2012ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தம்

2012 ஆம் ஆண்டு உங்களுக்கு தேவ சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவருவதாக, கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் சபைகளிலும், உங்கள் வீடுகளிலும் நிறைந்திருப்பதாக. ஆமேன்.

இந்த 2012ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தம்

கர்த்தரைத்தேடுகிறவர்களுக்கோஒருநன்மையுங்குறைவுபடாது.

 

 

கர்த்தரைத் தேடுவதனால் ஏற்படும் நன்மைகள்குறித்து சில வேத வசனங்களைப் பார்ப்போமாக.

 

 • சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. (சங்கீதம் 34 : 10)
 • உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய். (உபா. 4:28)
 • நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார். (1.நாளா 28:9)
 • முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். (மத். 6:33)
 • இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்

(1 இரா.3:13)

 • நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.( சங் 37:25)
 •  கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.( சங் 55:22)

 

 

தேவனுடன்  ​வாழ்து உயிரோட பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இருவரைப்பற்றி வேதாகம்ம் கூறுகின்றத

 1. 1.      ஏனோக்கு  2. எலியா. ​

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப் படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.( ஆதி 5:24)

ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக் தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைக ளெல்லாவற் றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். (யூதா14-15)

 

ஏனோக்கு வாழ்ந்த காலம் மிகவும்பாவம் நிறைந்த காலமாகும். ஆனாலும் அவர் தேவனோனோடு பேசினார், அவருடைய விருப்பங்களைத் தான் செய்யவேண்டும் என்ற வாஞ்சையுடன் செயற்பட்டார்.மரணத்தைக்காணாமல் தேவன் அவரை உயிருடன் எடுத்துக் கொண்டார். நாமும் தேவனுடன் வாழும் வாழ்வை இந்த 2012 இல் ஆரம்பிப்போமாக..இந்த நாள்கள் தேவனுடைய இரகசிய வருகைக்குரிய நாட்களாக இருக்கலாம் .ஆகவே நாம் மனம்திரும்பி தேவனைத் தேடுவோமாக. ​தேவன் நல்லவர், அவர் எங்கள்மீது மிகவும் அன்பாகவே இருக்கின்றார். அவரது முகத்தை அனுதினமும் தேடுவோமாக.

 1. ஏனோக்கு என்பதன்பொருள் அர்ப்பணித்தவர் அல்லது ஆரம்பித்தவர்
 2. சீர்கேடு நிறைந்த காலத்தில் வல்லமையான ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்தவர்
 3. ஏனோக்கு மிகவும் கஸ்டமானதும் சிக்கலான பாதைகளுக்கூடாக தேவனோடு நடந்தவர்.கஸ்டமானவேளைகளிலும் ஆபத்துநிறைந்ந பாதைகளிலும் கர்த்தரே போதுமானவர் என்றும் அவர் தன்னைப் பாதுகாப்பார் என்றும் நம்பி கர்த்தரோடு நடந்தவர்.
 4. கர்த்தரோடு நடப்பதற்கு எப்போதும் கர்த்தரை எங்களுக்குமுன்பாக றிறுத்த வேண்டும்
 5. கர்த்தரோடு வாழும் வாழ்க்கை என்பது அவரோடுபேசி வாழ்வதும் அவரோடு நடத்தலுமாகும்
 6. கர்த்தருடைய வார்த்தை எங்களை ஆளுகைசெய்ய வேண்டும், அவருடைய மகிமை எங்கள் விருப்பமும் செயலுமா யிருத்தல்வேண்டும்
 7. கர்த்தருடன்  நடத்தல் என்பது, எங்கள் விருப்பத்திற்கு செயற்படாதிருத்து, அவருடைய விருப்பத்திற்கு இசைந்து நடத்தலும்

எலியா தேவனால் அழைக்கப்பட்ட ஒரு உண்மையுள்ள தீர்க்கதரிசியாவார்.  அவர் வாழ்ந்த காலம் பாகால் வணக்கம் மக்களிடையே ஆதிக்கம் செலுத்திய காலமாகும்.

கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை இராஜரவை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:

நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டை யிலே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும்  இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர் நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். (1 இராஜா 17: 1-7)

இவ்வாறுதேவனோடு சஞ்சரித்தவர் எலியா. இன்னும் பல அதிசயங்களை அவர்மூலமாக கர்த்தர் நடப்பித்தார். அவரும் தேவனோடு நடந்தபடியால் அவரையும் மரணத்தைக்காணாமல் உயிருடன் பரத்திற்கு எடுத்துக் கொண்டார்.

 

இந்த 2012 ம் வருடத்தில் சிலவேளை இயேசுவின் இரண்டாம் வருகை அதாவது இரகசிய வருகை நடைபெறலாம்.அந்த இரகசியவருகையில் நாமும் தவறாது எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமாயின் நாமும் கர்த்தருடன் அனுதினமும் நடக்கப்பழகிக் கொள்ள வேண்டும்.

2012 இல் நாம் கைவிடாதிருக்க வேண்டியவிடயங்களை கீழே கொடுத்துள்ளேன் அவற்றைத் தவறாமல் பின்பற்றி வருகையில் எடுத்துக் கொள்ளப்பட ஆயத்தமாவோமாக.

 1. கர்த்தருடன் இணைந்திருப்பதை கைவிட்டு விடாதே
 2. திருமுழுக்கு பெறுவதற்கும் கர்த்தருடைய இராப்போஷனத்தில் பங்கு பற்றுவதற்குமான விதி முறைகளைக்கைவிடாதே
 3. கிறிஸ்த்துவை அறிக்கை செய்பவர்களுக்கு இனிமையான வாக்குத் தத்தம் உண்டு—அதை எந்தவகையிலும் தவறவிட்டுவிடாதே
 4. உன்னிடம் தாலந்துகள் காணப்படுமாயின் அவற்றை உபயோகிப்பதை கைவிட்டுவிடாதே
 5. உன்னுடைய செல்வங்களை முடக்கிவையாதே, காலத்தை வீணடிக்காதே, உன்னுடைய திறமைகளை துருப்பிடிக்க விடாதே, உன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தாமல் இருக்காதே
 6. கர்த்தருடன் கிட்டிச்சேருவதை கைவிட்டுவிடாதே
 7. உடன்படிக்கையின்  ஆசீர்வாதங்களைக் கைவிட்டுவிடாதே
 8. தெய்வீகவாழ்வில் முன்னேறுவதை கைவிட்டுவிடாதே
 9. ஜெபம்செய்வதை கைவிட்டுவிடாதே.

வெளிப்படுத்தல் புத்தகத்தில் தேவனுடைய வேலைகளைச் செய்பவர்கள் தேவசமூகத்தில் வாழ்வதை 7ம் அதிகாரத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதைப் பார்க்க முடியும் .நாங்களும் அவர்களைப் போல் தேவசமூகத்தில் வாழவேண்டும், இதுவே நாம் இரட்சிக்கப் பட்டதன் நோக்கமாகும். இயேசுக்கிறிஸ்துவின் இந்த நோக்கத்தை நாம் நிறைவு செய்தலே அவருக்கு நாம் செய்யும் பிரதியுபகாரமாகும்.

யோவான் கண்ட தரிசனத்தின்ஒருபகுதியைப்பார்ப்போகமா

(வெளி.7: 9-17)

 

இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.

அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்:

இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்;

இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.

ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்;  சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.

இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.

சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து,

இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

 

இந்த சம்பவத்தை குறித்து ஒரு பரிசுத்தவானால் எழுதப்பட்ட ஒரு பாடலை உங்கள் கவனத்திற்குத் தருகிறேன், அதனையும் வாசித்து நன்மையடைவீர்களாக.

 

 

 

 

 

 

 

பாடல்.

அழகாய் நிற்கும் யார் இவர்கள்

திரளாய் நிற்கும் யார் இவர்கள்—-சேனைத் தலைவர்

நம்  இயேசுவின் பொற்தளத்தில்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்

1

ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ

ஐந்து  தாலந்தோ உபயோகித்தோர்

சிறிதானதோ பெரிதானதோ

பெற்ற பணிசெய்து முடித்தோர்    (அழகாய் )

2

காடு மேடு கடந்து சென்று

கர்த்தர்  அன்பைப் பகிர்ந்தவர்கள்

உயர்வினிலும்  தாழ்வினிலும்

ஊக்கமாக ஜெபித்தவர்கள்       (அழகாய் )

3

தனிமையிலும் வறுமையிலும்

லாசரு போன்று  நின்றவர்கள்

யாசித்தாலும் போசித்தாலும்

விசுவாசத்தைக்  காத்தவர்கள்    (அழகாய்)

4

எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம்

எல்லா மொழியும் பேசும் மக்களாம்

சிலுவையின் கீழ் யேசு இரத்த்த்தால்

சீர் போராட்டம் செய்து முடித்தோர்    (அழகாய்)

5.

ஒன்றே ஒன்று  என் வாஞ்சையாம்

அழகாய்நிற்போர் வரிசையில் –நான்

ஓர் நாளில்  நின்றிடவும்

இயேசு தேவா அருள்புரியும்.    (அழகாய்)

 

 

 

 

2012 ஆம் ஆண்டுமுழுவதும்

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

 

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

 

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே. ஆமேன்.

 

நன்றி

திராணி

01-01-2012

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply