இயேசுக்கிறிஸ்துவின் கடைசிவாரச் செயற்பாடுகள்.

இயேசுக்கிறிஸ்துவின் கடைசிவாரச் செயற்பாடுகள்.தினம் நிகழ்வு
ஞாயிறு

ஜெருசலேம்நகருக்குள் வெற்றிப்பவனி மாற்கு 11:1-11
திங்கள்

ஜெருசலேம் ஆலயத்தை துப்பரவு செய்தல் மாற்கு11:15–19
செவ்வாய் 1

. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் இயேசு எந்த அதிபகரத்தினால் செயற்படுகிறார் என்று வாதிடல். லூக்கா 20:1-8
2. ஜெருசலேமின் அழிவையும் தன்னுடைய இரண்டாம் வருகையையும் முன்னறிவித்தல். மத். 24; 25
3. மரியாள், நளதம் என்னும் தைலத்தை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள் யோவான்.12:2-8
4. யூதாஸ் என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலை வர்களிடத்திலும் போய், இயேசுவை காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான். லூக்கா 22:3–6
வியாளன்

1. பஸ்காப்பண்டிகை,போஜனத்தை சீஷர்களுடன் சேர்ந்து இயேசு உண்ணுதலு, சீஷரகளின் கால்களைக் கழுவுதல். John 13:1-30
2. இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதிதலும், பின்பு, பாத்திரத்தையும் எடுத்து இது அநேகருக்காகச் சிந்தப் படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்த மாயிருக்கிறது என்று சொல்லி ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குப்பானம்பண்ணக் கொடுத்தலும். Mark 14:22–26
3. இயேசு தம்முடைய சீஷர்களைப்பாதுகாத்துக் கொள்ளும்படி பிதாவினிடத்தில் வேண்டிக் கொள்ளுதல். John 17
வெள்ளி

1. கெத்சமெனே தோட்டத்தில் இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும், அவரைக்கைதுசெய்லும். Mark 14:43-50
2. பிரதான ஆசாரியனான அன்னாலினால்இயேசு விசாரிக்கப்படல் John 18:12–
3. ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுமீது குற்றங்காணப்படல். Mark 14:53-65

4. பேதுரு மூன்றுமுறை மறுதலித்தல். John 18:15–27

5. ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுமீது குற்றங்காணுதல். Luke 22:66-71
6. யூதாஸ் வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். Matt. 27:3–10
7. இயேசுவைவிசாரணைக்காகபிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: Luke 23:1-5
8. இயேசு ஏரோதுவினிடத்திற்கு அனுப்பப்படல் Luke 23:6–12
9. பிலாத்து யேசுவிற்கு மரணதண்டனை தீர்ப்புசெய்தல். Luke 23:13-25
10. இயேசுவை அடித்து வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். Mark 15:16–27
11. இயேசு மரித்தவுடன்அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. Matt. 27:51-56
12. இயேசுவை அடக்கம் செய்தல். John 19:31–42

இயேசுமீது மேற்கொள்ளப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது மத்தேயு 26:59

1. விசாரணைக்கு முன்பாகவே இயேசுவைப்பிடத்து கொலைசெய்யவேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள். ( மாற்கு 14:1;)

2. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; (மத்தேயு 26:59).

3. இயேசுவிற்காக வழக்காட யாரும் நியமிக்கப்படவில்லை(லூக்கா22:67-71).

4. விசாரணை இரவில் நடத்தப்பட்டது.(மாற்கு 14:53-65; 15:1), இவ்வாறான விசாரணை சட்டவிரோதமானது.

5. ஜீவனுள்ள தேவன்பேரில் ஆணையிடப்பட்டு விசாரிக்கப்பட்டார்.பின்பு அவருடைய பதிலின்மூலம் குற்றம்சாட்டப்பட்டார். (மத்தேயு 26:63-66).

6. விசாரணைகள் நடக்கும் இயேசுவின விசாரணைநடத்தப்படவில்லை ஆனால் பிரதான ஆசாரியரின் வீட்டில் நடத்தப்பட்டது, இது சட்டவிரோதமானது. (Mark 14:53-65).

.சமயத்தலைவர்கள் அனைவரும் இயேசுக்கு விசாரணையில் சாதகமான தீர்ப்பு வழங்கவேண்டும் என்று விரும்பவில்லை, மாறாக இயேசு கொலை செய்ய ப்படவேண்டும் என விரும்பினார்கள். கண்மூடித்தனமானசெயற்பாடுகளால் சட்டத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக சட்டத்தைப் புரட்டினார்கள். இயேசுவின் விடயத்தில் இவர்களால் மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்கைகளும் சட்ட விரோதமானவையாகும்.

