கிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி

 

 

கிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி

வேதாகமத்தின் வெளிப்படுத்தல் புத்தகத்தில் 1000 வருட கிறிஸ்த்துவின் ஆட்சி இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இது உண்மையில் வெளியரங்கமான ஆட்சியா அல்லது ஆவிக்குரிய ஆட்சியா அல்லது சொல்லளவிலான ஆட்சியா என்பது குறித்து பல அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. இறையியலாளர்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மூன்று முக்கிய பிரிவுகள் காணப்படுகின்றன. அதேபோல இரண்டு சாட்சிகள் யார் என்பது குறுத்தும், “666” இலக்கத்தின் கருத்து என்ன என்பது குறித்தும், கிறிஸ்துவின் இரகசிக வருகையும் சபை எடுத்துக்கொள்ளப்படுதலும்  ( Rapture) குறித்தும் இவர்களிடையே பாரிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மிலேனியம் என்ற சொல்  லற்றின் மொழியாகும். மிலேனியம் என்ற சொல்லுக்கு ஆயிரம் வருடங்கள் என்று பொருள் கூறப்படுகின்றது.

பழைய ஏற்பாட்டுப்  புத்தகங்களில் கூறப்பட்டுள்ள மேசியாவின் பொற்கால யுகம் என்று சொல்லப்படும் காலம் இதுவென  பல கிறிஸ்த்தவர்கள் நம்புகிறார்கள். ( உதாரணமாக சங்கீதம். 72,  சங். 110, ஏசா. 2;1-2. ஏசா.11; 1-11, எசேக்.34, தானி. 2 போன்றவை )

இயேசுக் கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகைக்கான காலத்தை யும், நேரத்தையும் யாரும் அறிந்திருக்கவில்லை. இந்த விடயத்தில் ஆவிக்குரிய விளக்கங்களை சபைகள் இன்னமும் ஒரேமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை.

மிலேனியம் சம்பந்தமான  மூன்றுவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவை ஒன்றுக் வித்தியாசப்பட்டுக் காணப்படுகின்றன.

1.அமிலேனியம். Amillennialism

2. பிறிமிலேனியம் Premillennialism

3. போஸ்மிலேனியம். Postmillennialism

இங்கு மிலேனியத்திற்கு முன்பாக A, Pre, Post அர்த்தமுள்ள வார்த்தைகள் காணப்படுகின்றன்.

தமிழில் விசுவாசம் என்ற சொல்லிற்கு எதிர்ச் சொல்லாக அவிசுவாசம் என்ற சொல்லுள்ளது. இங்கு விசுவாசத்திற்கு முன்பாக “அ” என்ற எழுத்துப்பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மிலேனியம் என்ற எழுத்திற்கு முன்பாக A” சொல் பாவிக்கும் போது அமிலேனியம் என்ற சொல்வருகின்றது. அதன் அர்த்தம் ஆயிரம் வருட ஆட்சி இல்லை என்பதாகும்.

“Pre “என்ற ஆங்கிலச் சொல்லிற்கு அர்த்தம் முன்பு என்பதாகும்.மிலேனியம் என்ற சொல்லிற்கு முன்பாக பிறி என்ற சொல்லைச் சேர்க்கும் போது அது பிறிமிலேனியம் என்று பொருள்படும். பிறிமிலேனியம் என்றால் ஆயிரம் வருட ஆட்சிக்கு முன்பு என்று பொருள்படும்.

அதேபோல்Post”என்ற சொல்லிற்கு பின்பு என்ற அர்த்தமாகும். இதனை மிலேனியம் என்ற சொல்லிற்கு முன்பு சேர்க்கும் போது போஸ்மிலேனியம் என்ற சொல் உருவாகின்றது.போஸ்மிலேனியம் என்ற சொல்லிற்கான அர்த்தம் ஆயிரம் வருட ஆட்சிக்கு பின்பு எனபதே கருத்தாகும்.

இங்கு பிறி என்றும்,போஸ் என்றும் எதனைப் பற்றிக் கூறப்படுகின்றது என்ற கேள்வி உங்கள் உள்ளத்தில் எழலாம்.. இயேசுவின் 2ம் வருகையைக்குறிப்பதற்காகவே  இந்த வார்த்தைகள்  குறிப்பிடப்படுகின்றன.

இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது

Premillennialism         = ஆயிரம்வருட ஆட்சிக்கு முன்பு  இயேசுவின் வருகை இடம்பெறும்.

Postmillennialism      = ஆயிரம்வருட ஆட்சிக்கு பின்பு இயேசுவின் வருகை இடம்பெறும்.

