமாக இது தனது அசுத்த முகத்தைக் காண்பிக்கும் போது, உலகமானது திகைப்ப டையும்.

கர்த்தர் தற்கால பாபிலோனாகிய ஐரோப்பிய ஒன்றியத்தை அழிப்பதற்கு ஆசியாவின் இராணுவங் களைப் பயன்படுத்துவார். நாங்கள்  தானியேல் 11;14 இல் கிழக்கு நாடுகளின் வல்லமையைக்கான குறிப்புக்களைப் பார்க்கமுடியும்.( Dan 11:44  ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்துவரும் செய்திகள் அவனைக் கலங்கப் பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய், )

வெளிப்படுத்தல் 9 ;13 இல் ( ஆறாவது எக்காளம் ஊதும்பொது) ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது மனு ஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளு க்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.

 

அத்துடன் வெளி.16 ;12 இலும் பார்க்கலாம். ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத் தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வ வல்லமையுள்ள தேவ னுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கு ம்படிக்குப் புறப்ப ட்டுப்போகிறது. இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக் கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக் கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத் துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.

 

கர்த்தராகிய கிறிஸ்து மீண்டும் வரும்போது அவர் இஸ்ரவேலர்களையும், யூதர் களையும் சிறையிருப்பிலிருந்து விடுதலை யாக்குவார். இதுவே இரண்டு கோத் திரத்தாரும் முதன்முறையாக விடுவிக்கப்படும் நேரமாகும். ஒருமுறை அவர்கள் மீண்டுவந்து வாக்களித்த தேசத்தில் சந்தோசமாக வாழ்ந்தார்கள். கிழக்கிலிருந்து எதிர்பாராத தாக்குதல் ஏற்படும். இந்த்த் தாக்குதல் குறித்து எசேக்கியேல் 38-39ம் அதிகாரங்களில் காணலாம். இயேசுக்கிறிஸ்து வந்த பிற்பாடு இந்தத் தாக்குதல் நடைபெறும் என்பதை நாம் காணலாம். இதிலிருந்து யூதாவும், இஸரவேலர்களும் சிறையிருப்பிற்குக் கொண்டு போகப்படுவார்கள் என்ற தீர்க்கதரிசனங்கள் கிறிஸ்து வரமுதல் இடம்பெறும் என்பதையும் கிறிஸ்து வந்த பிற்பாடு அவர்களை விடுவி  ப்பார் என்பதையும் நாம் அறிய முடியும்.

எசேக்கியெல் 38; 8 ஐப் பார்பொம் ” அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,

ஐரோப்பி இராணுவம், கடைசிக் காலத்தில் இஸ்ரவேலுக்கு எதிராக எழும்பி வரும், வசனம்16 கூறுகிறது,  ” கடைசி நாட்கள்” என்பது இயேசுவின் வருகைக் காலத்தைக்குறுக்கும்   அந்த நேரத்தில், இஸ்ரவேலர்கள் அதிக மக்களிடமிருந்து ஒன்று சேர்க்கப்படுவார்கள், -அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள். வசனம் 11 ஐப் பார்ப்போம், ” உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து, நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப்போவேன்; நிர்விசாரமாய்ச் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.

.அந்த நாட்களில் இஸ்ரவேல் ஜனங்கள் மதில்கள் இல்லாமல் சந்தோசமாய் இருப்பார்கள்,அவர்களுக்கு தாழ்பாள்களோ, கதவுகளோ கிடையாது. இது அமெரிக்காவுக்குரிய விமர்ச்சனம் அல்ல, அங்கே குற்றங்கள், கொலைகள் நிறைவாகக் காணப்படுகின்றன, 12ம் வசனம் சொல்கிறது, ” நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய்ச் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய் ” இஸ்ரவேலர்கள் குடியிருந்த இடங்கள் ஜனங்கள் இல்லாமல் வீடுகள் இல்லாமலும் அழிந்த நகரமாக மாறியது, காரணம் மிருகத்தின் வல்லமையாலாகும்.

. என்னுடைய பர்வதங்களிலெல்லாம் கோக்கு(Gog) எதிராக யுத்தத்தை ஏற்படுத்துவேன்,ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சகோதரனுக்கு எதிராக யுத்தம் செய்வான்.இஸ்ரவேல் புத்திராகள் யுத்தம் செய்யாமலிருப்பார்கள், மாறாக, கோக்கும், மாகொக்கும் ஒருவரோடு ஒருவர் யுத்தம் செய்யும். .”வசனம் 22சொல்கிறது, “ கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன்.” இந்த இராணுவங்களை எதிர்கொள்ள கர்த்தர் மிகவும் இயற்கையின் செயற்பாடுகளுக்கூடாக தலையிட்டு காரியங்களை வாய்கச் செய்வார், ஆயிரம் வருஷ அரசாட்சி தொடங்கும்போது கர்த்தர்,அக்கினியினாலும்,கந்தகத்தினாலும், ஐரோப்பிய இராணுவத் தலைவனாகிய மிருகத்தை அக்கினிக்குளத்திற்குள் தள்ளிவிடுவார். இதேவிதமான அழிவுகளேமிருகத்தின் மனோநிலையில் செயற்பட்ட மாகொக்,கொக் என்பவர்களுக்கும் கிடைக்கும்,  Eze 39:3  உன் வில்லை உன் இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன் அம்புகளை வலது கையிலிருந்து விழப்பண்ணுவேன்.

என்ன விதமான ஆயுதங்கள் இங்கு விபரிக்கப்பட்டுள்ளன. இவைகள் அம்பும், வில்லுமாகும். அதாவது மரத்திலான ஆயுதங்கள். இது இயேசுக்கிறிஸ்துவின் வருகைக்குப்பின்பு சகல விதமான அதிநவீன ஆயுதங்களும் அழிக்கப்பட்டபின்னர், வில்லும் அம்பும் ஆயுதங்களாக உருவாக்கப்படுகின்றன.எசேக் 39; 9-10. இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழு வருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.  அவர்கள் வெளியிலிருந்து விறகு கொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.  .ஆயுதங்கள், ஏவுகணைகளோ அல்லது வெடிகுண்டுகளோ அல்ல, அவைகள் எரிபொருளாக சமையலுக்குப்பயனபடுத்தக்கூடியவை.

இதே போன்ற ஒத்த நிகழ்வு ஆயிரம் வருட அரசாட்சியின் முடிவிலும் இடம் பெறும். இது வெளி 20 ;7-10    Rev 20:7  அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, Rev 20:8  பூமியின் நான்கு திசைகளிலு முள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர் களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். Rev 20:9  அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத் திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. Rev 20:10  மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத் தீர்க்க தரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட் டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

நன்றி

திராணி

 

 

 

 

 

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply