கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றுதல்.

கர்த்தருக்குக் கீழ்ப்படியும்படிவேதாகம்ம் மிகச் சிறப்பாக்க் கூறுகிறது.( உபாகமம்.4:30,11:132தானி.7:27,அப்5:29) விஷேடமாகஅவருடையவார்த்தையைக்கேட்டுஅதன்படிசெய்யும்படிகேட்கிறது.( யாக். 1:22)

கர்த்தர்மேல் நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடே கீழ்ப்படிதலாகும்.(1யோவான்.2: 3-4)கர்த்தரை நாம்நேசித்தால் , அவருக்கு நாம் ஊழியம்செய்ய விரும்புவோம். அத்துடன் அவருக்கு ஊழியம்செய்யும்போது , அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய விரும்புவோம். கீழ்படிதலின்வெளிப்பாடாக, கர்த்தரை ஆழமாகநேசிக்கிறோம் என்பதன் உள்ளார்ந்த வெளிப்பாடாக , எங்களை முழுவதும் அர்ப்பணம்செய்கிறோம்.

எல்லா அதிகாரமும் அவருடைய பூரண திட்டத்தின்படி கர்த்தரிடத்திலிருந்து வருகிறதென்று உணர்ந்து எங்களுக்குமேலாக அதிகாரிகளாக கர்த்தர் ஏற்படித்தியிருக்கும் மனிதர்களுக்கும் நாங்கள் கிழ்ப்படியவேண்டும், ( எபி. 13: 7, 17. 1.பேதுரு2:13,14) அடிமைகள் எஜமானுக்கு கீழ்ப்படிகிறார்கள் (கொலோசியர் 3:22) கிறிஸ்தவர்கள் ஆலயத்தலைவர்களுக்கு கீழ்ப்படிகிறார்கள்,( 1தெச 5: 12,13. எபி 13:7) பிரஜைகள் தங்கள் அரச ஊழியர்களுக்கு கீழ்ப்படிகிறார்கள் ( எபி 13:7)

கீழ்படிதல் என்பது தன்னியக்கமாகசெயலபடும் ஒருசெயற்பாடல்ல. இது கற்றுத்தேறவேண்டியது, அத்துடன்நேர்மாறானது, நாம் இதை பிள்ளைகளுக்குப்போதிக்கவேண்டும். ( உபா. 6: 7-9) கர்தருடைய திட்டத்தின் பங்காளராகவிருக்கும் அதிகார வரிசையிலுள்ளவர்களுக்கும் கீழ்படிதல் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அபிவிருத்திசெய்வதற்கு அவசியமானது,  ஆகவே எங்களுடையசொந்த விருப்பங்களை நிறைவுசெய்வதல்ல ஆனால் சுவிஷேசத்தை மற்றவர்களுக்கு அறிவித்தலும் முக்கியமானதாகும்.

எங்களுக்குக்கொடுத்த அதிகாரங்களுக்குக் கீழ்படியும்போது, கர்த்தருடைய கட்டளைகளை உடைத்துப்பொடக்கூடாது என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும் (மேசேயின் தாய்மோசேயை ஒளித்துவைத்தல், தானியேலையும், சாத்திராக்,மேசாக், ஆபேத்நெகோ என்பவர்கள் அதிகாரிகளுக்கு கீழ்படியாமல் முற்றுமுழுதாக கர்த்தருடைய கட்ளைக்கு கீழ்ப்படிந்தார்கள்—யாத். 1:17, 2:3-10, தானி. 3: 9-26, 6: 13-22) நாங்களும்  எங்கள் அதிகாரிகளின்வேண்டுதலுக்கு நீதிநியாயத்தின் ரையறைக்குள் எங்கள்சொந்த விருப்பங்கள், முன்னுரிமை,அபிப்பிராயங்கள், அல்லது உணர்வுகளுக்கு ஏற்றபடசெயற்படாமல் கிழ்படிதல்வேண்டும்.—எங்கள் கீழ்படிதலை மதிக்கும்படியும்,எங்கள்மேலுள்ள அதிகாரிகளை வழிநடத்தும்படியும், கர்த்தருடைய விருப்பத்தின்படி அவர்கள்செயற்படும்  கர்த்தரை நம்பவேண்டும். எங்களுடைய கீழ்படிதலின் பலாபலன்கள் அவருடைய அதிகாரத்திலுள்ளது.

கர்த்தர் எங்கள் எதிரிகளிடமிருந்து விடுதலைகிடைக்கும் என்று வாக்குக்கொடுத்துள்ளார். (யாத். 23:22), பலமும், ஆசீர்வாதமும் நாங்கள் கீழ்ப்படிவதைப்பொறுத்தேயுள்ளது. மறுபக்கத்தில் பார்ப்போமாகில் கீழ்ப்படியாமை பொருளாதரம் சம்பந்தமாகவும், மனவுளைச்சல்கள்சம்பந்தமாகவும், ஆவிக்குரிய விதமாகவும்அழிவைக் கொண்டுவரும். அப்படியிருந்தும், கீழ்படியாமையானது பாவசுபாவத்தின் ஒரு பகுதியாகவும் ஒருக்கிறது, அத்துடன் எங்கள் வாழ்க்கையில் அதைத்தவிர்க்கமுடியாமலுள்ளது. இஸ்றவேலர்கள் அடிக்கடி கர்த்தருடைய சத்த்த்தைக்கேட்காமலும் அதன்படி நடக்கவும் தவறியுள்ளார்கள்.( எரேமியா 713, ஓசியா. 9:17) நாங்கள் கீழ்ப்படியாமலிருந்தால், எங்கள் கீழ்ப்படியாமை மன்னிக்கப்படக்க கூடயது என்பதை இருதயத்தில்வைத்துக்கொள்ளல்வேண்டும். தங்களுடைய கீழ்ப்படிதலை அறிக்கைசெய்து இனிமேல் கீழ்ப்படிவேன் என்று புதிய தீர்மானம்செய்பவர்களுக்கு கர்த்தர் தன்னுடைய அளவற்ற இரக்கத்தையும் மன்னிப்பையும் முற்றுமுழுவதுமாக் கொடுக்க விருப்பமுள்ளவராக இருக்கிறார்.(றோமர். 11: 30-32)

பிள்ளைகளின் கீழ்ப்படிதல்

பிள்ளைகள் தங்களுடையபெற்றோர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். இந்த உறவு கர்த்தருக்குள் இருக்கவேண்டும்.இதன் உட்பொருள் என்னவென்றால் பிள்ளைகளும்பற்றோரும் இயேசுக்கிறிஸ்துவின் அதிகாரத்திற்குள் ஜீவிக்கவேண்டும் என்பதேயாகும்.( ஏபேசியர். 6:1). இயேசுக்கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்படியாதபெற்றோர்களுக்கு பிள்ளைகள் கீழ்ப்பட்டவர்களல்ல. கர்த்தருடைய கற்பகைகளில் ( கட்டளையில்) கூறப்பட்டதுபோல் அவர்கள் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிதல் கர்த்தருடைய பார்வையிர் நீதியானது. பிள்ளைகளின் கல்வியில்பத்துக்கற்பனைகள் சிறப்பாப் போதிக்கப்படுகின்றன. தாயையும் தகப்பனையும் கனம்பண்ணு வாயாக என்பதன் அர்த்தம் அவர்ளை மதிப்பதும் உயர்வாக்க் கருதுவதுமாகும். கீழ்ப் படிந்து வாழும் வாழ்க்கை என்பது உன்வாழ்க்கை நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப் பதற்கும், உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக.( உபாகமம்5:16) தகுதியற்ற கட்டளைகள் பெற்றோர்களால் கட்டளையிடப்படும் பொழுது அர்கள்மீது பிள்ளைகள் கோபம்கொள்ளவும் வெறுப்படையவும்கூடும்,அதன்பிரகாரம் பெற்றோர் மீதுநம் பிக்கையிழக்கவும் நேரிடும் (கொலோசியர். 3:21)பெற்றோர்கள் பிள்ளைகளை நல்ல சூழலில் வளர்க்கவேண்டும், கடவுளுடைய பார்வையில் நல்ல பழக்கங்களில் பழக்கவேண்டும், தவறுகள்விடும்போதெல்லாம் சீர்திருத்தம்செய்தல்வேண்டும், அத்துடன் ஒவ்வொரு நல்ல விடயத்திற்கும் உற்சாகப்படுத்தல்வேண்டும்.

கிழ்ப்படிதலானது கர்த்தருக்கும் எங்களுக்கும் தடையற்றதும் சுதந்தரமானதுமான உறவைக்கொடுக்கின்றது.

ஆதாமும் ஏவாளும் தாங்கள் விரும் பியதைப் பெற்றுக் கொண் டார்கள் .நல்ல தையும்கெட்டதையும் அறிவைப்பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இவற்றை தீயசெயல்செய்தே( கர்த்தரின் கட்டளைளை மீறியதால்) பெற்றுக்கொண்டார்கள் ,ஆனால் அதன் பிரதிபலன் மிகவும் துக்கமானதாயிருந்த்து. சிலவேளைகளில் சுதந்திரமானது நாங்கள் எதைவேண்டுமாலும் செய்யலாம் என்ற தப்பான எண்ணத்தைக் கொண்டுள்ளோம்.ஆனால் உண்மையான சுதந்திரமும் எதைச்செய்யக்கூடாது என்ற அறிவும் கீழ்ப்படிதலினால் கிடைக்கு மென்றுகர்த்தர் சொல்லுகிறார். சிலவரையறைகளைக் கொடுப்பது எங்களுடைய நன்மைக்காவும், தீமைகளை விலக்குவதற்காகவுமே யாகும். எங்களுக்கு வாகனமொன்றிற்கு முன்னால் நடக்கும் சுதந்திரம் உண்டு, ஆனால் அதனுடன்மோதிய பின்புதான் அப்படிச்செய்தல் மடத்தனமானது என்று உணரவேண்டிய அவசியமில்லை. சாத்தானுடைய வசியத்திற்கு உட்படவேண்டாம், அதிகம் இலாபம்பெறுவதற்காக தீயவேலைகளைச் செய்யவேண்டாம்.

கவனியுங்கள், நான் ஆசீர்வாத்த்தையும், அழிவையும் , ஜீவனையும், மரணத்தையும் உங்கள் முன்வைக்கிறேன். நீங்கள் எதைத்தெரிவுசெய்வீர்கள்.? ஆசீர் வாத்த்தையா அல்லது அழிவையா? ஜீவனையா, மரணத்தையா? புத்தியுள்ளவர்களின் தெரிவு ஆசீர் வாதமும் நீவனுமாகவேயிருக்கும் அல்லவா.நான் இன்று உங்களுக்குச் செல்லுகிறேன்  கர்த்ரை நேசியுங்கள், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள், நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளுங்கள், அப்பொழுது கர்த்தர் உங்களையும் நீங்கள் சுதந்தரிக்கும்தேசத்தையும் ஆசீர்வதிப்பார்.( உபாகமம்  30: 15-16)

கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் எங்களுக்கு மிகவும் நன்மைதரும்.

கர்த்தர் தன்னுடைய கட்டளைகளைக்கைக் கொள்ளும்படியே எங்களை அழைத்திருக்கிறார், அவருடைய நியாயப்பிரமாணங்ளை எங்களுக்கு மறைக்காமல் தந்திருக்கிறார், கர்த்தருடைய நியாயப்பிரமாணங்கள் மிகவும் தெளிவாகவேதாகமத்தில் கூறப்பட்டுள்ளன.அவற்றிற்குக் கீழ்படிதல் நியாயமானது, நன்மைபயக்ககூடியவை.

கர்த்தருடைய பெட்டியை லேவியயராகிய நீங்கள் முதலில் சுமக்காதபடியினால், கர்த்தருடையகோபம் எங்கள்மீது பற்றியெரிந்தது. கர்த்தருடைய பெட்டியை சரியான முறையில் எவ்வாறு கொண்டுசெல்வது என்று கர்த்தரிடம் வினவாமலிநதோம்.( 1.நாளாகமம் 1513) ஆகவேதான் எந்தவேலையாகிலும் அதை எவ்வாறுமேற்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை நாங்கள் தேவன்னிடமிருந்து பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகும் .ஜெபம்செய்வதன் மூலம் சகலதேவைகளுக்குமான ஆலோசனைகளை நாம் கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தர் எங்களுடன் எப்படிப்பேசுகிறார் என்ற கட்டுரையில் இதுகுறித்து ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.

எங்களுக்கு விளங்காதபோதிலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்தைக்கொண் டுவரும்.

முதலில் தாவீது உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுசெல்ல முயற்சித்த போது அது தோல்லியில் முடிந்தது.(1 நாளாகம் 13: 8-14) இந்தச் சம்பவத்தின் மூலம் தாவீது மிகவும் நல்ல பாடம் கற்றுக்கொண்டான். கர்த்தர் மிகவும் குறிப்பிட்ட கட்டளைகளையிடும்போது அந்தப்பிரகாரம் செயல்படுவதேவெற்றிக்கும் ஆசீர்வாதத்திற்குமான வழிகளாகும். அவர் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து செயல் படுவதையே கர்த்தர் விரும்புகிறார்.

கர்த்தருடைய கிருபையினால் கீழ்படிதலுக்கான ஆசீர்வாதம் கிடைக்கின்றது.

ஒரு பாவியாகி கர்த்தரிடமிருந்து பிரிக்கப்பட்டவராக இருக்கும்போது அவருடைய நியாயப்பிரமாணங்கள் ஓர் ஏணியைப்போல் கீழே இருப்பதால் அதன்மீது ஏறி கர்த்தரை அடைந்துகொள்ளலாம். மீண்டும் மீண்டும் ஏறுவதற்கு முயற்சிசெய்யலாம்,கீழே விழுந்து விழுந்து எழும்பலாம், சிலவேளைகளில் இரண்டாவது படி வரைதான் நீங்கள் ஏறியிருக்கலாம். சிலவேளைகளில் கீழேயிருந்து ஏணியின் உயரத்தைப்பார்க்கும்போது ஏற முடியாமலே உங்களுக்குப் பயம் ஏற்படலாம். எது எப்படியிருந்தாலும், எந்த விதமான உதவி உனக்குத்தேவையென்று அறிந்து  , இயேசு தனது இரண்டு கரங்களையும் நீட்டி நியாயப்பிரமாணமாகிய ஏணியினூடாக உன்னைப் பிதாவாகிய தேவனிடத்திற்கு நேரடியாக  தூக்கிச்செல்வதற்கு ஆயத்தமாயிருக்கிறார். ஒருமுறை இயேசு உன்னைப் பிதாவின் சமூகத்திற்குத்     தூக்கிச் சென்று விடுவாராயின் நீ அவருடைய அன்புக்குப் பாத்திரராகுகிறாய், இது உன்னுடைய கெட்டித்தனத்தாலல்ல,தேவனுடைய வல்லமையாலாகும். இனிமேல் நீ தடுக்கி வீழ்ந்தால், நிலத்தில் விழ மாட்டாய், ஆனால் இயேசுவின் திருக்கரத்தால் தாங்கிக் காக்கப்படுவாய்.

கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் அவருக்குப் பிரியமானது.

அதிக வல்லமை இருப்பதாலும், பலபெரிய மனிதர்களின் அறிமுகம் இருப்பதாலும், முன்னேறவேண்டும் என்கிற ஆசை இருப்பதாலும்,வெற்றியும் ஆசிர்வாங்களும் கிடைக்கின்றனவென்று பலர் நினைக்கலாம். கர்த்தர்யோசுவாவுக்கு கூறிய ஆசீர் வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகள் இந்த தத்துவங்களுக்கு எதிரானதாகவு ள்ளது. யோசுவா வெற்றிகொள்வதற்கு கர்த்தர் கூறியவையாவன. – 1. கலங்காமல் திடமனதாயிருக்கவேண்டும். ஏனெனில் முன்னிருக்கும்வேலை மிகவும் கஸ்டமானது. 2) கர்த்தருடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியவேண்டும். 3) கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை தொடர்ச்சியாக்க் கற்று வரல்வேண்டும்.

நீ வெற்றியடைய விரும்பினால் யோசுவாவுக்கு கூறிய அதே தேவ வசனங்களுக்குக் கீழப்படியவேண்டும். உலகப் பார்வையிலான வெற்றியை உன்னால் பெற்றுக்கொள்ள முடியாது,ஆனால் கர்த்தருடைய பார்வையில்வெற்றிகொள்ள முடியும்.

அபிஜா மரணமானபோது, அவன் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்யப்பட்டான். அதன்பிற்பாடு அவரது மகள் ஆசா அடுத்த ராஜாவாக வந்தார். கர்தருடைய பார்வையில் நல்லதையும் கர்த்தருக்கு விருப்ப மானதையும் ஆசாசெய்தபடியால், பத்து வருடங்களுக்கு அவனதுதேசத்தில் சமாதானம் நிலவியது. ( 2 நாளா. 14: 1-2)

கர்த்தருக்கு கீழ்ப்படிதல் சமாதானத்திற்கு வழிநடத்தும்.

ஆசாவினுடைய ஆட்சியில் சமாதானம் நிலவியது,ஏனெனில்,  தன்னுடைய தேவனாகிய கர்த்தருக்கு பிரியமான விதமாகவும் அவரைப்பிரியப் படுத்தும் வகையிலும் ஆட்சிசெய்து வந்தான்.நாளாகமத்தில் இது குறித்து திரும்பத்திரும்பக் கூறப்பட்டுள்ளது,_- கர்த்தருக்கு கீழ்ப்படிதல் கர்த்தருடனும் மற்றவர்களுடனும்  சமா தானத்திற்கு வழிநடத்தும். யூத ராஜாக்களின் விடயத்தில், பல நூற்றாண்டுகளுக்கு   முன்பு கர்த்தர் வாக்களித்த்தன்படி  கர்த்தருக்குக் கீழ்படிதல் தேசிய சமாதானத்திற்கு வழிநடத்தியது, எங்களுடைய விடயங்களில், கீழ்படிதல் எங்களுடைய பகைவர்களுடன் சமாதானத்தைக் கொண்டுவராது, ஆனால் இது ஆண்டவரோடு சமாதானத்தைக் கொண்டுவரும். கர்த்தருக்கு கிழ்ப்படிதலே சமாதானத்திற்கான முதல் வழியாகும்.

கிழ்ப்படிதல் கஷ்டங்களுக்கு முகம்கொடுக்கிறது.

கர்த்தர் சொன்னபடி மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் கர்த்தர் சொன்ன செய் தியைக் கொண்டு சென்றார்கள், அதன்  பலாபலனாக கடின உழைப்பும், துன்புறுத்தலுமே எபிரேயர்களுக்கு கிடைத்த்து.நீ கர்த்தரைப்பின்பற்றுகிறாயா, ஆனால் இப்பவும் துயரப்படுகிறாயா, முன்னைய காலங்களைவிட இப்போது அதிக துயரமாகவிருக்கிறதா,? உன்னுடைய வாழ்க்கை துயரமாகவுள்ளதா, நீ கர்த்தருடைய இரக்கத்தினின்று வீழ்ந்துவிட்டதாக எண்ணவேண்டாம். தீய உலகத்தில் நீ நன்மைசெய்வதால் தயரங்களை அனுபவிக்கலாம். ஆனால் கலங்காதே கர்த்தருடைய கிருபை உன்னைத் தாங்குகிறது.

உன்னுடைய வாழ்கையில் கர்த்தருக்கு கீழ்படிவதனால் மட்டுமே ஆசீர்வாத்த்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கர்த்தருக்கும் உனக்கும் உள்ள உறவை இன் னும்  அதிகமாக்கிக்கொள்ளும் போது அவருக்குப் பிரியமான காரி யங்ளைச் செய்ய அவர் பெலன் தருவார்.உன்னுடைய பிள்ளைகளை எப்பொழுதும் கர்த்தருடைய பயத்தில் வளர்த்துக்கொள்ளுங்கள். கீழ்ப்படி வதன்மூலம் கர்த்தருடைய கிருபையை மேலும் அதிக மாகப்பெற்றுக் கொள்ளுங்கள். நிங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியும்போதுது அவருடைய அன்பைமேலும் அதிகமாகப்பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தருக்கு நீங்கள் கீழ்ப்படியும்போது அதிக சமாதானத்தை உங்கள் இருதயத்தில் பெற்றுக்கொள்வீர்கள். கர்த்தருக்குக் கீழ்ப்படிதலுக்கு சிலவேளைகளில் தடைகள் ஏற்படலாம், ஆனால் அவற்றை மேற்கொள்வதற்கான பெலன் பரத்திலிருந்து உங்களுக்கு வந்துசேரும்.

பயப்படாதிருங்கள்,கர்த்தருக்கு கீழ்ப்படியுங்கள்,கர்த்தர் உங்களோடிருக்கிறார்.

நன்றி

திராணி

You can leave a response, or trackback from your own site.

2 Responses to “கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றுதல்.”

  1. Dear Brother & Sister in Christ
    Greetings to you all ,Thank You for this precious gift. It is much usefull to beleivers like me to have a better understanding of the Lords Word.
    Thank you soo much,I will pray for this ministry may God Bless you & your Ministry.

  2. Dear Brother & Sister in Christ
    Greetings to you all ,Thank You for this precious gift. It is much usefull to beleivers like me to have a better understanding of the Lords Word.
    Thank you soo much,I will pray for this ministry may God Bless you & your Ministry.Praise The Lord

Leave a Reply