கர்த்தரின் நிர்வாக முறமைகள்…..

மனிதர்களுடன் விஷேடமாக அவரால்தெரிவுசெய்துகொள்ளப்பட்ட இஸ்றவேல்சந்த்தியுடன். இறைவன் கொண்டுள்ள தொடர்பில் ஒருபெரிய இடைவெளி சரித்திரத்தில் காணப்படுகிறது…  மனிதர்களின் விடயங்களில் தெய்வீக நிர்வாகத்தில் மாற்றங்கள் அவதானிக்க்க்படுகின்றது.

வேதாகமத்தில் காணப்படும் காலங்களை நாம் கண்டறிதல் வேண்டும். மனிதசரித்திரத்தை கர்த்தர் காலங்களாக வகுத்துள்ளார். தன்னுடைய குமாரனாகிய கிறிஸ்துமூலமாக காலங்களை வகுத்துள்ளார். அதாவது இந்தக் கடைசி  நாட்களில் குமாரன்  மூலமாய் நமக்குத்  திருவுளம்பற்றினார்; ,இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார்,, இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.( எபிரே 1:2) காலங்கள் நீண்டதாகவோ அல்லது குறுகினதாகவோ காணப்படலாம், ஆனால் நாம் பகுத்தறியவேண்டியது  எப்படி மனிதகுலத்துடன் கர்த்தர் உறவாடுகின்றார் என்பதேயாகும்.

கர்த்தர் மாறாதவராக இருக்கின்றார், ஆனால் அவருடைய நிர்வாக முறமைகள் மாற்றமடைகின்றது. வித்தியாசமான காலங்களில் வித்தியாசமாகச்செயற்படுகின்றார். குறிப்பிட்ட காலத்தில் மனிதனுடன் தன்னுடைய விவகாரங்களை நிர்வகிப்பதை நிர்வாகம் என்று அழைக்கின்றோம். நிர்வாகம் என்பது காலத்தைக்குறிப்பதல்ல, மாறாக நிர்வாகத்தின் நுட்பமாகும். அதாவது பிரச்சனைகளை சிறந்த முறையில் இனங்கண்டு உரியநேரத்தில் மிகச்சிறந்த தீர்வை ஏற்படுத்துதலாகும். அதாவது குறிப்பிட்ட கொள்கைகளை உரியகாலங்கு சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தலாகும்.

ஒரு வீட்டில் குடும்பத் தலைவன் குடும்பத்தின் நன்மைக்காக  அதனை நிர்வகிப்பதுபோலவே கர்த்தரும் மனிதகுலத்தின் நன்மைக்காக மனிதர்களுடன் ஏற்படுத்தும் நடைமுறையே நிர்வாகமாகும். ஒருகணவனும் மனைவியும் மட்டும் உள்ளகுடும்பத்தில் அதன் நடைமுறை ஒழுங்குகள் ஒருவிதமாகவும், குழந்தைகள் உருவாக உருவாக அதன் செயற்பாடுகள் இன்னொரு விதமாகவும் நிர்வகிக்கப்படும். பிள்ளைகள் வளர்ச்சியடைய உரிய காலங்களுக்கு ஏற்றதாக நிர்வாகக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறாகவே கர்த்தரும் மனிதவர்கத்துடன் தனது நிர்வாகத்தில் மாற்றங்களை காலத்திற்கு காலம் ஏற்படுத்துகிறார்

(Gal. 4:1–5பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும்

கீழ்ப்பட்டிருக்கிறான். அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.

நாம் புத்திர சுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார் இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.).

 • உதாரணமாக காயின் தனது சகோதரனாகிய ஆபேலைக் கொலைசெய்தபோது, அவனைக் காண்பவர்கள் அவனைக்க கொலைசெய்யாதபடி அவன்மேல் ஒரு அடையாளத்தையிட்டார். (ஆதி.415) ஆனாலும்வெள்ளத்தினால் அழித்தபிற்பாடு முக்கியதண்டனைக்கான சட்டத்தைக் கட்டளையிட்டார். மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது( ஆதி 9:6) இப்பொது நிர்வாகத்தில் மாற்றத்தைக் காண்கின்றோம்.
 • இன்னுமொரு உதாரணத்தை சங்கீதம் 137: 8,9 இல் நாம் காணலாம்.¡°பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.¡±

 • அதன்பிற்பாடு கர்த்தராகிய்யேசுக்கிறிஸ்து தனது மக்களுக்கு இவ்வாறு உபதேசித்தார். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்  (மத். 5:44)
 • நியாயப்பிரமாணத்தில் வாழ்ந்த சங்கீதக்காரனுக்கு அந்த வார்த்தைகள் சரியாகக்காணப்பட்டன, ஆனால் கிருபையின் காலத்தில் வாழம் கிறிஸ்தவர்களாகிய நமக்கோ அவை பொருத்த மற்றவையாகவும் யேசு கூறிய வார்த்தைகளே மிகவும்பொருத்தமானவையாகும். லேவியராகம்ம் 11ம் அதிகாரத்தில் குறிப்பிட்ட சில உணவுகள் தீட்டாக்குறிப்பிடப்பட்டு அவை உண்ணத்தகாதவையாக குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் மாற்கு 7ம் அதிகாரம் 19ம் வசனத்தில் எல்லா உணவும் துப்பரவாகவுள்ளன என்று இயேசு கூறியுள்ளார். (அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும்.)
 • எஸ்றா 10:3 இல் யூதர்கள் தங்களுடைய அந்நிய மனைவிகளையும் பிள்ளைகளையும் தள்ளிவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஏற்பாட்டில் விசுவாசிகளுக்கு அந்நிய ஸ்திரிகளைத் திருமணம்செய்தால் அவர்களைத்  தள்ளிவிடவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது (1கொரி. 7:12-16)
 • நியாயப்பிரமாணத்தில் பிரதான ஆசாரியன்மட்டும் வருஷத்திற்கு ஒருமுறை பிரவேசிக்கமுடியும் (எபி.9:7) , ஆனால் கிருபையின் காலத்தில் விசுவாசிகள் யாவருக்கும் மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்வதற்கு வழிஏற்பட்டுள்ளது.(எபி.10:19-22)