 • சிலுவையில் தொங்கியபோது இயேசுபேசிய கடைசி ஏழு வார்த்தைகள் மத்.27:46, லூக் 23:46


1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். (லூக்கா23:34 )

2. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ( லூக்கா 23:43)

3. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். (யோவான் 19:26-27)

4. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.( மத்27:46; மாற்.15:34)

5. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். (யோவான் 19:28)

6. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். . (யோவான்.19:30)

7. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.. . ( லூக்கா.23:46)

 • சிலுவை என்பதன் அர்த்தம் என்ன / Luke23:26

சிலுவை என்பது

• மீட்பு கொடுக்கும் இடமாகும்—–விசுவாசிகளின் பாவத்தின் கிரயத்தையேசுகொடுத்தார். (மாற்கு10:45, 1.திமோத்தி2:6 , எபிரேயர்9:15)
• குற்றவாளிக்குப் பதிலாக நீதிமானாகிய இயேசு தொங்கிய இடமாகும்——- மற்றவர்களின் தண்டனையை இயேசுபெற்றுக் கொண்டார். (யோவான் 6:51, ரோமர். 8:3, 2.கொரி 5:21)
• குற்றங்களை மன்னித்துத் தேற்றும் இடம்.——இயேசுவின் பூரணபலியானது அவரைவிசுவாசிப்பவர்களுக்கு பிதாவின் தண்டனையை அகற்றியது. (ரோமர் 3:25)

• வெற்றிபெற்றுக் கொள்ளும் இடமாகும்.——மனிதவர்கத்தின் மீது பிசாசுவைத்த பிடியை இயேசுவின் பலிதோற்றடித்த்து (யோவான். 3:14-15; 8:28; 12:31-32; 18:32)
• சபையின் ஆரம்ப இடமாகும்—–இயேசுவின் இரத்தம்சிந்துதல் சபையை ஆரம்பித்த்து. Acts 20:28
• பலிகளை முடிவுசெய்யும் இடம்.—இயேசுவின் பலி சகல மற்றயபலிகளையும் முடிவிற்குக் கொண்டுவந்த்து. (எபிரேயர். 8–10)
• பரிசுத்தவான்களை வேறுபிரிக்கும் ஓர்இடமாகும்.—–இயேசுவின் மரணம் மூலம் கர்த்தர் தனக்கென ஒரு பரிசுத்த கூட்டத்தைவேறுபிரித்துக் கொண்டார். 1 பேதுரு 1:2, 18-25; 2:1-11
• மத்தியஸ்தம்செய்யும் இடம்.—பரிசுத்த தெய்வத்திற்கும் பாவ ஜனத்திற்குமிடையில் மத்தியஸ்தராக இயேசு வந்தார். (கலாத்தியர். 3:13, 19-20)
• ஒற்றுமைப்படுத்தும் ஓர் இடமாகும்—இயேசு பாவிகளையும் கர்த்தரையும் ஒற்றுமைப்படுத்தினார், புறஜாதியினரையும் யூதர்களையும் ஒற்றுமைப்படுத்தினார். (ரோமர் 5:8-11 2 கொரி5:20-21 எபேசி 2:11-22 Colossians 1:21-22; 2:11-15)
• நியாயப்படுத்தும் ஓர் இடமாகும்— இயேசுக்கிறிஸ்துவின் மரணத்தினால் விசுவாசிகளை கர்த்தரின்முன்பாக நீதிமான்களென்று நியாயப்படுத்த முடிகிறது. (ரோமர் 3:21-31)

 • உயித்தெழுதல் ஏன் இவ்வளவு முக்கியமானது? (லூக் 24:5-7)

• யேசுக்கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்தெழுந்த்து கிறிஸ்தவ சரித்திரத்தின் மையப் பகுதியாகும்..
• இதன்மீது சபை கட்டப்பட்டுள்ளது. இந்த உயித்தெழந்த நம்பிக்கையின்றி கிறிஸ்தவ சபை ஒன்றுமேயில்லை.
• இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகரற்றது
• கிறிஸ்தவத்தில் மட்டும் கடவுள் மனிதனாக அவதரித்து, தன்னுடைய மக்களின் பாவங்களுக்காக மரித்து பின்பு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, தன்னுடைய சபையாகிய மக்களை ஆளுகைசெய்துகொண்டுவருகின்றார்.

1. . கிறிஸ்து மரணத்திலிருந்து உயித்தெழுந்தபடியால், பரலோக ராஜ்ஜியமானது உலகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது என்பதனை கிறிஸ்தவர்கள் அறிந்துள்ளார் கள்.உலகமானது அழிவுக்கல்லாமல் மீட்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கி ன்றது. கர்த்தருடைய சர்வவல்லமையானது பாவத்தை அழித்துக் கொண்டி ருக்கிறது, புது சிருஷ்டியை உருவாக்கிக் கொண்டு வருகிறரு, விசுவாசிகளை இயேசுவின் இரண்டாம் வருகைக்காக ஆயத்தமாக்கி வருகின்றது.

2. கிறிஸ்துவின் உயித்தெழுதல்மூலம், மரணமானது வெற்றிகொள்ளப்பட்டுள்ளது என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்துள்ளார்கள், அதுமட்டுமல்லாமல் தாமும் ஓர்நாள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடு என்றென்றும் வாழ்வார்கள் என்பதையும் அறிந்துள்ளார்கள்.

3. கிறிஸ்துவின் உயிர்தெழுதலானது உலகத்திற்குச் சாட்சியாக சபை அதிகாரத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. கிறிஸ்தவ சுவிஷேச ஊழியர்கள் இயேசுக்கிறிஸ்து உயிர்த்தெழுந்து ஜீவிக்கின்றார் என்று தங்கள் பிரசங்கங்கள்மூலம் பறைசாற்றிக்கொண்டுவருகிறார்கள்.

4. மிகவும் உபத்திரமான சூழ்நிலைகளில் கிறிஸ்தவர்களால் உயிர்த்தெழுதலின் உண்மையான கருத்தைக் கண்டுனொள்ள முடிகிறது. கிறிஸ்தவ்வாழ்வில் கர்த்தரோடு நடக்கும்போது எதுநடந்தாலும் பரவாயில்லையென்றும்,ஓர்நாள் உயிர்தெழுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றார்கள்.

5. .கிறிஸ்துவின் உயிர்தெழுதலானது கிறிஸ்து உயிரோடு இருந்து தன்னுடைய இராஜ்ஜியத்தை ஆளுகைசெய்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது, கிறிஸ்து உயிர்த்தெழுந்த்து கட்டுக்கதையல்ல, அவர் உண்மையாகவே இன்றும் ஜீவிக்கின்றார்.

6. . கிறிஸ்துவை உயிர்த்தெழப்பண்ணின கர்த்தருடைய வல்லமையானது விசுவாசிகளையும் உயித்தெழப்பண்னும், ஆகவே அசுத்தமான இந்த உலகத்திலும் கிறிஸ்துவிற்காக அவர்களை வாழச்செய்யும்.

7. கிறிஸ்தவர்களிடையே வாழ்க்கை முறையில், நம்பிக்கைகளில், அரசியலில் முரண்பாடுகள் காணப்படலாம், ஆனால் இயேசுக்கிறிஸ்து உயிர்த்தெழந்து நீவிக்கின்றார் என்பதே அவர்களின்மையப்பகுதியாகவிருக்கின்றது.

 • இயேசுக்கிறிஸ்து உயித்தெழுந்தபின்பு காணப்பட்ட இடங்கள்.

மத் 28:19-20 ,மாற்.16:7; லூக் 23:46; யோவான் 20:10; 1 கொரி. 15:5

கிறிஸ்தவத்தின் உண்மைத்தன்மையானது உயிர்த்தெழுதலிலேயே தங்கியுள்ளது. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை கண்டவர்கள் யார்? அவரைக்கண்டார்கள் எனறசெய்து உலகத்தை லைகீழாக மாற்றியது.அவர்களில் அனேகர் கிறிஸ்துவைப்பின்பற்றியவர்கள், அவர்களும் இறந்துவிட்டார்கள். அரைகுறை நம்பிக்கைகளுக்காக மக்கள் உயிரைக் கொடுக்கமாட்டார்கள். கீழே குறிப்பிடப்பட்டவர்கள் இயேசுக்கிறிஸ்து கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததைக் கண்டவர்கள்.

1. மகலதேனா .மரியாள் . . . . . . . . .மாற்.16:9-11; யோவா 20:10-18

2. கல்லறையில் காணப்பட்ட மற்றபெண்கள். . . . மத். 28:8-10
3. ஜெருசலேமில் பேதுரு . . . . . . . . . . .லூக்24:34; 1 கொரி 15:5
4. .பாதையில் பிரயாணம்பண்ணின இருவர் . . . . .மாற்16:12-13; லூக் 24:13-35
5. பூட்டப்பட்ட வீட்டிலிருந்த பத்து சீஷர்கள்.. . . . . மாற் 16:14; லூக் 24:36-43; யோவா 20:19-25

6. தோமா உட்பட பதினொரு சீஷர்கள். . . . யோவா 20:26-31; 1 கொரி 15:5

7. கலியேகடலில் மீன்பிடத்த ஏழு சீஷர்கள்.. . . . . . . . . . . . . . . . யோவா. 21:1-14

8. கலிலேய மலைப்பகுதியில் பதினொரு சீஷர்கள்.. மத் 28:16-20; மாற் 16:15-18

9. 500 ஜனங்கள். . . . . . . . . . . . . . . 1 கொரி 15:6

10. இயேசுவின் சகோதரன் யாக்கோபு . . . . . . . . . . . 1 கொரி 15:7

11. இயேசு பரலோகம் எடுத்துக் கொள்ளப்படும்போது பார்த்தவர்கள்.. . . . . . . . . . . . . . . . . மாற் 16:19-20; லூக் 24:44-49; அப்1:3-8

 • கடுந்தயரங்கள் ஏற்படுத்தும் ஏழு ஐயோ / Matthew 23:14

இயேசுக்கிறிஸ்து கர்த்தருடையகோபத்தை ஏற்படுத்து ஏழுவழிகளைக் கூறியுள்ளார்.
.இந்த ஏழு அறிவிப்புக்களையும் சமயத் தலைவர்கள் மகவும் துக்கத்தோடும், நிஞயம் தீர்க்கும் தேரணையிலும் சொலுலுவதுண்டு. அவைகள் மிகவும் கடுமையானவைகளும் மறக்க கூடாதவைகளுமாகும். அவைகள் இன்றும் பயன்படுத்தக் கூடியவையாகவிருக்கின்றன, நாங்கள் சமயக்கலாச்சாரங்களில் ஈடுபடும்போது, நாங்கள் கர்த்தர் இரக்கமுள்ளவர் என்பதையும், உண்மையான அன்பு கொண்டவர் என்பதையும், அவர் மன்னிக்கிறவர் என்பதையும் மறந்து விடுகிறோம்.

1. நீங்களும் பரலோகம்செல்லாமல், மற்றவர்களையும் தடுக்கிறவர்களுக்கு ஐயோ. மத்.23:

2. உங்களைப்போல் இருக்கும்படி மற்றவர்களை கர்த்தரைவிட்டு தூரப்படுத்துகிற உங்களுக்கு ஐயோ (மத்.23:15)

3. கண்மூடித்தனமாக ஜனங்களை வழிநடத்தி, கர்த்தரின் வார்த்தையின்படி நடக்கவிடாமல் மனித சம்பிரதாயங்களில் வழிநடத்துகிறவர்களுக்கு ஐயோ (மத்.23:16-22 )

4. நீதியையும், இரக்கத்தையும்,விசுவாசத்தையும் விட்டு விலகப்பண்ணி, வேறு விடயங்களில் வழிநடத்துகிற உங்களுக்கு ஐயோ (மத். 23: 23-24)

5. உள் அசுத்த்த்தைப் பாராமல் வெளித் தோற்றத்தைப் பார்க்கிற உங்களுக்கு ஐயோ (மத்.23:25-26)
6. பாவத்தை மறைக்கப் பரிசுத்தமாக நடிப்பவர்களுக்கு ஐயோ (மத். 23:27-28)

7. படித்தவர்கள்போல் பாசாங்கு பண்ணி நடத்தையில் மோசமாக இருப்பவர்களுக்கு ஐயோ(.மத்.23:29-36)

நன்நி
திராணி

 

You can leave a response, or trackback from your own site.

2 Responses to “இயேசுக்கிறிஸ்துவின் கடைசிவாரச் செயற்பாடுகள்.”

 1. diva says:

  Hello Sir your web page is printed for me but font size is:5 so please give me a font size size is 14. your page is not clear for printing paper

 2. Yesudason says:

  A reliable source to realize God.thanks a lot.

Leave a Reply