நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய க்கார னும் இருப்பான்

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமை ப்படும் படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட் டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடு க்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலக த்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத் துக் கொள் ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின் பற்ற க்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய க்கார னும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவான வர் கனம்பண்ணுவார்.( John 12: 23-26 )

இங்கு யேசு தனது மரணம்நெருங்கி விட்தென்பதை அறிந்து தான் நிச்சயமாக மரணமடைவதில்லை என்பதை மறைமுகமாக தனது சீடர்களுக்குவெளிப்படுத்துகின்றார். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்தால் அது முளைப்பதற்குத் தேவையான காற்று, ஈரப்பதன், உரியவெப்பம் என்பன கிடைக்குமாயின் அந்த விதை முளைத்து தனது பெற்றோரைப் போன்ற மேனியைப் பெற்று உரிய காலத்தின் தன் பலனைக் கொடுக்கும். அது முப்பதும், அறுபதும், நூறுமாகப் பலன் கொடுக்கும்.

இப்பொழுது அந்த நிலத்தில் விழுந்த கோதுமை மணிக்கு என்ன நடந்த்து அதைத் தேடினால் கண்டுபிடிக்க முடியாது. அது உருமாற்றம் அடைந்து புதிய மரமாக ஜீவனுடன் இருப்பதைக் காணலாம்.

இவ்வாறே தனக்கும் நடக்கும் என்பதை இந்த உவமைமூலம் இயேசு மிகவும் சிறப்பாக விளக்குகின்றார். தான் மரணத்தின் மூலம் நிரந்தரமாக அழிவடைவதில்லை என்றும் குறிப்பிட்ட காலத்தில் தான் உயிரடைந்து நித்தியமாக வாழ்வேன் என்பதையும் மிகவும் சிறப்பாக அந்த உவமைமூலம் வெளிக்காட்டு கின்றார். இந்த உலகத்தில் தனது ஜீவனைப் பெரிதாக எண்ணாமல் கர்த்தரே பெரியவர் என்று எண்ணி அவருக்காக மரணத்தைத் தழுவிக் கொள்ளும் எவனும்  யேசுவைப்போன்று உயிரடைய முடியும், ஆனால் உலக இச்சைகளில் தனது விருப்பம்போல் ஈடுபட்டு மரிப்பவனின் வாழ்வில் அவனால் மீண்டும் உயிரடைய முடியாது. எனக்கு ஊழியம்செய்கிறவன் என்னைப் பின்பற்றக்கடவன் என்று இயேசு கூறினார். காரணம் இயேசுவைப்போல் அவனும் ஒருநாள் மரித்தாலும் உயித்தெழுவான். நிச்சயமாக பிதாவும் அவனைக் கனப்படுத்துவார். ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத் தாலொழிய உயிர்க்கமாட்டாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தி னுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொ ன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். எல்லா  மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங் களு டைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம்வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே; மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீன முள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப் பட்ட வரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும்  மண்ணா னவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம். சகோதரரே, நான் சொல் லுகிற தென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பது மில்லை. (1Cor 15:35 -50)

ஏன் இயேசுக்கிறிஸ்து மரணமடைவேண்டும்? பாவம் பூமியிலுள்ள மனிதர்களுள் புகுந்தபடியால் மனிதனை மீட்கும்படியாக கிறிஸ்து மரணமடையவேண்டியதாயிற்று.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்து மாவா னான். தேவனாகிய கர்த்தர் மனுஷனை. ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆனால் இந்த கட்டளைக்கு கீழ்படியாமல் நன்மை தீமை அறியும் கனியை புசிக்கும்படி பிசாசா னவன் வஞ்சனையாகஏவாளை ஏமாற்றினது. அதை நம்பி கர்த்தரின் கட்டளையை ஏவாள்மீறினாள். தான்மட்டும் கட்டளையை மீறினது மல்லாமல் தனது கணவனாகிய ஆதாமையும் கட்டளையை மீறும் படிசெய்தாள்.

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

இப்பொழுது அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் மூடப்பட்டு பூமிக்குரிய கண்கள்திறக்கப்பட்டன. அதேவளை அவர்களின்   பரிசுத்த அலங்கார வஸ்திரம் களையப்பட்டு விட்டதனால் தாங்கள் நிர்வா ணிகள் என்று அறிந்துகொண்டார்கள். அவர்கள் அழியாமையு டைய வர்களாய் உருவாக்கப்பட்டார்கள், ஆனான் பிசாசின் சொல்லுக்குச் செவிகொடுத்தபடியால் அழிவைப்பெற்றுக் கொண்டார்கள். இங்கு நாங் கள் அவதானிக்கவேண்டியது என்னவென்றால் ஆதாமும் ஏவாளும் வஞ்சிக்கப்பட்டார்கள். பிசாசானவன் கர்த்தருடைய பிள்ளைகளை அவர்களுக்குத் தெரியாமலேயே வஞ்சித்து கர்த்தரின் கட்டளை ளைமீறச் செய்து நித்திய வாழ்விலிருந்து விழச்செய்கிறான்.ஆகவே நிற்கிறேன் என்று நினைக்கிற நான் விழுந்துவிடாதபடி மிகவும் எச்சரிக்கையுடன் கிறிஸ்துவின் ஐக்கியத்தோடு வாழவேண்டும்.


மேலேகாட்டப்பட்டபடத்தை மிகவும் அவதானமாக்க் கவனிப்போம். பிதா, கமாரன், பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய திரித்துவத்தைக் குறிக்கின்றது. பிதாவை எவராலும் காணமுடியாது, ஆனால் இயேசு என்றவடிவில் மனிதர்களுடன் அவர் உறவாடினார், பின்பு அவர் மனிதர்களுடைய பாவங்களுக்காக  மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயித்தெழுந்த கிறிஸ்து நாற்பதுநாட்கள் மனிதர்களுக்கு காட்சிகொடுத்தார், நாற்பதாம் நாள் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். தான் இல்லாத இடத்தை நிரப்புவதற்காக பரிசுத்த ஆவியானவரை உலகிற்கு அனுப்பினார்.பத்தாவது நாள் அதாவது உயித்தெழுந்து ஐம்பதாவது நாள் பரிசுத்த ஆவியானவர் சீடர்கள்மீதும் விசுவாசிகள்மீதும் ஊற்றப்பட்டார். இவர்கள் மூவரும் ஒருவரே அதாவது இறைவனே, ஆனாலும் மூவரும் வித்தியாசமானவர்கள். இப்பொழுது யார் யார் இயேசுவைக் கிறித்து என்று ஏற்றுக் கொள்ளிறார்களோ அவர்களுடன் பரிசுத்த ஆவியானவர் வாசம்செய்கிறார்.

இப்பொழுது ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தவுடன் அவர்களில் காணப்பட்ட ஆவியின் செயற்பாடு செயலற்றுவிட்டது. ஆவியினால் மட்டும்தான் இறைவனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளமுடியும். பாவம்செய்தவுடன் மனிதனின் ஆவி மரித்துவிட்டது. இதனாலேயே ஆதாமுக்கும் கர்த்தருக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டது. இப்பொழுது ஆதாமுடைய ஆத்துமா சரீரம் சொல்வதையை செய் கின்றது. சரீரம் மண்ணுக்க்குரியது அது மண்ணுக் குரிய செயற்பாடு களையே செய்யவிரும்பும், அதனையே ஆத்துமாசெய்யும்.

ஆவி,ஆத்தமா,சரீரம் மூன்றும் சேர்ந்தே மனிதன் என்று அழைக்கப்படும்.ஆவியும் ஆத்துமாவும் வெவ்வேறானதல்ல இரண்டும் ஒன்றானது.  ஆனால் அவற்றின்செயற்பாடுகள் வித்தியாச மானவை. ஆவி செயலற்றுக் காணப்படுமானால் இறைவனுடன் தொடர்புகொள்ளமுடியாது.. சரீரத்தின் விருப்பத்தையும் ஆவியின் விருப்பத்தையும் ஆத்துமா செயற்படுத்தக்கூடியது. சரீரம் பூமிக்குரிய காரியங்களையை அதிகம் வாஞ்சிக்கும். ஆவியானது எப்பொழுதும் விண்ணுக்குரிய செயற்பாடுகளையே வாஞ்சிக்கும். எப்பொழுது சரீரம் இறைவனுக்கு விருப்பமில்லாத காரியங்களைச் செயற்படுத்த முனைகிறதோ, அவ்வேளைகளில் ஆவியானது  இறைவனுக்கு விருப்பமில்லாதசெயற்பாடுகள் பாவமானது, அவற்றைச் செய்ய வேண்டாம் என்று இருதயத்தில் பேசிக் கொண்டேயிருக்கும். அந்த சத்தத்திற்கு நாம் கீழ்படியும் போதெல்லாம் பாவத்திலிருந்து தப்பிக் கொள்ளுவோம். சில சமயங்களில் சிறிய பொய் சொல்ல வேண்டி ஏற்படும் போது பொய் சொல்லுவது பாவம் என்று ஆவி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக்கும், ஆனாலும் தப்பித்துக் கொள் வதற்கு வேறு வழியில்லை, இது சின்னப் பொய்தானே இந்த ஒருமுறைதான் சின்னப் பொய்யைச் சொல்லலாம் என்று சரீரமானது ஆத்துமாவைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். இந்த நிலமையில் சரீரத்தின் பக்கம் ஆத்துமா சேர்ந்துகொள்ளுமாயின் அந்த பாவத்தை சரீரம்செய்து முடிக்கும். இந்த நிலமையில் ஆவியானது துக்கமடைந்த நிலையில் காணப்படும். இவ்வாறான பாவச்செயற்பாடுகளை சரீரமும் ஆத்து மாவும் செய்து கொண்டேயிருக்குமாயின் ஆவியின் செயற்பாடு தானானவே செயலற்ற நிலைக்குச் சென்று விடும். அதன்பின்பு எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அதுபாவம், அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்வதற்கு மனச்சாட்சி எங்களுடன் பேசமாட்டாது. சரீரம் விரும்பியபடி பாவத்தில் ஜீவிக்கமுடியும்.

இந்தநிலை இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் பாவம் காணப்படுவதால் இருவரும் இணைவதற்குப் பாவம் தடையாக்க் காணப்படுகிறது. இந்த இறைவனற்ற மனித வாழ்வானது அவனை நித்திய மரணத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த நிலையிலேயே உலகில் அனேகர் ஜீவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலமை ஏற்பட்டபடியினாலேயே ஆதாமும் ஏவாளும் இறைவனைவிட்டுத் தூரமாக ஜீவித்தார்கள். இந்த நிலமையில் இருந்து மீள்வதற்கு என்னவழியுண்டு? ஒரேயொருவழிதான் அதற்காக பிதாவாகிய கர்த்தர் ஏற்பாடுசெய்துள்ளார். அது தான் தன்னுடையசொந்தக்குமாரன் என்றும் பாராமல் இயேசுக் கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி பாவப்பலியாக அவருடைய திருஇரத்தைச்சிந்தி உன்னையும் என்னையும் மீட்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளார் .

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் என்று இயேசு கூறினார். உண்மையில் ஒரு விதையான நடப்பட்டு அதற்கு நீர் ஊற்றிவருவோமாகில் அது உரிய காலத்தில் முளைத்து வளர்ந்து பலன்கொடுக்கும். ஆனால் நாம் நாட்டிய கோதுமை மணியை எம்மால் பார்க்க முடியாது, ஆனால் அது மரிக்கவில்லை ஜீவித்துக் கொண்டேயிருக்கிறது.அது தன்னைப்போல பல நூற்றுக்கணக்கான விதைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். இந்த உலகத்தில் வாழும்போது இதையே நாம்செய்யவேண்டும் என்று இயேசு விரும்பு கின்றார். நீ ஜீவிக்கும் இந்தக்கொஞ்சக்காலத்தில் உனக்காக வாழாமல் இயேசுவிற்காக வாழவேண்டும் என்று இயேசு விரும்பு கின்றார். உன்னுடைய மாமிச இச்சைகளுக்காக வாழாமல் உன்னை உருவாக்க கர்த்தருக்காக வாழவாயா? பாவத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக வாழவாயா? மனிதர்களுக்குச் செம்மையாகத்தோன்றுகிற பல வழிகள் உண்டு, அதன் முடிவோ மரணம். பாவத்தின் சம்பளம் மரணம்.. ஆகவே இந்த நித்திய மரணத் திற்காகச் சென்று கொண்டி ருக்கும் மனிதர்களுக்கு நித்திவாழ்வை அறிமுகப்படுத்துவாயா?

இறைவனுடைய பெரிய கட்டளை என்ன? நீங்கள் உலகம் எங்கும் சென்று யேசுவைப்பிரசங்கிப்பதல்லவா? இன்றே ஆயத்தப்படுவாயா? கர்த்தர் உன்னோடு இருந்து காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.

சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியா மையைச் சுதந்தரிப்பதுமில்லை இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம்  தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்தி ருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக் கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறை வேறும் (1Cor 15 51-:55)

ஆமேன்.You can leave a response, or trackback from your own site.

8 Responses to “நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய க்கார னும் இருப்பான்”

 1. Richard says:

  I m new for this site and nave found many benefits messages for our spiritual life need more studies please publish

 2. gideon says:

  good virtual

 3. yuvaraj says:

  Hi,

  The above msg is very useful for me to live spritual life

 4. REV.JEBAS CORNELIUS says:

  Studies are very fine

 5. hepsiba says:

  your message is very usefull for me

 6. Elayaraja says:

  your message is very usefull for me also…

 7. P.Kasi Viswanathan says:

  good messsage

 8. agnes says:

  Dear brother, what happened to the soul are die in christ and the soul are not die in christ ? I means before judgement. where they will go? can you give me the answer according..to the bible , what bible says? Pls … I waiting for the answer. God bless you.

Leave a Reply