Amillennialism       = ஆயிரம்வருட ஆட்சி இல்ல

 

பிறிலேனியம்

ஆயிரம்வருட ஆட்சி என்பது  வெளியரங்கமானது என்று பிறிமிலேனியக் கொள்கையாளர்கள் கருதுகின்றார்கள். மிலேனியத்திற்கு முன்பாக இயேசுக்கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகை இடம் பெறும்.( உபத்திரப காலத்திற்கு முன்பாக, உபத்திரப காலத்திற்கு இடையில், உபத்திரப காலத்திற்கு பிற்பாடு  இயேசு வருவார் என்ற கொள்கையை பிறிமிலேனிய கொள்கையாளர்கள் கருதுகிறார்கள், ஆனாலும் ஆயிரம் வருட ஆட்சிக்கு முன்பாக இது இடம்பெறும் என நம்புகிறார்கள்.)

 

 

இந்தக் கொள்கையாளர்கள் மத்தியில் இரண்டுவிதமான விளக்கங்கள் உண்டு.

1)    இறையியல் பிறிமிலேனிய கொள்கை;-

உபத்திரப காலத்தின் முடிவில்  அர்மகதோன் யுத்தம் இடம்பெறும், சாத்தான் மறியல்வைக்கப்படுவான், இஸ்ரவேலர்கள் மீது இயேசுவின் ஆளுகை ஆரம்பமாகும்.( 19; 19—20;6)  இந்த ஆயிரம்வருட ஆட்சிக்காலத்தில், இஸ்ரவேலர்கள் குறித்து பழைய ஏற்பாட்டில் க;றப்பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். ( ஏசாயா 2 ;4, 9;6-7, 11;6-7, 35; 5-6, 42; 1.)  மிலேனியத்தின் முடிவில் சாத்தானின் புரட்சி, கிறிஸ்துவிற்கு எதிராக  ஏற்படும், அதன் பிற்பாடு பிசாசானவன் அக்கினிக் கடலுக்குள் தள்ளப்படுவான். அதன் பிற்பாடு கர்த்தர் புதிய வானத்தையும் பூமியையும் உருவாக்குவார்.

 

 

2. சரித்திர பிறிமிலேனிய கொள்கை.உபத்திரப காலத்திற்குப் பிற்பாடு இயேசுக்கிறிஸ்த்துவின் வருகை ஏற்படும், அதன்பிற்பாடு ஆயிரம் வருட அரசாட்சி ஏற்படும். அர்மகதோன் யுத்தத்தில் கிறிஸ்து அந்திக்கிறிஸ்துவின் ஆயுத்தாரிகளை வெற்றிகொள்வார், அத்துடன் அந்திக்கிறிஸ்த்துவை கொலை செய்வார். கிறிஸ்த்து பிசாசினைத் தோற்கடித்த முதலாவது நிலை இதுவாகும். கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆயிரம் வருட ஆட்சியில் விசுவாசிகள் இணைந்து கொள்வார்கள். சாத்தான் இந்தக்காலத்தில் கட்டிவைக்கப்படுவான். கிறிஸ்த்துவின் ஆயிரம் வருட ஆட்சி உலகில் ஏற்படுத்தப்படுவதனால், இஸ்ரவேல் தேசம் இயேவின்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             பக்கமாக திரும்பும் இக் கொள்கை யாளர்கள் நம்புகிறார்கள், இதனால் பழைய ஏற்பாட்டின் அனேக தீர்க்க தரிசனங்கள் நிறைவேறும். ஆயிரம் வருட ஆட்சியில் இணைந்து கொள்வதற்காக கர்த்தருக்குள் மரித்த  விசுவாசிகள் மட்டும் உயிர்த்தெழுவார்கள் என்று சரித்திர பிறிமிலேனியக் கொள்கையாளர்கள் நம்புகிறார்கள். அயிரம்வருட அரசாட்சியின் முடிவில் மரித்த அவிசுவாசிகள் யாவரும் உயிர்த்தெழுவார்கள்—அந்நேரத்தில் அவர்கள் நியாயந்தீர்கப்படுவார்கள், அதன்முடிவில் புதிய வானமும், புதிய பூமிஙும் கர்த்தரால் உருவாக்கப்படும்.