நிர்வாகத்தில் காலத்திற்குக் காலம் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன என்பதை இந்த மாற்றங்கள் நிரூபிக்கின்றன்.

இவ்வாறான மாற்றங்களை எல்லாக்கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டக்கொண்டிருக்கின்றன என்பதைக் எங்களால் காணமுடிகிறது.

முதலில் இரண்டுவகையான நிர்வாக அலகுகளை நாம்தெளிவாகக் காணமுடியும்.

1.       நியாயப்பிரமாணம்

2.       கிருபை

நியாயப்பிரமாணத்தை கர்த்தர் மோசேக்கூடாக வழங்கினார். ஆனால் கிருபையும் சத்தியமும் கிறிஸ்துவிற்கூடாக வழங்கப்பட்டன.(யோவான். 1:17)

எங்களுடையவேதாகமம் இரண்டுபிரதான பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளன.

1.பழைய ஏற்பாடு

2. புதிய ஏற்பாடு.

இவைகள் நிர்வாகமாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் காண்பிக்கின்றன. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழந்தவர்கள் மிருகங்களை தங்கள் பாவப் பலியாகச் செலுத்திவந்தனர், ஆனால்  இந்தக்கிருபையின் காலத்தில் வாழ்பவர்கள் மிருகங்களைப்பலியாக இடவேண்டிய அவசியம் இல்லை.இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம் சகலபாவங்களையும் சுத்திகரிக்கும் பலியாகச் செலுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிர்வாக்கொள்கை மாற்றங்களை இந்த இரண்டு பழைய புதிய ஏற்பாடுகளில் காணமுடிகிறது

இந்த இரண்டு நிர்காகங்களையும் ஏற்றுக்கொள்வோமானால், மூன்றாவது நிர்வாக அலகையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஏனெனில் நியாயப்பிரமாணமானது யாத்திரகாமம் 19ம் அதிகாரத்திலேயே அறிமுகப் படுத்தப்

படுகின்றது.அதாவது படைபிற்குப்பின்பு நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப்பின்பு இந்தச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நியாயப்பிரமாணத்திற்கு முன்பு இன்னுமொரு நிர்வாக முறமைசெயற்பாட்டிலிருந்துள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடியும், அதுவும் ஒரு நிர்வாக அலகாக இருக்குமானால்,மொத்தமாக மூன்று நிர்வாக அலகுகள் என்பதை ஏற்க்கொள்ள முடியும்.(வாசிக்கவும்.றோமர் 5:14) வேதாகமத்தில் வரப்போகும் இன்னுமொரு காலம்பற்றிக்கூறுகின்றது. அதனால் நாலாவது நிர்வாக அலகையும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். யேசுக்கிறிஸ்து ஆயிரம்வருஷ அரசாட்சிசெய்வதற்காக மீண்டும் வரவிருக்கின்றார். அதனுடைய நிர்வாக அலகு வித்தியாசமாகவேயிருக்கும்.

நிர்வாக அலகுகள்.

1.தூய்மையான காலம்:- {அறியாமையின் காலம் } .:- ஆதாம் உருவாக்கப்பட்ட நாள்முதல் அவனுடைய வீழ்ச்சியின் நாள்வரை.

(ஆதி. 1:28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடு கிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன்  அவர்களை  ஆசீர்வதித்தார். அத்துடன் அவர்களுக்குத் தேவையான சகலமும் அங்கு ஏற்படுத்திக் கொடுக்க ப்பட்டிருந்தன. அங்கு எதற்கும் குறைவு இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பிதாவானவர் அவர்களுடன் மாலைவேளையில் வந்து உறவாடிச் செல்லுவார்.அவர்களுடைய வாழ்கையை அவதானித்துச் சந்தோசப்படுவார்.கர்த்தர் அவர்களுக்கு ஒவ்வொரு புல் பூண்டுகளையும் உணவாகக் கொடுத்தார். (ஆதி. 1:29) இதிலிருந்து அறிந்து கொள்ளவேண்டியது யாதெனில் மனிதகுலம் ஆரம்பத்தில் தாவரஉணவில் மட்டும் தங்கிவாழ்ந்தான் என்பதாகும்.

தீர்மானங்களைமேற்கொள்ளும் சுயாதீனம் அவர்களுக்கு வழங்கப்பட்டபடியால் தாங்கள் விரும்பியபடி அதாவது தங்கள் விருப்பத்துற்கு ஏற்ப சுயமாக முடிவுகளை மனிதனால் மேற்கொள்ளும் உரிமை மனிதகுலத்திற்கு கிடைத்துள்ளது.  அதனாலேயே ஆண்டவர் அர்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய கட்டளையைக் கட்டளையிட்டார்.அது தான் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை மட்டும் சாப்பிடவேண்டாம் ஆனால் மற்றய எல்லாக் கனியையும் நீங்கள் சாப்பிடலாம் என்னதேயாகும்.

இதின் பிரகாரம் அவர்கள் தங்கள் வாழ்கையை மிகவும் சந்தோஷத்துடன் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் மிகவும் தூய்மையான பாவம் இல்லாத வாழ்வு வாழ்ந்துவந்தார்கள்.

மனச்சாட்சியின் காலம்.:- ஆதாமின் வீழ்ச்சி முதல் வெள்ளம்வரையிலான காலம்..

தீர்மானங்களை மேற்கொள்ளும் சுயாதீனம் அவர்களுக்கு வழங்கப்பட்டபடியால் தாங்கள் விரும்பியபடி அதாவது தங்கள் விருப்பத்துற்கு ஏற்ப சுயமாக முடிவுகளை மனிதனால் மேற்கொள்ளும் உரிமை மனிதகுலத்திற்கு கிடைத்துள்ளது.

பழமரங்கள் தங்கள் காலத்திற்கு ஏற்ப கனிகளைக் கொடுத்துக்கொண்டிருந்தன. நன்மை தீமை அறியும் மரமும் தனது பழங்களைக்கொடுக்க ஆரம்பித்த்து.

இப்பொழுது நன்மை தீமை அறியும் மரத்தின் பழம் பார்வைக்கு மிகவும் கவர்ச்சியாகக் காணப்பட்டது. அந்தப்பழங்களைச் சாப்பிடவேண்டாம் என்று கர்த்தர் கட்டளையிட்டது ஏன் என்றகேள்ளி ஏவாளின் இருதயத்தில் செயற்படத் தொடங்கியது. இந்தச் சந்தேகத்தை தீர்ப்பதற்கு கர்த்தரிடமே சென்றிருக்கவேண்டும். மாறாகபிசாசானவன் ஏவாளுடன் பேசத் தொடங்கினான். இதன் விளைவு கர்த்தரின் கட்டளை மீறப்பட்டது. அதாவது மனிதகுலம் முதன்முதலில் கர்த்தருக்கு விரோதமானவனுடன் சினேகம் கொண்டாடியதுடன் மட்டுமல்லாமல் அவருடைய கட்டளைளை மீறிப் பாவஞ்செய்தது. பாம்பு என்று அழைக்கப்பட்ட சாத்தானின் ஏமாற்றத்தினால் ஏவாளும்ஆதாமும் வஞ்சிக்கப்பட்டார்கள். ஆதாமும் ஏவாளும் பிதாவின் தெய்வீக்க் கட்டளைளையை மீறினபடியால் பாவஞ்செய்தார்கள். அவர்கள் இருவரும் தேவனால் நியாயம் தீர்க்கப்பட்டார்கள்.

 • பாம்பாகி சாத்தான் தண்டிக்கப்பட்டான், :- அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
 • கிறிஸ்துவின்மூலம் பாவமன்னிப்பிற்கான விடுதலை வாக்குப்பண்ணப்பட்டது,:- உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
 • ஏவாள் நியாயம்தீர்க்கப்பட்டாள், :- அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிரு க்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள் ளுவான் என்றார்.
 • ஆதாம் நியாயம்தீர்க்கப்பட்டாள்:- ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
 • பூமி சபிக்கப்பட்டது,:- அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்,
 • மரணம் பிரவேசித்த்து:- நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்
 • ஆதாமும் ஏவாளும் தோலினால் உடுத்துவிக்கப்பட்டார்கள், (Gen 3:21 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
 • ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார்கள். (Gen 3:23 அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

மனிதன் உடல் அமைப்பானது மூன்றுபொருட்களைக் கொண்டுள்ளது.

1.    சரீரம்:- இது மண்ணினால் உருவாக்கப்பட்டது. இது மண்ணுக்கே திரும்பும்.

2. ஆத்துமா:- (Gen 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

3.     ஆவி:ஆத்துமாவில் இன்னுமொருபொருள் அடங்கியுள்ளது அதுதான் ஆவி. இந்த ஆவியானது ஆத்துமாவில்செயற்பட்டுக்கொண்டேயிருக்கும். இறைவன் ஆவியாக இருக்கின்றபடியால் இந்த மனிதனில் அதாவது ஆத்துமாவில் காணப்படும் ஆவியே கர்த்தருடன்  ​மனிதனுக்குத்​தொடர்பை ஏற்படுத்துவதாகும்.

இந்த ஆவி ஏவாள் பிசாசாகிய பாம்புடன்தொடர்பு ஏற்படுத்தியபோது அவனுடன் தொடர் பைவைத்துக் கொள்ளுதல் கர்த்தருக்கு பிரியமில்லாதசெயல் என்று பல முறை எச்சரித்தும் அவளுடைய ஆசையானது அதை நிராகரித்துக் கொண்டிருந்து. ஏனெனில் கண்களின் இச்சை  அவளை ஆட்கொண்டிருந்தது.​ இந்த ஆசை அவளை ஆட்கொண்ட படியாலேயே  அவள் இலகுவில் ஏமாற்றப்பட்டாள்.

இந்த ஆவியினுடைய எச்சரிப்பைக் கேளாமல் நன்மை தீமை அறியும் பழத்தைச் சாப்பிட்டவுடன் தேவனால் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வழங்கப்பட்ட நீதியின் வஸ்திரம் விலக்கப்பட்டது. அந்தவுடனேயே அவளுடைய மனச்சாட்சியில் தான் நிர்வாணி என்று உணர்த்தப்பட்டாள். அதனாலேயே தங்கள் நிர்வாணத்தை மறைக்க இலைகுழைகளை நாடினார்கள். அது மட்டுமல்லாமல் வழக்கம்போல கர்த்தர் வரும்போது ஓடி ஒழிந்துகொண்டார்கள். ஆனால் பாவத்திற்கு பரிகாரமாக இரத்தம் சிந்தப்படல்வேண்டும் என்ப தற்காக மிருகத்தை அடித்து அதன் இரத்தத்தைச் சிந்தி அதன்தோலினால் அவர்களின் நிர்வாணத்தை கர்த்தர் மூடினார். அது மட்டுமல்லாமல் ஜீவ்விருட்சத்தின் கனியைப்புசிக்கவிடாமல் ஏதோன்தோட்டத்திலிருந்தும் விரட்டப்பட்டார்கள்.

3.:-மனித ஆளுகையின் காலம்.:-பெருவெள்ளத்தின் முடிவுதொடங்கி ஆபிரகாமின் அழைப்பு வரையிலான காலம்.

நோவாவின் சந்ததியினர் உலகம் எங்கும் பரவினர்.

சேம்:- நோவாவின் மூத்த மகன்(ஆதி.5:32, 6:10). இவர் யாபேத்தின் மூத்த சகோதர்ர். சேமும் அவனது மனைவியும் பேழைக்குள்சென்றதினால் காப்பாற்றப்பட்டார்கள்.(ஆதி.7:13). சேம் சந்ததி யிலேயே இஸ்ரவேல் சந்த்தி உருவானது .இவருடைய சந்த்தியினர் பேசியன், அசீரியர், கல்தேயர், லிதியா, சிறியா. விஷேடமாக எபிரேயர்.

யாபேத்:-நோவாவின் புத்திரன். யாபேத் என்றபெயர் அழகு,வெள்ளை என்று பொருள்படும். ஐரோப்பியரும், வடஆசியாவிலுள்ளவர்களும் இவருடைய சந்ததியினரே.(ஆதி.10:2-5). மீதியானியர், கிரேக்கர்கள்,றோமர்கள், ருஸ்ஷியர்கள்,போன்றோர் யாபேத்தின் சந்ததியினராவர்

காம்:-நோவாவின் மூன்று பிள்ளைகளில் இளையவன்.(ஆதி. 9:18,24. காம் தனது தகப்பன்நோவா குடிவெறியினால் மயங்கி வஸ்திரம் விலகிக்கிடக்கும்போது அவனுடைய நிர்வாணத்தைக் கண்டு தனது சகோதர்ர்களாகிய சேமுக்கும் யாப்பேத்துவுக்கும் கூறினான்.  அவர்கள் இருவரும் தகப்பனுடைய நிர்வாணத்தைப் பார்க்காமல் நோவாவின் நிர்வாணத்தை மூடினார்கள். காம் தன்னுடைய நிர்வாணத்தை பார்த்துவிடான் என்பதை அறிந்துகொண்ட நோவா காமினுடைய மகனாகிய கானானைச் சபித்தான்.(ஆதி 9: 18,25) கானானியர்கள் சேமுடையதும் யாபேத்துனுடையதும் சந்த்தியினருக்கு அடிமையாயிருக்கும்படி சாபமிட்டான். ( ஆதி 9: 26-27) இவருடைய சந்த்தியினர் எதியோப்பியர், எகிப்தியர், லிபியர், கானானியர் ஆகும்.

இந்த மூன்று பரம்பரையினரும் கடவுள்பயமற்றவர்களாகி விக்கிரக வணக்கங்களில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தார்கள்.

4. வாக்குத்தத்தத்தின் காலம்.:-ஆபிரகாமின் அழைப்புமுதல் நியாயப்பிரமாணம்வரை.

கடவுள் பயமற்ற வாழ்வு மனிதர்கள் வாழ்ந்துவரும் காலத்தில் தன்னை வணங்கும் ஒரு ஜாதியை உண்டாக்கதேவன் திருவுளம்பற்றினார். கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ என்றுவேண்டிக் கொண்டார். அப்படியே ஆபிரகாம் கீழ்ப்படிந்தான். அப்பொழுது சில வாக்குத் தத்தங்களைக் கொடுத்தார்.
1.  நான் உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்

2.  உன்னை ஆசீர்வதிப்பேன்.

3.உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்

4. நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

5.  உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்;

6.  பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

வாக்குத் தத்தம்:- தனது பிள்ளைகளுக்குரிய ஆசீர்வாத்த்தையும் இரட்சிப்பையும் கொடுப் பதற்கான அறிவித்தலாகும். வாக்குத்தத்தமானது பிரகடனப்படுத்தல், ஒப்பந்தத்ம்செய்தல் ஆகிய இரண்டு அம்சங்களையும்  கொண்டுள்ளது.

கர்த்தருடைய வாக்குத் தத்தமானது கர்த்தருடைய பிரகடனத்துடன் ஆரம்பமாகின்றது, இது வருங்காகலத் திட்டங்களைப் பூமியிலுள்ள சகலதேசங்களுக்குமாகக் கொண்டுள்ளது அத்துடன் நன்கொடைகளையும் ஒப்பந்தங்களையும் சிலருக்குக் கொடுத்து பலரை நன்மையடையச் செய்வதை மையமாகக் கொண்டுள்ளது.

கர்த்தருடைய வாக்குத் தத்தம் முதலாவது ஆபிரகாமுக்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் கொடுக்கப்பட்டது என்றும் பின்பு இஸ்ரவேல்தேசத்திற்கும் கொடுக்கப்பட்டதாகும்.

ஒப்பந்தம் இவ்வாறாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 • கர்த்தர் அவர்களுடைய(ஜனங்களுடைய ) தேவனாகவிருப்பார்.
 • ஜனங்கள் அவருடைய (கர்த்தருடைய) ஜனமாயிருப்பார்கள்.
 • கர்த்தர் ஜனங்கள்  மத்தியில் வாசம்செய்வார்.

ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாகுத்தத்தமானது ஆபிரகாமை ஆசீர்வதிப்பதற்கும் அவர் ஓர் ஜாதியாக வளர்வதற்குமாகக் கொடுக்கப்பட்டவையாகும். கர்த்தரால் கொடுக்கப்பட்ட இந்த வார்த்தைகளும் ஒப்பந்தங்களும் கர்த்தருடைய திட்டங்களை வெளிப்படித்தி  அன்று தொடக்கம் இன்றுவரையுள்ள ஜனங்கள் நன்மையடையும்படி ஏற்படுத்தப் பட்டவையாகும்.

5.நியாயப்பிரமாணத்தின் காலம்.:-நியாயப்பிரமாணம்கொடுக்கப்பட்ட நாளிலிருந்து பென்தகோஸ்தே நாள்வரை. (யாத். 19:1 இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.)

ஆதியாகமம் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.என்று தொடங்கி

யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான் என்றும் அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள். எனறு முடிவடையின்றது. அதாவது படைப்புமுதலாகத் தொடங்கி முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய முற்பிதாக்களின் சரித்திரங்களை ஆதியாகமம் கூறுகின்றது.

நியாயப்பிரமாணம்:- நியாயப்பிரமாணம் என்பது  நன்கு ஏற்பாடுசெய்யப்பட்ட சட்ட ஒழுங்குகள்மூலம் ஒரு சமுதாயத்தை ஆட்சிசெய்தலாகும் . வேதாகமத்தில், பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஒரு சிறந்த நியாயப்பிரமாணங்கள் கர்த்தரினால் தனது பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டன். அவற்றின்நோக்கம்..

1. கர்த்தரைஆராதனைசெய்வதற்கும்,

2.கர்த்தருடன்  தொடர்பு கொள்வதற்கும்

3.,ஒருவரோடொருவர் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும்

மோசேயின் நியாயப்பிரமாணமானது மற்ற நாட்டு நியாயப்பிரமாணங்களை விட பல விதங்களில் வித்தியாசமானது.மேசேயின் நியாயப் பிரமாணம் முலாவதாக அதன்தோற்றத்திலேயே வித்தியாசமானது.  அதாவது இறைவனால் கொடுக்கப்பட்டது. இந்த நியாயப்பிரமாணம் பரிசுத்தமானது, நீதியானது, சிறந்த்து. இவைகள கர்த்தரால் சீனாய் மலையில்வைத்து இறைவனால் இஸ்ரவேல் மக்களுக்காக் கொடுக் கப்பட்டவையாகும். இந்த நியாயப்பிரமாணங்கள் மக்களை ஒன்றிணைத்த்து, அவர்கள் இறைவனால் ஆதரிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக  இந்த நியாயப்பிமாணங்கள் உலகமயமானது. இந்த நியாயப்பிரமாணமான கர்த்தரின் அன்பின் வெளிப்பாடாகும். இந்த உடன்படிக்கையைகைக்கொள்பவர்கள் யாவரும் கர்த்தருடையசொந்த ஜனமாவார்கள்.( யாத். 19:5-6)

இஸ்ரவேலில் செய்யப்படும் சகல குற்றங்களும்  கர்த்தருக்கு விரோதமான வையா கும்.(1.சாமு. 12: 9-10) அவர் தனது பிள்ளைகள் தன்னையே நேசிக்கவும் சேவிக்கவும்வேண் டுமென்று விரும்புகிறார்.( ஆமோஸ் 5: 21-24) தன்னுடைய நியாய ப்பிரமாணங்களை மீறுப வர்களை அவர் நியாயாதிபதியாகவிருந்து தண்டித்து ஒழுங்குப டுத்துவார்.( யாத். 22: 21-24, உபாக. 10: 18, 19:17) அந்த்தேசத்தார் அல்லது அந்த சமூகத்தாரே நியாயப்பிரமாணத்தை நடப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டியவர்களாகும்.(உபா. 13: 6-10, 17:7, எண் 15: 32-36)

கர்த்தரின் நியாயப்பிரமாணமானது ஏனைய நாடுகளில் காணப்படும் நியாயப்பிரமாணங்களைப் போல்ல்லாது முற்றிலும் வித்தியாசமானது. இது மனித உயிர்கள் மிகவும் விலையேறப்பெற்றவை என்பதைவெளிக் காட்டுகின்றன , ஏனெனில் மனித உயிர்கள் கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்டவர்கள். வேதாகமத்தின் நியாயப்பிரமாணமானது மிகவும் நீதியும் இரக்கமும்கொண்டவையாகும். இவை மிருகத்தனமற்றவையும் கெடுதலற்றவையுமாகும். கர்த்தருடைய பார்வையில் சகலரும் சம்மானவர்களே.

மேசேயின் நியாயப்பிரமாணத்தில் காணப்படும் ¡°கண்ணுக்கு கண்¡± என்பது கொடுமையானதும் இரக்கமற்றதுமல்ல. ஆனால் நியாப்பிரமாணத்தில் காணப்படும் சம்மான சட்டமாகும்.( யாத். 21:24). ஒவ்வொரு குற்றவாளியும் கூலி கொடுத்தேயாகவேண்டும்.( எண். 35:31). பாகால் வணக்கமுள்ள தேசங்களில் பணக்கார்ர் தங்கள் குற்றங்களுக்காக பணத்தை தண்டமாகக் கொடுத்து தப்பமுடியும். கர்ரதரின் நியாயப்பிரமாணமானது விதவைகள், தகப்பனற்ற பிள்ளைகள், அடிமைகள், அந்நியன் ஆகியோருக்கு இழைக்கப்படும்  அநீதிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகின்றது.( யாத்.21:2, 20-21: , 22:21-23)

லேவியராகம்ம் 17-26 ல்  எந்விதமான சமயச்சடங்குகளுக்கான கர்த்தருடைய வழிகாட்டலும் இல்லாதபோதும் பல கல்விமான்கள்  இதனை  ¡° பரிசுத்த சட்டதொகுப்பு¡± எனக் கூறுகிறார்கள்¡±, ஆனால்  இந்த அதிகாரங்கள் தேவாலயம் பற்றியதும்,பொது ஆராதனை பற்றியதுமானதும, தன்னைப்போல் அயலவனை நேசிப்பதுப்றிறயதும், சமயச்சடங்குகள், நன்நெறிகள்  சார்ந்த குறிப்புகளை  மட்டும்மே கொண்டுள்ளன.  (லேவி. 19:18). இஸ்ரவேல் தேசத்தார் மற்ற தேசத்தாரை விட்டுப் பிரிந்திருக் வேண்டும் என்றும் கர்த்தர் பரிசுத்தமானவராகையால் பல சட்டத் தொகுப்புக்கள் பாகால் வணக்கத்தைத்  தடைசெய்கின்றது.(21:8)

உபாகமப்புத்தகம் சில வேளைகளில் உபாகமச் சட்டத் தொகுப்பு என  அழைக்கப்படுகிறது. இதில் நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. என்பது அடங்கியுள்ளது.( உபாக. 6:5) பத்துக் கற்பனையின் இரண்டாம் பதிவுபோல் இது காணப்படுகிறது (உபா. 5)

வேதாகத்திலுள்ள  சட்டத் தெகுப்புக்கள் மனிதர்களினால் இயற்றப்பட்ட சட்டத் தொகுப்புக்களில்பார்க்க மேலானது. கர்த்தர் மக்களிடம் என்னத்தை எதிர்பார்க்கிறார் என்பதையேவேதாகமச் சட்டங்கள் கூறுகின்றன. இவை கர்த்தருடைய தன்மைகளை வெளிக்காட்டும் நித்திய நன்நெறிக் கொள்கையில் தங்கியுள்ளது. ஆகவேதான் (பத்துக்கறபனை) வேதாகம நியாயப்பிரமாணம் என்பது நன்நெறிச் சட்டத்தின் சுருக்கமாகும். இது உலகிற்கான அடிப்படை நன்நெறிக் கொள்கையாகும்.

குடியியல் சட்டம் என்பது ஐந்து ஆகமங்களிலும் கூறப்பட்ட சட்டங்களை கொண்டுள்ளது. இவை குடியியல், சமுதாய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகிறது. அன்றுதொடக்கம் இன்றுவரை சட்டங்களை வழங்குபவரும் ஆளுகைசெய்பவரும் கர்த்தரே, எல்லா சட்டங்களும் அடிப்படையில் சமயஒழுக்கம் சார்ந்தவைகளே.பழைய ஏற்பாட்டில் எட்டு வகையான குடியியல் சட்டங்கள் இருக்கின்றன.

1.       தலைவரை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள்.

2.       இராணுவத்தை ஒழங்குபடுத்தும் சட்டங்கள்.

1.       குற்றவாளிகளுக்கு மதிப்பழிக்கும் சட்டங்கள்.

2.       சொத்துக்களுக்கு எதிராகச்செய்யும் குற்றங்களுடன் தொடர்புடைய சட்டங்கள்.

3.       கருணைகாட்டும்செயல்களுடன் தொடர்புடைய சட்டங்கள்.

4.       தனிப்பட்டதும் குடும்ப உரிமைகள் பற்றியதுமான சட்டங்கள்.

5.       சொத்துக்களுக்கான உரிமைகள் பற்றிய சட்டங்கள்.

6.       ஏனய சமூகப்பழக்கங்கள் ஒழுங்குபடுத்தல் சம்பந்தமான சட்டங்கள்.

6. Church கிருபையின் காலம் அல்லது தேவசபையின் காலம் :-பென்தகோஸ்தே நாளி லிருந்து இரகசிய வருகைவரை இந்தக்காலம் ஆரம்பமாகின்றது.(றோமர். 3: 24-26 , 4: 24-25) . நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதனால் இரட்சிப்புபெறமுடியாjது ஆனால்  இயேசுக் கிறிஸ்துவை  ஏற்றுக் கொள்வதன்மூலம் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும்.(யோவான் 1: 12-13, 3:36, 1 யோவான் 5: 10-12) (Acts 2:1 )

தேவசபை:- இயேசுக் கிறிஸ்த்துவை சொந்த இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றுக் கொண்டதன்மூலம் (மீட்கப்பட்டவர்கள்) விசுவாசிப்பவர்கள் கூடும் இடம்தேவசபை எனப்படும். புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு சுவிஷேசங்களில் ¡°தேவசபை¡± என்ற பதம் மத்தேயு 16:18 லும்  18:17 லும் மட்டுமே காணப்படுகின்றது.தேவசபை என்பது யேசுக்கிறிஸ்துவின் சரீரமாகும் என்றுவிளக்கப்படுகின்றது. சபைக்கு யேசுக் கிறிஸ்துவே  தலையாயிருக்கிறார்.  இயேசுக்கிறிஸ்து பரம்ஏறிய பிற்பாடு ஏற்பட்ட பென்தகோஸ்தே நாளிலிருந்து சபை ஆரம்பமாகின்றது. ( அப். 2: 1-4)

பென்தகோஸ்தே  நாளில் சபை ஏற்பட்டது என்பதை பலவழிமுறைகளில் விளங்கப்படுத்த முடியும்.

1)       கிறிஸ்து தானே சபையைக் கட்டுவேன்​ என்று கூறியுள்ளார். ( மத். 1618)

2)       சபையானது யேசுக்கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் என்பவற்றின் அடித்தளத்தின்மேல் கட்டப்பட்டதாகும்.பென்தகோஸ்தே நாள்வரும்வரை இது கட்டப்படவில்லை.( எபேசியர். 1:15-23)

3)       இந்தச் சபையானது யேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சம்பாதிக்கப் பட்டதாகும். (எபேசி. 2:13)

சபையின் இயல்பு:- சபை என்பதற்குரிய கிரேக்கச் சொல் ekklesia என்பதாகும். புதிய எற்பாட்டில் 115 தரம் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.பொதுவாக அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்திலும் அப்போஸ்தலர் பவுல் அவர்களுடைய கடிதங்களிலும்

பெரும் பாலும் காணப்படு கின்றது.காலத்தையும் இடத்தையும் வித்தியாசப்படுத்தாமல் சபையானது கிறிஸ்துவின் விசுவாசிகளை முழுவதுமாக்க் கொண்டிருக்கும். எபெசியர் 1:22 3:10-21, 5: 23-32 ஆகிய இடங்களில் சபையைப்பற்றி அதிகமாக்க் கூறப்பட்டுள்ளது.யேசுக்கிறிஸ்து மீண்டும்வந்து நியாயத்தீர்ப்புசெய்தபின்பு மீட்கப்பட்ட யாவரும்ஓரிடத்திலு கூடும்வரை சபையின் செயற்பாடானது முற்றுப்பெறாது(Heb. 12:23; Rev. 21–22).

கட்டளை-:-யேசுக்கிறிஸ்துதன்னுடைய உயிர்த்தெழுந்தபிற்பாடு  சபைக்கு சீஷர்களை  உருவாக்கி தான் போதித்தவைகளை கற்பிக்கும்படி கட்டளையிட்டார், (Matt. 28:16–20). இந்தக்கட்டளைக்கு உண்மையாயிருப்பதற்கு ஆரம்பசபைகளில் நடைபெற்ற சம்பவங்களை அப்போஸ்தல நடபடிக்கைப் புத்தகத்தில் நாம் வாசிக்கலாம். இவற்றை நாம் வாசிக்கும்போது, பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தினால் கிறிஸ்துவின் உண்மைத் தன்மை மனதில் ஆழப்பதிவதை உணரமுடியும், அத்துடன் சபையை இந்தக்கட்டளைளை நிறைவேற்றும்படி வழிநடத்துவதையும் உணரமுடியும்.

செயற்பாடுகள்:- ஆரம்பத்தில் சபையானது  யூதர்களின் விசுவாசக்கூடாரத்திலும் (Jewish synagogues,) விடுகள்தோறும் ஒன்றுகூடினர். பிற்பாடு, கிறிஸ்துவின் உயிர்தெழுதலை நினைவுகூரும் வண்ணமாக வாரத்துன் முதலாம் நாளாகிய  ஞாயிற்றுக்கிழமை பொது ஆராதனை நாளாக மாற்றப்பட்டது.பொது ஆராதனைகள்மூலமும், மிஷனறி ஊழியங்கள்மூலமும் கிறிஸ்து அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்.

