நத்தார் பண்டிகை

கிறிஸ்துவின் பிறந்த நாளை டிசமபர் 25 இல், கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டாடிவருகின்றோம். கிறிஸ்துவே  எங்கள் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி என்று அவரை அழைக்கிறோம். இந்த நாட்களில் இயேசுக்கிறிஸ்துவை  நாம் மேலும் அறிந்து கொள்ளும் வண்ணமாக இந்தக் கட்டுரையை வரைந்துள்ளேன் வாசித்துப் பயன்பெறுவீர்களாக. அனைத்து வாசகர்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்சியடைகிறேன்.

இயேசுவே  கர்த்தரிடம் செல்வதற்கான  ஒரே வழியாகும்.

யேசுக்கிறிஸ்துவிலுள்ள  விஷேசித்த அம்சம் என்ன?

கர்த்தரைக் காண்பதற்கு இயேசுகிறிஸ்துதான் ஒரே வழியாக  அமைவது ஏன்?

இயேசு சொன்னார் “ நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலே யல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்திற்கு வரான்.” (யோவான் 14:6)

அத்துடன் “ நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்” என்றார். (யோவான்.8:24). அப்போஸ்தலர் பேதுரு இவ்வாறு கூறுகிறார் “ அவராலேயல்லாமல் வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் , மனுஷருக்குள்ளே அவருடைய நாம்மேயல்லாமல் வேறொரு  நாமமும் கட்டளையிடப்படவுமில்லை” என்றான்.( அப். 4:12)

“தேவன் ஒருவரே தேவனுக்கும் மனஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே “ அவர் தான் இயேசுக்கிறிஸ்து என்று பரி. பவுல் கூறுகிறார். ( 1 திமே. 2:5) பிதாவாகிய தேவனை இயேசுக்கிறிஸ்துவிற்கூடாக மட்டுமே அறியமுடியும்.

இது இப்படி ஏன் இருக்கிறது என்பதை நாங்கள் கட்டாயம் அறியவேண்டுமாயின் ஆரம்பத்திற்குச் செல்லுதல் வேண்டும். சர்வ வல்லமையுள்ள தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.( அதி.1:1) அத்துடன் மனிதனை தனதுசொந்த சாயலாக உருவாக்கினார். (அதி.1:26) அவருடைய சிருஷ்டிப்பு நிறைவுபெற்றபோது , அவை எல்லாம் மிகவும் நன்றாயிருந்த்து. ( ஆதி. 1:31)

ஆதாமும் ஏவாளும் மிகவும் நேர்த்தியான  சூழலில் அமர்த்தப்பட்டு, அவர்களு டைய தேவைகள் அத்தனையும் சந்திக்கப்பட்டன. அவர்களுக்கு ஒரே ஒரு தடை விதிக்கப்பட்டது, “நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தின் கனியைப்புசிக்க வேண்டாம், அதைப் புசிக்கும் நாளிலே சாவாய் “( ஆதியா. 2:17) என்தாகும்.

துர்அதிஸ்டவசமாக , அந்த மரத்தின் கனியைப் புசித்தார்கள்.(ஆதி. 3) அதன் பலன் வித்தியாசமான நான்கு பகுதிகளில் வீழ்ச்சி ஏற்பட்டது.

1. இப்போது மனிதனுக்கும் கர்த்தருக்குமுள்ள உறவு முறிந்தநிலையிலுள்ளது, இதை மறைப்பதற்கு ஆதாமும் ஏவாளும் முயற்சி செய்தார்கள்.( ஆதி.3:8)

2. ஆதாமுக்கும் ஏவாளுக்குமள்ள உறவு பாதுகாக்கப்பட்டிருந்த ​ போதிலும், அவர்கள் தங்கள் குற்றத்தை ஒருவர்மீது ஒருவர் சுமத்த முனைகின்றார்கள்.( ஆதி. 3: 12,13)

3. மனிதனுக்கும் இயற்கைக்குமுள்ள உறவுகூட  முறிவடைந்தது, பூமியானது முள்ளையும் குருக்கையும் பிறப்புத்தது.

4. மிருக உலகம்  மனிதர்களுடன் ஒற்றுமை கொள்வதை நிறுத்திக் கொண்டன.( ஆதி.3: 17,18), மனிதர்களும் அவைகளைவிட்டுப் வெறுமை உணர்வுடன் பிரிந்து கொண்டான்.ஆனால் வீழ்ச்சிக்கு முன் மனிதன் அவைகளுடன் இணைந்திருந்தான்.

எப்படியோ, கர்த்தர் இவை யாவற்றையும் சரிசெய்வதற்கு மீட்பரை அல்லது மேசியாவை உலகிற்கு அனுப்புவதாக  வாக்குறிகொடுத்தார். அவர் வந்து பாவத்தின் கட்டுக்களிலிருக்கும்  உலகினை மீட்டுக் கொள்ளுவார்.( ஆதி.3:15). பழைய ஏற்பாட்டில் இந்த மீட்பின் செய்தி அதாவது மீட்பர் வந்து மனிதஉலகை மீட்டுக்கொள்வார் என்று  அடிக்கடி கூறப்படுகிறது

கர்த்தருடைய வார்த்தை உண்மையாயிற்று. இயேசுக்கிறிஸ்து என்ற மனிதவடிவில் கர்த்தர் உலகத்திற்கு வந்தார் (யோவான். 1: 14, 29). கர்த்தருடன் சரியான உறவை மீண்டும் ஏற்படுத்தும் வகையில், இயேசுக்கிறிஸ்து சிலுவையில் எங்களுக்காக மரித்தார். வேதாகமம் கூறுகிறது கர்த்தர் கிறிஸ்துவில் இருந்தார்,

“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு,  பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” 2.கொரி. 5:19,21)

இயேசு இந்த வழியை ஏற்பாடு செய்தார். இவையாவற்றையும் கர்த்தர் செய்தர், ஆனால் எங்களுடைய பொறுப்பு இதனை ஏற்றுக் ளெளுதலாகும். இயேசுவின் செய்து முடித்த வேலையோடு எதனையும் நாம் கூட்டவேண்டிய அவசியமில்லை.

ஆனால் இயேசுவின் மரணத்துடன் எங்கள் கதை முடியவில்லை. ஏன் மற்றய சமயத் தலைவர்களைவிட இயேசு முக்கியமானவர் என்பதை நாம் விளங்கிக் கொள்ளல் வேண்டும். அடர்த்தியான காட்டுக்குள் நாம் செல்வோமாயின், அதிக .தூரம் செல்வோமாயின் நாம் மீண்டும் வரமுடியாதவாறு தொலைந் தவர்களாகி விடுவோம். இவ்வாறு பாதை தெரியாமல் நாங்கள் செல்வோமாயின் எங்கள் உயிருக்கே ஆபத்து நேரிடலாம், நாங்கள் பயப்பட ஆரம்பிப்போம். எப்படியோ மிகத்தொலைவில் ஒருபாதை இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து செல்வதை காண்கிறோம்.அங்கு இரண்டு மனிதர்களைக் காணுகிறோம்.

இந்த மக்களை ஓடிச்சென்று பார்ப்போமாகில், ஒருவர் யுத்த உடையுடுத்தவராய் இருப்பதையும், அத்துடன் அவர் மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன்  நிமிர்ந்து நிற்பதையும் காணுகிறோம், ஆனால் மற்றவர் அவர் முங்குப்பற வீழ்திருக்கும் நிலையில் மரித்திருப்பதையும் பார்க்கிறோம். நாங்கள் இப்போது இவர்கள் இருவரில் யாருடம் நாங்கள்செல்லவேண்டிய வழியைக்கேட்டறிய முடியும்? நிச்சயமாக உயிருடன் இருப்பவரிடம் மட்டும்தான்கேட்கமுடியும்.

நித்ய வாழ்வுக்குரிய விடயங்களில், உயிருடன் இருப்பவரிடம் மட்டும்தான் எங்கள் இடர் பாடுசம்பந்தமாகக் கேட்க முடியும். இது மற்ற எந்த செத்த தலைவர்களிடமும் கேட்கமடியாது ஆனால் உயிருள்ள இயேசுவிடம் மட்டும்தான் கேட்கமடியும்.அவர் உயிருடன் மீண்டும் வந்தவர். இவர் மட்டுமே தேவகுமாரன் என்று அழைக்கப்படும் தகுதியைக் கொண்டிருப்பவர்.(றோமர்.1:4) இவர் மட்டுமே பிதாவுடன் தொடர்பில் இருப்பவர் எங்களுக்காக பரிந்து பேசிக்கொண்டிருப்பவர்.

இயேசுக்கிறிஸ்து

இயேசுக்கிறிஸ்து—- மனிதனாகவும்—தெய்வீகமானவராக கடவுளின் மகனாக கன்னி மரியாளிடம் பிறந்தார், இவர் பிரதான ஆசாரியனாக கடவுளின் வலது பாரிசத்திலிருந்து பரிந்து பேசுக் கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்தவ பையின் ஸ்தாபகராகவும் மனிதவர்க்கத்தின் முக்கியமானவராகவும் இருக்கிறார்.

இயேசுக்கிறுஸ்துவின் வாழ்க்கை.:- இரண்டு வகையான பெயர்கள் இயேசுக்கிறிஸ்துவில் இணைந்துள்ளன.  அவருடைய சொந்தப்பெயரான “ இயேசு” அத்துடன் பட்டப்பெயரான “ கிறிஸ்து” என்பவையாகும். .

கிறிஸ்து  என்பதன்பொருள் “ அபிஷேகிக்கப்பட்டவர்” அல்லது “மேசியா” (மீட்பர்) .என்பதாகும்.

மேசியா  என்பதன் முக்கியத்துவம் அவருடைய வாழ்க்கையில்ம் , ஊழியத்திலும் தெளிவாகத்தெரிகின்றது.

பிறப்பும் பயிற்சியும்:- இயேசு ஜெருசலேமின் தெற்கேயுள்ள பெத்தலகேம் என்னும் ஊரில் பிறந்தார். குழந்தைப்பருவத்தில் அவர் கலிலேயா ஊரின் பட்டணமாகிய  ​ நாசரேத்து என்னும் ஊருக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கே அவர் தனது தாயாராகிய மரியாளினாலும், அவளுடைய கணவனாகிய தச்சு வேலைசெய்யும் யோசேப்பினாலும் வளர்க்கப்பட்டார். இதனாலேயே அவர் “ நாசரேத்து ஊரானாகிய இயேசு” என்று அழைக்கப்பட்டார், “அல்லது யோசேப்பின் குமாரனும்  நசரேத்து ஊரானு மாகிய இயேசு” என்றும் அழைக்கப்பட்டார்.(யோவான் 1:45) இயேசு தனது தாய்க்கு முதற்குழந்தையாவார் அவருக்கு நான்கு சகோதரர்களுண்டு ( யாக்கோபு, யோசே, யூதா, சிமியோன்) அத்துடன் பெயர் குறிப்பிடப்படாத சகோதரிகளுமுண்டு( மாற்கு 6:3).யோசேப்பு ஏசுவின்  ஊழியம் தொடங்குமுன் இறந்துவிட்டதாகத் தெரிகிறது, மரியாளும் அவளுடைய குடும்பத்தின் மிகுதியானவர்கள் யாவரும் ஏசுவின் மரணத்தின்பின்பு உயித்தெழுதல் நடைபெற்ற பிற்பாடு ஜெருசலேம் தேவாலயத்தின் அங்கத்தவர்களானார்கள்.

யேசுக்கிறிஸ்துவின் ஊழிய ஆரம்பம்:- யோவான் ஸ்நானகனின் கையினால் ஸநானஸஞானம் பெற்ற பிற்பாடு யேசுக்கிறிஸ்துவின் பொதுமக்களுக்காக பகிரங்க ஊழியம் ஆரம்பமானது. யோவான் கி பி. 27-28 ஆம் ஆண்டுகளில் யோர்தான் நதியின் கீழ்க்கரையில் பிரசங்கித்து  மனம் திரும்பியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.( மத். 3: 13-17. மாற். 1: 9-11. லூக்கா. 3: 21-22.யோவான். 1: 29-34) இயேசு தண்ணீரை விட்டு வெளியேவந்தவுடன் புறா அவர்மேல்  வந்து அமர்ந்த்து.  அவரே தேவ ஆவியானவர் வந்து அமர்ந்த மக்களின் ஊழியனாகிய மேசியா என்பதற்கான அடையாளமாகும்.( ஏசா. 11:2. 42:1. 61:1)

வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி  “ நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்” என்று உரைத்த்து.( லூக்கா. 3:22) இஸ்ரவேலின் அபிஷேகிக்கப்பட்ட ராஜா  ​இவரே என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது​.(ஏசா. 421. 52:13)

இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடன் வனாந்தரத்தில் சோதனைக்குட் படுத்தப்பட்டார் என்று மத்தேயு, மாற்கு, லூக்கா சுவிஷேசங்கள் கூறுகின்றன.( மத். 4: 1-11, மாற்கு. 1: 12-13, லூக். 4: 1-13) பரலோக சத்தத்தை இந்த சோதனை உறுதிப்படுத்துகிறது, அத்துடன் அவருக்கென வைக்கப்பட்ட பாதையையும் ஏற்றுக்கொள்கிறது. அவர் தான் தேவகுமாரன் எனபதற்கான அதிகாரத்தைச் சொந்த விருப்பங்களுக்காகப் பயன்படுத்த மறுத்துவிட்டார்.

பாலஸ்தீனத்தின் வடக்குப் பக்கத்தில் யோவான் ஸ்ஞானகன் பிரங்கம் செய்து கொண்டிருக்கும் காலங்களில் இயேசு சிறிது காலமே ஊழியம் செய்தார்.(யோவான். 3: 22—4: 42).யோவான் ஏரோது அன்ரிபாஸ்சினால் சிறைப்படுத்தப்பட்ட பிற்பாடு இயேசு வின் பிரதான ஊழியம் கலிலேயாவில் வளர்ச்சிகண்டது. மாற்கு 1: 14-15 இன்படி , இது அடையாளமாக்க் காணப்பட்டது, இயேசு கலிலேயாவில் நற்செய்தியை அறிவித் தார்.” காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று, மனம்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்”. இந்த ராஜ்யத்தின் குணவியல்புகள் எவை? இது எப்படி ஸ்தாபிக்கப்படும்?

இயேசுவின் ஊழியமானது இரக்கமுடையதாகவும், பிசாசு பிடித்தவர்களையும்,சுகவீன முடையவர்களையும் சுகப்படுத்துவதாகவேயிருந்தது. இந்த செயற்பாடுகள் இறைவ னின் ராஜ்யத்தை வெளிக்காட்டுவதாக அமைந்த்து. பிசாசினால் ஆண்களுக்கும் ,பெண் களுக்கும், கொடுக்கப்பட்ட தொல்லைகள் சபிக்கப்பட்ட பிசாசின் ராஜ்யத்தை அடை யாளப்படுத்தியது. பிசாசுகள் துரத்தப்படுதல் தேவராஜ்யத்தின் வல்லமையை வெளி க்காட்டியது.

இயேசுவின் குணமாக்கும் செயற்பாடுகள் கலிலேயாவில் மிகப்பெரிய வரவேற் பைப்பெற்றது. ஆனால் சமயத் தலைவர்கள் மத்தியில் இதுபெரும் குழப்பத்தைக் கொடுத்தது. இயேசு சமயத் தலைவர்களின் கருத்துக்களை ஏற்க மறுத்தார். சமூகத்தில் கழிக்கப்பட்டவர்களின் சிநேகிதரானார். சமயத் தலைவர்களின் தடைகளுக்கப்பால், தேவனுடைய நியாயப்பிரமாணத்தை நடை முறைப்படுத்துவதில் ஆர்வங்காட்டினார். ஓய்வு நாட்களில் சுகவீனமானவர்களைக் குணப்படுத்துவதில் முனைப்பாகச் செயற் பட்டார். ஓய்வு நாட்களில் குணப்படுத்தல் தெய்வநிந்தனையல்ல என்று இயேசு நம்பினார், ஆனால் அதைக் கனம் பண்ணினார், ஏனெனில் இது மனிதர்களின் நன்மைக்காகவும் ஓய்வுக்காவும் தேவனால் உண்டாக்கப்பட்டது.( லூக். 6: 6-11)

இந்தச் செயற்பாடுகள் சமயத் தலைவர்கள் மத்தியலும் நியாயப்பிரமாணத்தைப் போதிப்பவர்கள் மத்தியிலும்  முரண்பாட்டை உருவாக்கியது,  இதனால் ஆலய ங்களில் பிரசங்கம் செய்வதற்கு இயேசுவிற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இது அவருக்கு ஒருபெரிய வசதிக்குறைவாகத் தெரியவில்லை. அவர் மலைப் பிரதே சங்க ளிலும், கடற் கரையோரங்களிலும் பெரிய கூட்டங்களைக் கூட்டினார். அவர் தனது பிரதான செய்திகளை உவமைகள் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தினார். இவைகள் மிகவும் எளிதான கதைகளாகவிருந்த படியால் மிகவும் தெளிவாக விளங்கிக் கொண் டார்கள்.

பன்னிருவரின் இறைபணியும் அதன் விளைவுகளும். :-தன்னைப் பின்தொடரும் பெரிய எண்ணிக்கையானவர்களில் 12பேரை தன்னுடைய செய்தியைக் கொடுக்கும் பணிக்காகவும் சுகமாக்கும் வேலைக்காகவும் பயிற்சி கொடுப்பதற்காக  இயேசு தெரிவு செய்தார். நேரம் சரியாக வந்தவுடன் , இயேசு அவர்களை இருவர் இருவராக யூதாவின் கலிலேயா தேசமெங்கும் தேவனுடைய ராஜ்யத்தை பிரசங்கம் பண்ண அனுப்பிவைத்தார்.

சீடர்களால் பிரசித்தம் பண்ண பட்ட தேவராஜ்யத்தை  ​கேள்ளிப்பட்ட பலர் தவறா கப்புரிந்து கொண்டனர். இவர்களுடைய  இந்த நடவடிக்கைகள், கலிலேயாவின் ஆட்சியாளரான ஏரோது அன்ரிபாஸ்சின் கவனத்திற்கு எட்டியது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்யோவான் ஸ்ஞானகனை அண்மையில் கொலை செய்திருந்தார். ஆனால் இப்போது இயேசுவின் நடவடிக்கைகள் மிகவும் பிரச்சனையாகவுள்ளதாக அவன் எண்ணினான்.

யேசுவின் போதனைகள்:- இயேசிவின் வாழ்க்கை மிகவும் பிரதானமானது போல, அவருடைய போதனைகளும் புதிதானதாகவும் புதிய நடைமுறை யுள்ளதாகவு மிருந் த்து. இயேசு பல புதிய ஆவிக்குரிய சத்தியங்களைப் பேசினார், அதனால் அவர் இதுவரையிருந்த சமயத் தலைவர்களைவிட மேலான  தலைவராக எண்ணப்பட்டார்.

தேவ ராஜ்யம்:- யோவான் ஸ்நானகனின் சிறைப்பிடிப்புக்குப் பின் கலிலேயாவில் இயேசு பேசிய செய்திகள் எல்லாம்தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றியதாகவே இருந்த்து. உயிர்த்தெழுந்த பிற்பாடு தன்னுடைய சீஷர்களுக்கு காட்சியளித்தபோதும் “தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்தேபேசினார்”. ( அப். 1:3)தேவராஜ்யத்தைக் குறித்து இயேசு எனைக் கருதினார்.?

இயேசு கடவுளின் ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று கூறியபோது,  அவருடைய ​ செய்திகளைக் கேட்பவர்களில் பலர் தானியேலின் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளை நினைவுகூர்ந்தார்கள். இந்த தீர்க்கதரிசனம் வெளிப்படுத்துவதாவது “ பரலோகத்தின் தேவன் ​என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார், அதை யாராலும் அழிக்கமுடியாது”.

இது கடவுளுடைய ராஜ்யமாகையால்  இதன் இயல்புகள் அவராலேயே தீர்மானி க்கப்படும். கடவுளுடைய வெளிப்பாடுகள் இயேசுவின் போதனையின் மையமாகும். இயேசு கர்த்தரை பிதா என அழைத்தார், தன்னுடைய சீஷர்களுக்கும் அப்படியே போதித்தார். கர்த்தரை அவர் பிதா என்று அழைப்பதற்குப் பாவித்த சொற்பதமாவது “அப்பா” (மாற்கு 14:36), அந்தசொற்பதமானது பிள்ளைகள் தங்கள் தகப்பனை அன்பாக அழைக்கும் ஒரு சொல்லாகும். கர்த்தரை எங்கள் தகப்பனே என்று அழைப்பது தவறல்ல. ஆனால் அப்பா என்று அழைப்பது அனேகமாக வழக்கத்திலில்லை. இதைக் கூறியதன் மூலம் தான் கர்த்தருக்கு மிகநெருக்கமாக இருப்பதையும் அவரை அதிகம் நம்புவதையும் வெளிக்காட்டியுள்ளார். அவர் உலகத்திலுள்ள சிறு பிள்ளைகள் தங்கள் தகப்பனிடம் உணவுக்கு, உடுப்பிற்கு, உறைவிடத்திற்கு எதிர்பார்ப்பது போல் சீஷர்கள் கர்த்தரிடம் எதிர்பார்க்க வேண்டுமென்று கற்றுக் கொடுத்தார்.

இந்த நிலமை கர்த்தருடைய ஜெபத்தில் வெளிக்காட்டப்படுகின்றது. இது இயேசுவின் போதனையின் சுருக்கமாகும். இந்த ஜெபத்தில் ​ சீஷர்கள் பிதாவின் சித்தம் நித்தியத்தில் (வரப்போகும் ராஜ்யம்) நிறைவேற்றப்பட வேண்டும் என போதிக் கப்பட்ள்ளது. நாளாந்த உணவு அவரிடம் கேட்கப்படுகிறது, பாவ மன்னிப்பு கேட்கப் படுகிறது, சோதனையிலிருந்து பாதகாப்பு கேட்கப்படுகிறது.

இது ஏழைகளிற்கு நற்செய்தி கூறப்பட்டபோதும், சுகவீனமானவர்கள் சுகமடைந்த நேரத்திலும் தெளிவாகத்தெரிந்தது, ஆனாலு அதனை முற்றுமுழுதாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. அதனாலேயே வேறு விதமாக “ உம்முடைய ராஜ்யம் வருவதாக “ என்று ஜெபம் செய்யும்படி சீஷர்களுக்கு  கற்றுக் கொடுத்தார்.( மத். 610). ஒரு நாள் அவர் இது பலத்தோடே வரும் என்றும் உங்களில் சிர் இதைப் பார்ப்பீர்கள் என்றும் சொன்னார்.( மாற்.9:1)

இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் கர்த்தருடைய ராஜ்யத்தை முழு வல்லமையோடு கொண்டுவந்தது. யூதாவிலும் கலிலேயாவிலும் இயேசுவின் ஊழியத்தினால் அனேகர் தேவனுடைய ராஜ்யத்தின் விடுதலையையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.

ராஜ்யத்திற்கான வழி :- இயேசுவின் நீதிநெறிப் போதனையானது தேவராஜ் யத்தின் ஒரு பகுதியாகவிருந்தது. ​ அவருடைய மரணத்தினாலும் உயிர்தெழு தலினாலுமே தெய்வீக ஆளுகை ஸ்தாபிக்கப்பட்டது. இயேசுவின் ஊழியக் கால ங்களில் தேவனுடைய ராஜ்யம் ஆரம்ப நிலையிலிருந்தது. இதன் கொள்கைகள் விசுவாசிகளின் செயற்பாட்டிலேயே தங்கியிருந்தன. மிகவும் அறிமுமான கொள்கை விளக்கங்களை மலைப்பிரசங்கத்தில் காணலாம்.( மத். 5-7), இது அவருடைய சீஷர்களுக்காக கூறப்பட்டவையாகும். இந்த ராஜ்யத்தின் பிள்ளைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று இதில் கூறப்பட்டுள்ளன

மோசேயின் நியாயப்பிரமாணமும் இயேசுவும்.:- இயேசு போதித்த போதனைகள் பழைய ஏற்பாட்டு நியாயப் பிரமாணத்திலுள்ளவையாகும். ஆனால் மேலும் வாய்மூல மொழி பெயர்ப்பும் செயற்பாடுகளும் நூற்றாண்டு காலமாக மோசேயின் நியாயப் பிரமாணத்தில் வளர்ந்து வந்தது.​ நியாயப் பிரமாணத்தை அழிக்கவல்ல நிறை வேற் றவே வந்தேன் என்று  இயேசு சொன்னார். ( மத். 5:17). ஆனால் அவர் இதைச் சுருக்கி இரண்டுபெரிய கட்டளையாக்க் கூறியுள்ளார். ”உன்தேவாகிய  கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன்முழு  ஆத்துமாவோடும், உன்முழுப்பலத் தோடும் அன்பு கூருவாயாக” ( உபா. 6:5)  அத்துடன் “ உன்னில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிலும் அன்பு கூருவாயாக” லேவி. 19:18)  “ இந்த இரண்டு கட்டளைகளிலும் நியாயப் பிரமா ணங்கள் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” என்றார்.(மத்.22:40)

இயேசு தன்னுடைய நீதிப்போதனைகளுக்கு தனித்தன்மையைக் கோரவில்லை .அவருடைய நோகத்தில் ஒன்று என்ன வென்றால் கர்த்தருடைய நியாயப் பிரமா ணத்தை நன்கு விளங்கப் படுத்துவதாகும். ஆனாலும் அவருடைய போதனையில் ஒரு புத்துணர்ச்சி காணப்பட்டது.அவர் தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்தினார்.” நீங்கள் இவற்றைக் கேள்விப்பட்டிருக்கலாம்…… ஆனால் நான் உங்களுக்குச் சொல்லு கிறேன்” ( மத்.5: 21-22) அவருடைய வார்த்தைகளைக் கவனித்து அதன்படி செய்கிற வர்கள் மாத்திரமே தங்கள் வாழ்க்கைக்கு நல்ல அத்திவாரமிட்ட வர்களாவார்கள்.( மத் 7: 24-27: லூக் 6: 46-49)

கிறிஸ்துவின் ஆள்தத்துவம்.:- கிறுஸ்த்து என்ற மனிதனின் கொள்கைகள், அல்லது

கிறிஸ்து இயல், என்பது கிறிஸ்து என்ற மனிதனைப் பற்றி வேதாகமத்தில் காணப்ப டும்  பெயர்கள் பற்றிய கண்ணோட்டமாகும்.

இயேசு இந்தப்பெயரை மூன்றுவிதமான எளிதான வழிகளில் பயன்படுத்தினார்.

முதலாவது,பொதுவான வழியில் இந்தப் பெயரைப் பாவித்தார். நான் என்றதற்குப் பதிலாக மனிதகுமாரன் என்று பாவித்தார். யோவான் ஸ்நானகன் உலகில்வந்தார் ஆனால் அவர் அப்பமோ ரசமோ குடிக்காமல் வாழ்ந்தார், ஆனால் இயேசுக்கிறிஸ்து அப்பமும் இரசமும் குடித்தார்,(லூக் 7: 33-34) இந்த இருவருக்குமிடையிலுள்ள வித்தி யாசத்தைக் காண்பிக்கவே மனிதகுமாரன் என்ற பெயரைப் பாவித்தார். இன்னுமொரு நல்ல உதாரணம் என்னவென்றால், “மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க இடமில்லை என்றார்”( லூக்கா. 9:58). இதை ஏன் கூறினார் என்றால் தன்னுடைய சீஷர்களை எச்சரிப்பதற்காக அதாவது தன்னுடைய வீடில்லாத அனுபவத்தை அவர்களும் அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.

இரண்டாவது, இயேசு இந்தப் பெயரைப் பாவித்த்தற்கான காரணம் “ மனுஷ குமாரன்  பாடுகள் படவேண்டும்” என்பதை வலியுறுத்து வதற்காகவேயாகும்.

பாடுபடல்வேண்டும் என்பது தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டவையாகும். இது உண்மையிலேயே மனுஷகுமாரனைப் பற்றியே எழுதப்பட்டவையாகும், அதாவது அவர் அனேக பாடுகள் பட்டு அவமதிக்கப்படுவார்( மாற். 9:12) ஆகவே  இயேசு தன்னுடைய கடைசி இராப்போசனத்தில் தன்னைக் காட்டிக் கொடுப்பவன் இங்கே இருக்கிறான் என்று வெளிப்படுத்தினார்., “மனுஷகுமாரன் தன்னைப்பற்றி எழுதப்பட்டபிரகாரமே சென்றார்”( மாற். 1421) பின்பு , அன்று மாலையே அவர் தன்னைப் பிடிக்கவந்தவர்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்து ”வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்”( மாற்கு 14:49)

கடைசியாக, தனக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பிரயோசனப் படுத்துவதற்காக “மனுஷகுமாரன்” என்ற பதத்தைப் பயன்படுத்தினார்.” “மனுஷகுமாரனுக்கு உலகத்தில் பாவங்களை மன்னிப்பதற்கு வல்லமை (அதிகாரம்) உண்டு” (மாற்கு. 210) என்று கூறினார். பலர் தன்னைப்பற்றி விமர்ச்சிக்கத் தக்கதாக இந்த கர்த்தருடைய வல்லமயைப் பயன்படுத்தினார்.” “மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கு ஆண்டவராய் இருக்கிறார்” என்றார்.( மாற்கு. 2:28)

மனுஷகுமாரன்  மனிதவர்க்கத்தின் பிரதிநிதியாகத் தோன்றி பேசியும் ​செயற்பாடு களைச் செய்துமிருந்தார். கர்த்தர் தனதுகைகளின் கிரிகைகளை ஜனங்களின் ஆளுகைக்குக் கொடுத்திருந்ததால், அந்த ஆளுகையை மனுஷகுமாரன் மூலம் செயற்படுத்தினார்.

அவருடைய ஊழியத்தின் முடிவின் போது, இயேசு தன்னுடைய அதிகாரத்தில் பேசினார். ஆண்களும் பெண்களும், மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையே​டும் மேகங்களின் மேல் வருகிறதைக்  காண்பார்கள்( மாற் 1326). அவர் பிரதான ஆசாரியனையும் மற்றும் அங்கத்தவர்களையும் பார்த்து “ மனுஷகுமாரன் சர்வ்வல்லவரின் வலதுபாரிசத்தில்  வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.( மாற்கு 14:62), அவர் அவமானப் படுத்தப்ட்டவராகவும் கைவிடப்பட்டவராகவும் அவர்களுடைய தீர்ப்புக்காகக்  காத்திருந்தார். ஆனால் கர்த்தர் அவரை உலகத்தின் ஆளுனராகவும் நியாயாதிபதியாகவும் காண்பித்தார்.

இயேசுவைத் தவிர மற்றவர்கள் ஒருமுறை மட்டும்தான் மனுஷகுமாரன் என்று சொன்னார்கள். ஸ்தேவான் யூதசங்கத்தாரைப்பார்த்து “ அதோ வானங்கள் திறந்திருக் கிறதையும் மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான். ( அப். 7:56). ஸ்தேவானுடைய தரிசனத்தில் மனுஷகுமாரன் பரலோத்தில் பரிந்துபேசுபவராக கண்டான், “ மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ , அவனை தேவதூதர் முன்பாக   மனுஷகுமாரன் அறிக்கைபண்ணுவார்” என்றார்.(லூக். 12: 8),

மேசியா( மீட்பர்):- இயேசு, பிரதான ஆசாரியனுக்கு முன்பாகவும் தன்னுடைய ஊழியக்கார்ருக்கு முன்பாகவும் கேள்விகளுக்கு விடையளித்ததாவது, “நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய  குமாரனாகிய கிறுஸ்துதானா? ( மாற். 14: 61) என்று கேட்டால் , அதற்கு அவர் “ நான் அவர் தான்” என்று பதிலளித்தார்.( மாற். 14:62). “ நீ சொன்ன படிதான்” என்றார். ( மத். 26:64)

கிறிஸ்துவே மேசியாவாகிய , தாவீதின் குமாரனாகும்:- தாவீதின் அரசகுடும்பத்தின் அங்கத்தவர். பல நூற்றாண்டு காலமாக, இஸ்ரவேலின் எதிர்காலத்தை வளப்படுத் துவதற்கு வருவார் என யூதமக்களால் எதிர்பார்க்கப்பட்ட மேசியா இவராகும் , இவர் இஸ்ரவேல் தேசத்தை வெளிநாடுகளின் ஆதிக்கங்களிலிருந்து பாதுகாத்து புற ஜாதிகள்மீது தனது அரசை விஸ்தரிப்பவராக எதிர்பார்க்கப்பட்டவராகும்.

இயேசு தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவரவார. . இவர் தாவீதின் வம்சத்தில் மேசியாவாக  அவரது பிறப்பிற்கு முன்பும், உயிர்தெழுதலுக்குப பின்பும் எதிர்பார்க் கப்பட்டவராகும். ஆனால்  அவர் தான் மேசியாதான் என்பதை ஏற்றுக் கொள்வதில் தாமதங்காட்டினார். மேசியாவைப்பற்றிய  யூதர்களின் எதிர்பார்பு அவருடைய ஊழியத்திலும், நடத்தையிலும் வித்தியாசமாகவிருந்த்து. அதனால் அவர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்க மறுத்துவந்தார்.

சிசேரியாபட்டணத்தில்,பேதுரு, இயேசுதான் மேசியா என்று அறிக்கைசெய்தான், அப்பொழுது, இயேசு அவனையும் ,மற்ற சீஷர்களுக்கும் தான் கிறிஸ்து என்று யாருக்கும் சொல்ல வேண்டமென்று கட்டளையிட்டார். அவர் மரித்து உயிர்த்தெ ழுந்த பின்பு, எப்படியோ அவர்தான் கிறிஸ்து என்ற  எண்ணக்கரு எல்லார் மத்தி யிலும்  அவர் செய்த காரியங்கள் மூலம் உருவாகிற்று. பின்பு அவர் தான்மேசியா என்பதையும், அபிசேகம் பண்ணப்பட்ட ராஜ என்பதையும்,  மகிமையில் உயித்தெழுந்து உலகத்தின் சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்பதையும் மிகவும் அமைதியான முறையில் ஏற்றுக் கொண்டார்.

தேவ குமாரன்:- இயேசு, அவரது ஞானஸ்நானத்தின் போது மனுஷகுமாரன் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார்.(மாற். 1:11). இவ்வாறே கபிறியல் தூதன் தனது அறிவிப்பின் போதும் மரியாளுக்கு  கூறினார் ” பரிசுத்த ஆவி உன்மேல்வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும்” ( லூக். 135).யோவான் சுவிசேஷம் இதனை பிதா-குமாரன் தொடர்பு நித்தியத்திற்குரியது என்று சிறப்பாக கூறுகிறது—அதாவது குமாரனே தகப்பனை வெளிப்படுத்தும் தகுதியுடையவர் அதாவது பிதாவின் மடியிலிருக்கிற குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.(யோவான். 1: 18)

ஒரு சந்தர்ப்பத்தில் “தேவகுமாரன்” என்ற சொல் மேசியாவிற்கே உரியது, அவர் இஸ்ரவேல் ​தேசத்திற்கான பெயரைப் பெற்றுக் கொண்டவர், “ இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என்சேஷ்டபுத்திரன்”  என்று கர்த்தர் பார்வோனுக்கு கூறினார்.) யாத். 4:22) தாவீதின் வீட்டில் அவன் வாக்குத் தத்தம் செய்யப்பட்ட ராஜ என்று கர்த்தர் கூறினார், “ அவனை என்னுடைய முதற் குமாரனாக்குவேன்” என்று சங்கீதக்காரன்  கூறுகிறான். ( நங். 89: 27)

அவர் தன்னுடைய சீஷர்களுக்கு கர்த்தரைப்பற்றிச் சிந்திக்கவும் அரைப் பிதா என்று கூறி பேசும்படியும் கற்பித்தார். அவர் தன்னைப பிதா என்று அழைக்கும்படி கற்பிக்கவில்லை. ஆனால் உங்களுடையதும் என்னுடைய பிதாவும் என்று கற்பித்தார். யோவான் 20: 17 இல் அவருடைய வார்த்தையில் சத்தியம் வெளிப்பட்டது, “என்னுடைய பிதாவும் உங்களுடைய பிதாவும், ….. என்னுடைய தேவனும் உங்களுடைய தேவனும் என்று கற்பித்தார்.

தேவகுமாரன் விசேசித்த விதமாக முறையில், தன்னை  அப்போஸ்தலர் பவுலுக்கு டமாஸ்கஸ் செல்லும்வழியில் வெளிப்படுத்தினார். “தம்முடைய குமாரனை நான் புற ஜாதிகளிடத்தில் சுவிஷேசமாய்  அறிக்கும் பொருட்டாக  அவரை எனக்குள் வெளிப்படுத்த  பிரியமாயிருந்தபோத…….. ( கலாத் 1:15-16). பவுலுடைய பிரதான செய்தியானது இயேசுக்கிறிஸ்து தேவ குமாரன் என்பதாகவேயிருந்த்து ( அப். 9:20.,  2:கொரி. 1:19).

புதிய ஏற்பாட்டில் இயேசு தேவகுமாரன் என்று வெளிப்படுத்தப்படுவதற்கு இரண்டு காரணங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன, கர்த்தர் தன்னுடைய நித்திய பிதா என்ற தொடர்பும், மனிதவர்க்கத்திற்கு  பிதாவை பூரணமாக வெளிப்படுத்திமையுமாகும்.

வார்த்தையும் ஞானமும்.:- இயேசு கரத்தருடைய வார்த்தையாய் இருந்தார் என்று பூரணமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.(யோவான். 1:1-18) வார்தையே கர்த்தருடைய சொந்த வெளிப்பாடாகவிருந்த்து. சொந்த வெளிப்பாடானது தனிப்பட்ட நிலையாயிருந்தது, கர்த்தருடன் நித்தியமாயிருந்தது.  ​வார்த்தையினாலேயே  கர்த்தர் உலகத்தை உருவாக்கினார். (சங். 33:6) வார்த்தைக்கூடாவே  அவர் தீர்க்கதரிசிகளோடு பேசினார், “அந்த வார்த்தை மாம்சமாகியது”(யோவான் 1:14) நமக்குள்ளே வாசம்பண்ணியது.

பழைய ஏற்பாட்டில் வார்த்தைக்குப் பதிலாக கர்த்தருடைய ஞானம் என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது.”கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தினார்”  ( நீதி. 3: 19). புதிய ஏற்பாட்டில் கர்த்தருடைய சொந்த ஞானமாக கிறிஸ்து காட்டப்படுகின்றார்( 1கொரி. 1:24, 30-31), அவருக்கூடாகவே சகலமும் உருவாக்கப்பட்டது. (1.கொரி. 8:6, கொலோ. 1:16,  எபிரே 1:2).

தேவனுடைய பரிசுத்தமானவர்.:- பேதுரு​வால் இயேசுவிற்கு இந்த பட்டம் கொடுக் கப்பட்டது.(யோவான் 6:69) அத்துடன் பிசாசு பிடித்த மனிதனால்  இவ்வாற ழைக்கப்பட்டான்.( மாற்கு 1:24). அப்போஸ்தலர்கள் தங்களுடைய பிரசங்க வேளைக ளில் இயேசுவை “ பரிசுத்தமாவர் என்றும் நீதியுள்ளவர் “ என்றும் கூறினார்கள்.( அப். 3:14). மேசியா  என்பவருக்கு இந்தப்பெயரும் உரியது, ஏனெனில் இவர் கர்த்தருக் காகவேறு பிரிக்கப்பட்டவர். பிதாவின் சித்தத்தை செய்வதற்கான அவருடைய பிரதிஸ்டையையும் அவருடைய நல்ல குணாம்சங்களையும் வலியுறுத்திக் கூறுகிறது. இவரிடம் எந்தப் பாவமும் இருந்த்தில்லை.

கர்த்தர்:- “ இயேசுவே கர்த்தர் ”. இதுவே கிறிஸ்தவர்களின் கொள்கை.” பரிசுத்த ஆவியினாலேயன்றி ஒருவனும் இயேசுவைக் கர்த்தர் என்றுசொல்ல மாட்டான்.( 1கொரி. 12:3) அதனாலேயே  கிறிஸ்தவர்கள் இயேசுவைக் கர்த்தர் என்று அறிக்கை செய்கிறார்கள். இயேசுவை  கர்த்தரென்று புதிய ஏற்பாட்டில் பல தடவைகள் குறிப்பிடப்ப டுகின்றது.

உயிர்தெழுந்து பரமேறியபின், இயேசுவிற்கு “ கர்த்தர்” என்றசொல் பயன்படுத்தப் படுகின்றது. பென்தகோஸ்தே நாளில்ஜெருசலேமில் கூடியிருந்த மக்களைப்பார்த்து பேதுரு இவ்வாறு கூறினார்: “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவை தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்.”( அப். 2:36)

கிறிஸ்துவின் செயற்பாடுகள் :- தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், ராஜா வாகவும்  மூன்றுவிதமான ஊழியங்களும் கிறிஸ்துவினால் மேற்கொள்ளப் பட்டன.

தீர்க்கதரிசியாக , அவர் கர்த்தருடைய பூரண பேச்சாளராகவும் கர்த்தருடைய சித்தத்தையும், குனாம்சங்களையும் உலகத்தாருக்கு வெளிப்படுத் துபவராக இருந்தார்.

ஆசாரியனாக, உலகத்தின் பாவத்திற்காக பூரணபலியாக தன்னை மரணத்திற்கு ஒப்புவித்தார். தன்னுடைய மக்களுக்காக பரிந்துபேசுபவராகவும் இருக்கின்றார்.

ராஜவாக, “அவரே உலகத்தின் ராஜா” (வெளி.1:5) அவர் முழு உலகத்திற்கும் ரஜாவானவர்.

கிறிஸ்துவின் செயற்பாடுகள் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என்பவற் றிற்குப் பொருத்தமானது

கிறிஸ்துவினால் பூரணமாக்கப்பட்டவேலை.:- அவருடைய சிலுவை மரணத் தினால் மனிதவர்க்கத்திற்கு பாவமன்னிப்பு பூரணமாக் கொடுக்கப்பட்டது, இது மிகவும் பூரணமான செயற்பாடாகும். இந்தச் செயற்பாட்டினால் இயேசுவை “ உலகத்தின் மீட்பர்” என்றும் (1யோவான் 4:14) “ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்ததேவ ஆட்டுக்குட்டி என்றும் கூறுகிறார்கள்.(யோவான் 1:29).

வேதாகமத்தில் பாவத்தை பல முறைகளில் பார்க்கிறார்கள்:

 • கர்த்தருக்கு விரோதமான குற்றமாகவும்,
 • மன்னிக்கப்படவேண்டிய குற்றமாகவும்,
 • பரிசுத்தம் செய்யப்படவேண்டிய குற்றமாகவும்
 • அடிமைத்தனக் குற்றமாகவும்
 • விடுதலைசெய்யப்படவேண்டிய குற்றமாகவும்
 • நட்பைக் கெடுத்த குற்றமாகவும்

இவைகள் யாவும் சமரசம்செய்து சரிசெய்யப்பட வேண்டியவையாகும். எப்படிப்பட்ட குற்றமாயினும் அவை இயேசுக்கிறிஸ்துவின்  கிரியையினால் சரிசெய்யப்படும்.

 • அவரினால் பாவமன்னிப்பு செய்யப்பட்டுள்ளது,
 • பரிசுத்தம்செய்யப்பட்டுள்ளது,
 • விடுதலை கொடுக்கப்பட்டுள்ளது​,
 • ரத்துச் செய்யப் பட்டுள்ளது,
 • வெற்றி கொடுக்கப் பட்டுள்ளது,
 • சமரசம்செய்யப்பட்டுள்ளது

பாவமானது கர்த்தருக்கு விரோதமானது எனக்கருதப்படுகிறது, இது நியாயப்பிரமா ணத்தை மீறுதல் எனவும் கருதப்படும். கர்த்தருடைய நியாயப் பிரமாணமானது ,பொதுவான சட்டங்கள் போன்றதாகும், இதில் சட்டத்தை மீறுபவர்  குற்றம் சுமத்தப்படுவார். இதில் சட்டத்தை மீறுபவர் எந்தவிதத்திலும் தப்பவே முடியாது,

கிறிஸ்த்துவின் நிகழ்காலசெயற்பாடு:- கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் “எல்லாம் முடிந்த்து” என்றும் பின் உயிர்த்தெழுந்து பரத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு நிகழ்காலசெயற்பாடானது ஆரம்பமாகின்றது.

 1. 1. அவருடைய முதலாவது பகுதியாக பரிசுத்த ஆவியானவரை தனது மக்களுக்குள் ஜீவிப்பதற்காக அனுப்பிவைப்பதாகும்.

மேலறையில் தன்னுடைய சீஷர்களைப்பார்த்கூறினார் “ நான் போகிறது உங்களுக்குப் பியோசனமாயிருக்கும், நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான்போவேனாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். (யோவான். 16:7)பென்தகோத்து நாளிலே பேதுரு இந்த வாக்குத்  தத்தம் நிறைவுபெற்றது என்று கூறினார். “ அவர் தேவனுடைய வலதுகரத்தினால் உயர்த்தப்பட்டு , பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப்பெற்று , நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழுந்தருளினார்.” ( அப். 2:33)

பரிசுத்த ஆவியின்  வாக்குத்தத்தம் பற்றி யோவான்ஸ்நானகனால் முன்பு கூறப்பட்டிருந்தது.” எனக்குப்பின் ஒருவர் வருகிறார், என்னில் பார்க்கவும் அவர் பெரியவர், அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்” ( மாற்.1:8)

 1. இயேசுக்கிறிஸ்துவின் நிகழ்கால செயற்பாடானது பரிந்துபேசுதலாகும் . பரிசுத்த பவுல் ரோமருக்கு எழுதும் நிருபத்துல் “கிறிஸ்துவே  மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறார், அவரே தேவனுடைய வலது பாரிசத்திலுமிருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.” (ரோமர் 8:34) எபிரேய நிருபத்தை எழுதியவர் சொல்லுகியார் “ தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால், அவர்களை முற்றுமுடிய  இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபிரேயர். 7:25) பிரதான  ஆசாரியராகிய  இயேசுவுக்கு இருக்கும் விஷேசித்த தன்மையை இங்கு காணுகி றோம்.

தம்முடைய ஜனங்களின் பிரதிநிதியாக கர்த்தரோடு இயேசு இருந்து தம்முடைய மக்களின் ஆவிக்குரிய வேண்டுதல்களைக் கேட்டு அவற்றிற்கு பதிலளிக்கிறார்.அவர் தன்னை விசுவாசிப்பவர்களுள்கு ஓர் வல்லமையான  ஒத்தாசை புரிபவராக இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

சங்கீதம் 110:1 “நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்றார்” இந்த வார்த்தை புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நிறைவேறியுள்ளது. கிறிஸ்து உயர்த்தப்பட்ட இடத்திலிருந்தே  தனது எதிரிகள் அகற்றப்படும் வரை ஆளுகைசெய்தல் வேண்டும் என்று பொருள்படுகின்றது. அந்த எதிரிகள் ஆவிக்குரிய உலகத்திற்குரியவர்கள். “ பரிகரிக்கப்படும் கடைசிச் சத்துரு மரணமே: ( 1கொரி. 15:26) இயேசுக்கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் போது மரணத்திற்கு அழிவு ஏற்பட்டது.

கிறிஸ்துவின் எதிர்காலச்செயற்பாடு:- உலகத்தில் ஊழியம்செய்து கொண்டிருக்கும் காலத்தில், இதைவிட பெரிய வேலை  எதிர்காலத்தில் செய்ய வேண்டியிருக்கிறது என்று  இயேசு சொன்னார். அவர் விஷேசமாக  இரண்டு வேலைகள் பற்றிக் கூறினார்.

 1. மரித் தோரை உயிர்தெழச் செய்தல்
 2. அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்புச் செய்தல்.

உயிர்த்தெழச் செய்தலும் நியாயத்தீர்ப்புச்செய்வதும் கர்த்தருடைய விஷேசித்த  அதிகாரம்கொண்டவையாகும். இந்த  இரண்டு வேலைகளையும் கடைசிக்காலத்தில் குமாரனாகிய  இயேசு நிறை வேற்றுவார், தேவகுமாரனை விசுவாசித்து ஆவிக்குரிய மரணத்தையடைந்த  அத்தனைபேர்களும் புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்வார்கள்.

இயேசுக் கிறிஸ்துவின்  இரண்டாம் வருகையின்போது உயித்தெழுதலும் நியாயத் தீர்ப்பும் நடைபெறும். எல்லா ஜீவன்களும் அந்த நாளுக்காக காத்திருக்கும் ஏனென்றால் அவை “ அடிமைத்தனத்திலிருந்து விதலையாக்கப்பட்டு ,தேவனுடைய பிள்ளைக்குரிய மகிமையான சுயாதீனத்தைப்பெற்றுக் கொள்ளும்” என்ற நம்பிக்கையாகும்..(றோமர் 8:20)

நிகழ்காலவேலையும் எதிர்காலவேலையாகிய இரண்டும் “ எல்லாம் முடிந்தது” என்ற அவருடைய வேலைத்திட்டத்திலேயே தங்கியுள்ளது. “ எல்லாம் முடிந்தது” என்ற வேலையானது தனது மக்களின் “ நல்ல வேலையின்” ஆரம்பமாகும். கிறிஸ்து வரும்வரை இந்தவேலை தொடர்ந்து கொண்டேயிருக்கும் (பிலி. 1:5-6) அப்பொழுது முழு உலகமும் இயேசுவில் ஐக்கியப்பட்டிருக்கும்.( எபேசி 1:9-10)

இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.

கிறிஸ்துவிற்குள் ஜீவித்து அவருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஆயத்தப்படுவோமாக

கிறிஸ்துவிற்குள் அன்பான

திராணி.

You can leave a response, or trackback from your own site.

5 Responses to “நத்தார் பண்டிகை”

 1. Bro, your mesage as be very use full and blesing me,thank for god and you.

 2. JOHN BRITTO says:

  ITS VERY WONDERFUL MESSAGE BROTHER…. OVERALL YOU COMPRESSED EVERY THING IN THE BIBLE… THANK U FOR YOUR MESSAGE… PRAISE THE LORD

 3. Mara says:

  could you send me ur christian biblestudy updates pls

 4. சார்லஸ் says:

  ‘கிருஸ்துமஸ்’ தினத்தை ஏன் ‘நத்தார்’ என அழைக்கின்றனர்?

  ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்

  இலங்கைத் தமிழர்கள் ‘கிருஸ்துமஸ்’ தினத்தை ஏன் ‘நத்தார்’ என அழைக்கின்றனர்?

  மேலேயுள்ள கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்லி விட முடியும். இருப்பினும் எமது தமிழ்நாட்டு உறவுகளுக்கும், ஈழத்தில் பிறந்து வளர்ந்தாலும் காரணம் அறியாமல் ஒரே சொல்லைச் சொல்லிக் கொண்டிருக்கும் எனது தாயக உறவுகளுக்கும், புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கும் ஒரு சிறிய புரிதலை ஏற்படுத்துவதே எனது இந்தச் சிறிய பகிர்வின் நோக்கமாகும்.

  கடந்த சில தினங்களாக முகநூலிலும், இணையங்களிலும் ஒருவருக்கொருவர் ‘கிறிஸ்துமஸ்’ வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். முகநூலில் எமது இலங்கைத் தமிழ் மக்கள் ‘கிருஸ்துமஸ்’ வாழ்த்துத் தெரிவிக்கும்போது “இனிய நத்தார் வாழ்த்துக்கள்” என்று எழுதியதைப் பார்த்துப் பல வருட காலமாகத் தமிழக உறவுகள் சிறிது குழப்பம் அடைய நேர்ந்திருக்கலாம். அது என்ன ‘நத்தார்’ வாழ்த்துக்கள்? என்று சிறிது ஆச்சரியம் அடைந்திருக்கலாம்.சிலவேளை இலங்கைத் தமிழில் சிங்கள மொழியின் தாக்கம் அதிகம் இருப்பதால், மேற்படி ‘நத்தார்’ என்ற சொல்லும் சிங்களச் சொல்லாக இருக்குமோ? என்று
  எண்ணியிருக்கலாம். நீங்கள் அவ்வாறு எண்ணியிருந்தால் உங்கள் கணிப்புத் தவறானது.

  ‘நத்தார்’ என்ற சொல் போர்த்துக்கேய மொழிச் சொல்லாகும். போர்த்துக்கேய மொழியில் “இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறுவதற்கு “பெலிஸ் நத்தால்”(Feliz Natal) என்றோ அல்லது “கொம்பிரி மென்டொஸ் பெலோ நத்தால்” (Cumprimentos pelo Natal) என்று கூறுவார்கள்.

  போர்த்துக்கேய ஆட்சி அகன்று ஏறத்தாழ முந்நூற்றைம்பது வருடங்கள் சென்று விட்ட போதிலும் இலங்கை மக்கள் பாலன் பிறப்புத் தினத்தைக் குறிக்கும் ‘நத்தால்’ என்ற போர்த்துக்கேய மொழி வார்த்தையை அப்படியே இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டைப் போர்த்துக்கேயர் கைப்பற்றவும் இல்லை, ஆட்சி செய்யவும் இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தைகளின் தாக்கம் மிகக் குறைவு எனலாம். சிங்கள மக்கள் பாலன் பிறப்பை(கிருஸ்துமஸ்) தினத்தைக் குறிப்பதற்குப் போர்த்துக்கேய மொழியில் இருந்து கடன் வாங்கிய ‘நத்தால்’ என்ற வார்த்தையை அப்படியே உபயோகிக்கின்றனர்.அதாவது சிங்கள மொழியில் ‘கிறிஸ்துமஸ்’ தினத்தைக் குறிப்பதற்கு ‘நத்தால்’ அல்லது நத்தாலக் (නත්තලක්) எனவும், சிங்கள மொழியில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறும்போது ‘சுப நத்தாலக் வேவா’ (Subha nath-tha-lak vewa/ සුභ නත්තලක් වේවා ) என்றும் கூறுகின்றனர். இலங்கைத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தையாகிய ‘நத்தால்’ சிறிது திரிபடைந்து ‘நத்தார்’ ஆக மாறியது.

  எவ்வாறு போர்த்துக்கேயச் சொற்களாகிய அலுமாரி, அலவாங்கு(கடப்பாரை), அலுப்புநேத்தி(சட்டைப் பின்), கதிரை, கழுசான், குசினி, பீங்கான், துவாய், தவறணை போன்ற சொற்களை விட்டு விட முடியவில்லையோ அது போலவே இந்த ‘நத்தார்’ என்ற சொல்லையும் இலங்கைத் தமிழ் மக்களால் இன்றுவரை விட்டுவிட முடியவில்லை. இலங்கையர்களை முதன் முதலில் ஆண்ட அந்நிய நாட்டவர்கள்(ஐரோப்பியர்கள்) போர்த்துக்கேயர் என்பதுடன் ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் எம்மை ஆட்சி செய்த அவர்களின் ஆட்சியின் எச்சங்கள்/அடையாளங்கள் அவ்வளவு சீக்கிரமாக அழிந்து போய் விடுமா என்ன? உங்களுக்கு இன்னுமொரு ஆச்சரியமான தகவலையும் கூற விரும்புகிறேன். அதாவது போர்த்துக்கேயருக்கு அடுத்து சுமாராக நூறு வருடங்கள் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தர்களின் டச்சு மொழிச் சொற்கள் விரைவாகவே இலங்கைத் தமிழ் மக்களிடமிருந்து விடை பெற்று விட்டன. எஞ்சியிருப்பவை ஒன்றிரண்டுதான். உதாரணத்திற்குச் சில:கந்தோர், தபால், மற்றும் கக்கூசு. இவை மட்டுமன்றி கிறிஸ்துமஸ் தினத்தை நோர்டிக் மொழிகளாகிய டேனிஷ், சுவீடிஷ், நோர்வீஜியன் மொழிகளில் யூல்(Jul) என்று அழைப்பார்கள். இந்தச் சொல்லும் இலங்கைத் தமிழில் கலந்துவிட்டது என்பது எனக்குப் பெரிய ஆச்சரியம்தான். ‘கிறிஸ்துமஸ்’ தினத்தை ‘யூல்’ என்று அழைத்த வயதான பெண்மணிகளை/ஆண்களை நான் இலங்கையில் கண்டிருக்கிறேன். அவர்கள் அந்தச் சொல்லை எங்கு கற்றுக் கொண்டார்கள் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமே.

  இலங்கையில் மட்டும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஏன் ‘நத்தார்’ என்று பெயர்? என்று ஆய்வு செய்யப் புகுந்ததால் எனக்குக் கிடைத்த விடையே போர்த்துக்கேய மொழியின் தாக்கம் அது என்பதாகும்.

 5. Santhosh Kumar says:

  praise the lord

  thank you

Leave a Reply