 

 

அமிலேனியம்

இக் கொளகையுடையோர் ஆயிரம்வருட அரசாட்சி வெளியரங்கமானது அல்ல என்றும், இது கிறிஸ்த்து பரமேறிய நாள்முதல் அவரது இரண்டாம் வருகை வரும் நாட்கள் வரையான காலப்பகுதியென்றும் கூறுகின்றார்கள். அதாவது மிலேனியம் என்பது விசுவாசிகளின் இருதயத்தில் கிறிஸ்த்துவின் அரசாட்சி இடம்பெறுதல் என்றும், சபையிலும் கிறிஸ்த்துவின் ஆட்சி நடைபெறும் காலப்பகுதி என்றும் கருதுகின்றார்கள். இந்தக் காலத்தைச் சபைக் காலம் என்றும் அழைக்கின்றார்கள். இந்தக் காலம் கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகையுடன் நிறைவுபெறும் என்றும் நம்புகின்றார்கள்.. இக்கொள்யுடையோர் உபத்திரப காலம் என்பது ஒன்றும் இல்லை என்று நம்புகின்றார்கள், ஆனால் சபைக்காலத்தில் ஏற்படும் பலவிதமான உபத்திரபவங்களையே உபத்திரப காலம் என நம்புகின்றார்கள். இவர்களுடைய நம்பிக்கையின்டி வெளிப்படுத்தல் 20; 1-6 இல் கூறப்பட்டுள்ள மிலேனியம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நம்புகின்றார்கள்.

 

கடைசிக்காலம் நெருங்கும்போது,சாத்தானின் கூட்டங்கள் எல்லாம் அந்திக்கிறிஸ்த்துவுடன் இணைந்து, மிகுந்த உபத்திரபத்தை சபைக்கும் விசுவாசிகளுக்கும் ஏற்படுத்துவான்.( 2.தெச 2;1-3) பாவிகள் யாவரும் ஒன்றாய் இணைந்து தங்கள் பலத்தை அதிகரித்துக் கொண்டு, விசுவாசிகளை மேலும்மேலும் துன்ப்ப் படுத்துவார்கள்.. கிறிஸ்த்து வெளிப்படும் நாளில்மட்டுமே தீவினை முற்றுமுழுதாக நிறுத்தப்படும். ஜீவனுள்ளோரும், மரித்தவர்களும் நியாயந்தீர்க்கப்பட்ட பின்பு , கிறிஸ்த்து தன்னுடை நித்திய ராஜ்ஜியத்தை நிறுவுவார்.

 

போஸ் மிலேனியம்.

இக்கொள்கையுடையோர்  சபையினால் எற்படுத்தப்படும் சமாதான காலமே போஸ்மிலேனியக் காலம் என நம்புகிறார்கள். கடைசிக்காலத்தில் , சாத்தான் கட்டவிழ்த்து விடப்படுவான், ஆனால் அக்காலத்தில் கிறிஸ்த்து திரும்பிவந்து சாத்தானைத் தோற்கடித்துநித்திய ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவார் என நம்புகின்றார்கள்.

சபையினால் “கிறிஸ்தவமயமாக்கப்பட்ட”உலகத்திற்கு  கிறிஸ்த்து திரும்பிவருவார் என போஸ்மிலேனியக் கொள்கையுடையோர் நம்புகிறார்கள்,அதாவது ஆயிரம்வருட ஆட்சி சபையினால் உருவாக்கப்படும் என்றும், மிலேனியத்திற்குப்பிற்பாடுதான் கிறிஸ்த்து உலகத்திற்கு மீண்டும் வருவார் எனவும் நம்புகிறார்கள். சபையானது சமூகங்களை படிப்படியாக மாற்றிக்கொண்டிருக்கின்றது என நம்புகின்றார்கள்,(மத். 13;31-33). உபத்திரபகாலம் என்பது நன்மைக்கும் தீமைக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மிரண்பாடுகளே என போஸ்மிலேனியக் கொள்கையாளர்கள் நம்புகின்றார்கள். குழியிலிருந்து சாத்தான் கட்டவிழ்த்து விடப்பட்டவுடன்  மிலேனியம் முடிவிற்கு வரும் என நம்புகின்றார்கள்.அதன் பிற்பாடு கிறிஸ்த்து சகலரையும் நியாயந்தீர்ப்பதற்காக உலத்திற்கு வருவார்என்றும், அத்துடன் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உருவாக்குவார் என்றும் நம்புகின்றார்கள். உலகத்திற்கு நற்செய்தியை பரம்பும் முழப்பொறுப்பையும் சபை கொண்டுள்ளது என்று போஸ்மிலேனியக்கொள்கையாளர்கள் நம்புகின்றார்கள்.

நன்றி

திராணி.

 

You can leave a response, or trackback from your own site.

2 Responses to “கிறிஸ்த்துவின் 1000 வருட அரசாட்சி”

  1. prince says:

    nice news…thank you

Leave a Reply