ஆரம்ப கிறிஸ்தவ ஆராதனைகளில்,ஜெபம் ஏறெடுக்கப்பட்டது, கர்த்தருடைய நாளில் மட்டுமல்ல, ஆனால் விஷேசித்த சந்தர்ப்பங்களிலும் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது.( (Acts 12:5), அத்துடன் வேதாகமம் வாசிக்கப்பட்டது, (James 1:22; 1 Thess. 5:27).யேசுக்கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும்படியாகவம், இரண்டாம் வருகையை எதிர்பாத்தும், அத்துடன் அவரது சரீரத்திலும் இரத்தத்திலும் பங்குபற்றும் வண்ணமாக (1 Cor. 11:20–29).   கர்த்தருடைய நாளில் அப்பம்பிட்கப்படுதலும் பாத்திரத்தில் பானம்பண்ணுதலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தேவைப்படுவோருக்கு வேண்டிய காணிக்கைகளும் பெறப்படுகின்றன. (1 Cor. 16:2).

ஒழுங்கமைத்தல்.:- சபை நிர்வாகத்தின் ஆரம்பகாலங்களில் பலதரப்பட்ட தேவைகளைச் சந்திக்கவேண்டியிருந்ததால், நிர்வாகத்தில் தளர்ச்சி  காணப்பட்டது. சபை வளர்ச்சியடைந்துவரும் காலங்களில், எப்படியோ சபை நிர்வாகிகள் உருவாகினார்கள். அப்போஸ்தலர்கள், கண்காணிகள், மூப்பர்கள், சுவிஷேசகர்கள், ஊழியக்கார்ர்கள், தீர்க்கதரிசிகள்,போதகர்கள், டீக்கன்மார்கள்போன்றவர்கள்  நிர்வாகிகளாவர். சபைநிர்வாகங்கள் சமயப்பிரிவுகளுக்கிடையில்வேறுபட்டுக் காணப்படுகின்ற போதிலும் புதிய ஏற்பாட்டின் நோக்கமும் கருப்பொருளும்

சபைகளுக்கு மாதியாகத் தொடர்ந்தும் காணப்படுகின்ற அதேவேளையில் மிஷனறிவேலைத்திட்டம் உலகத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன.

7. Kingdom:தேவராஜ்யம்:- கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சி

உபத்திரபகாலத்திற்கு முன்பாக சபை எடுத்துக் கொள்ளப்படும். கிறிஸ்துவும் அவருடைய பரிசுத்தவான்னளும் பூமிக்குவந்து ஆயிரம்வருடங்கள் அரசாளுவார்கள் என்று கூறப்படுகின்றது. (Rev. 20:1–9). இந்த ஆயிர்வருட அரசாட்சிபற்றி பழைய ஏற்பாட்டு பகுதிகளும் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. (Is. 11:4; Jer. 3:17; Zech. 14:9) இவைகளும் இன்னும்வேறுபல பழையஏற்பாட்டுப்பகுதிகளும் ஆயிரம்வருட அரசாட்சிபற்றி ஆராய்வதற்காக எடுத்துக்கூறப்பட்டுள்ளன.. ஆயிரம்வருட அரசாட்சியில் பிசாசானவன் ஜனங்களை வஞ்சியாதபடிக்கு பாதாளத்தில் தள்ளப்படுவான்,  பின்ப சிறிது காலம் விடுதலையாக்கப்படுவான். (Rev. 20:3, 7–8). ஆயிரம்வருட அரசாட்சிக்குமுன்பு கிறிஸ்துவுக்காக  விசுவாசமுள்ளவர்களாய் இரத்தசாட்சிகளாய் மரித்தவர்கள் உயிர்த்தெழுவார்கள். அவர்கள் கறிஸ்துவுடனேகூட அரசாளுவார்கள்.( (Rev. 20:4). ஆயிரவருட அரசாட்சிக்குப்பின்பு, சாத்தான் தன்னுடைய வஞ்சனைவேலைகளில் ஈடுபடுவதற்காக மீண்டும் விடுவிக்கப்படுவான். (Rev. 20:7–8).

கிறிஸ்துவின் அரசாட்சி நடைபெறுவதே ஆயிரம்வருட அரசாட்சியின் சிறப்பம்சமாகும். அவருடைய எதிரிகள் அவருக்கு பாதபடியாக்கப்படும்வரைக்கும் அவருடைய ஆட்சி நீடிக்கும்.

கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார் என்று சங்கீதக்கார் கூறுகின்றார். (Ps 110:1 )

நன்றி

திராணி

You can leave a response, or trackback from your own site.

5 Responses to “கர்த்தரின் நிர்வாக முறமைகள்…..”

 1. Dr.Susila Kirubavathy says:

  I like to read more on end time prophesy fulfillment

 2. john jebaraj says:

  it is so imperessive

 3. john jebaraj says:

  it is really impressive

 4. A.C.Stephen says:

  What a wonderfull article with more details. It’s all quoted from the Bible. Very Good God bless you

 5. V.Manoharan says:

  It is really blessing lessons

Leave a Reply