கர்த்தர் எங்களுடன் எப்படிப்பேசுகின்றார்.

1. தன்னுடையவேதாகமத்தின் வார்த்தைக்கூடாக எங்களுடன்பேசுகிறார்.

வேதாகமம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு 40தேவ மனுசர்களினால் எழுதப்பட்வை..அதில் பழைய ஏற்பாட்டில் 39 புத்தகமும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகமுமாகமொத்தம் 66 புத்தகங்ளைக்கொண்டுள்ளது. இவை வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றோடொன்று தொடர்புள்ளதாவே காணப்படுகின்றன. அனுதினமும் இந்த வார்த்தைளை நாம் வாசிக்கும்போது அவை எங்களுடன் பேசிக்கொண்டேயிருக்கின்றன. எங்களுடைய சகலகேள்விகளுக்கும் வேதாகமத்திற்குள் விடை காணப்படுகின்றது அவற்றை புரிந்துகொள்ளும் கையில் மன அமைதலுடன் நாம் அவற்றை வாசிக்கும்போது அவை எங்களுடன் பேசுவதை நாம் உணர்ந்து கொள்வோம்.ஆனால், கர்த்தரடைய வார்த்தையைக் கவனிப்பது மட்டுமல்ல அதன்படி நாம்செயற்படலும்வேண்டும். அப்படி நாம்செய்யாவிடில் எங்ளை நாங்ளே ஏமாற்றுபவர்களாகவிருப்போம். வார்த்தயை அவதானித்தும் அதன்படி நடக்காதிருப்போமாகில் கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பவர்களைப்போலவே நாமும் இருப்போம். அதாவது கண்ணாடியில் எங்கள் தவறுகள் சுட்டுக்காட்டப்படும் அதனை சீர்செய்ய மறுப்பவர்ளேப்போலக் காணப்படுவோம்.(யாக்கோபு 1:22-23)

வானமும்பூமியும்ஒழிந்துபோகும், என்னுடைய வார்த்தைளோ ஒழிந்துபோகாது என்று  இயேசுசொன்னார்..(மத்தேயு 13:31)

ஆம் அந்த வார்த்தைகள் வேதாகாமம் மூலமாக எங்களுடன் பேசிக்கொண்டே இருக்கும்.

வேதவாக்கியங்கள் எல்லாம்தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது ,தேவனுடைய மனுசன் தேறினவனாகவும் ,எந்த நற்கிரிகயைச் செய்யத்தக்க தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக , அவைகள் உபதேசத்திற்கும் , கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் ,படிப்பித்தலுக்கும், பிரயோசனமுள்ளவைகளாக இருக்கிறது. (2 திமேத்தி 3:16-17) அவற்றைக்கேட்டு அதன்படிசெய்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று இயேசுசொன்னார்.(லூக்கா.11:28)

  1. 2. தீர்க்கதரிசிகள் மூலமாக.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கர்த்தர் ஜனங்களுடன் பல தீர்க்கதரிசிகளிற்கூடாகப் பேசியுள்தை நாம் பார்க்கலாம்.

நோவா நீதியைக்குறித்துப்  பேசுவதற்காகப் பயன்படுத்தப்பட்டார்( 2 பேதுரு 2:5)

மேச பிரதான தீர்க்கதரிசியாக எண்ணப்பட்டார். அவர் அதிக புத்தகங்ளை எழுதியுள்ளார்.( உபாகமம். 34:10-12) அவருக்குப்பின்பு ஜனங்களை வழிநடத்திய யோசுவாவும் தீர்க்கதிரிசியின் வேலையைச் செய்தார்.( உபாகமம் 34:9,யோசுவா 1:1, 5.)

எபிரேய ஜனங்கள் கானான் தேசத்திற்குள் நுழைந்தபிற்பாடு பலதீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் ஜனங்ளைப் பாதுகாப்பதற்காகவும் தேசத்தைப் பாதுகாப்பதற்காகவும் தோன்றினார்கள்..

முழுத்தீர்க்க தரிசிகளுள் சிலதீர்க்கதரிசிளே வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளார்கள்.

அனேகமான தீர்க்கதரிசிகள் அறியப்படாதவர்களாகிவிட்டார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள்செய்திளை எழுத்தில் வடிக்கவில்லை. அவர்கள்  வாய்மொழி மூலமாகப் பிரச்னைகளை வெளிப்படுத்தினார்களே தவிர எழுத்து வடிவில் உருவாக்கவில்லை.

.

யோசுவாவிற்குப்பிற்பாடு ஜனங்கள்  விக்கிரக வணக்கத்தை மேற்கொண்டபோது பெயர் குறிப்பிடாத தீர்க்கதரிசிமூலமாக கர்த்தர் எகிப்திலிருந்து விடுவித்தை ஞாபகப்படுத்தினார். (நியாயாதிபதிகள். 6: 7-10)

சாமுவேல் தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், நியாயாதிபதியாகவும் செயற்பட்டார்.இப்படி பல தீர்க்கதரிசிகளுக்கூடாக தேவன் ஜனங்களோடு பேசி அவர்ளை வழிநடத்தியதை வேதாகமத்தலே நாம் காணலாம்.வேதாகமத்தில் எழுத்து வடிவில் ஏசாய தொடங்கி மல்கியாரை 17 தீர்க்கதரிசிகள் ஜனங்களோடு பேசியதை நாம் வாசிக்கறோம். இவர்ளை பிரதான தீர்க்கதரிசிகள் என்றும் சிறிய தீர்க்கதரிசிகள் என்றும் கைப்படுத்தப் பட்டுள்ளார்கள்.

தற்கால சபைகளில் ஐந்துகை ஊழியங்கள் செயற்படுதை நாம் பார்க்கிறோம். அவையாவன

அப்போஸ்தலர்கள்,

தீர்க்கதரிசிகள்,

சுக்ஷேசகர்கள்,

மேய்ப்பர்கள்,

போதகர்கள் ( எபேசியர். 4:13)

இங்கும் சபைகளில் உள்ள அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிக்ஷேசகர்கள்,மேய்ப்பர்கள்,போதகர்கள் ஆகியோர்களக்கூடாக பல இரகசியங்ளை மக்களுக்குப் பேசுக்கொண்டேயிருக்கின்றார்.

3. கர்த்தர் தனது தூதர்கள் மூலம்பேசுகிறார்.

கர்த்தருடைய தூதர்கள்பற்றி வேதாகமம் என்னசொல்கிறது? வேதாகமத் தரவுகள் கர்த்தருடைய தூதர் என்பது , உண்மையில் கர்த்தர் தாமே தூதர்களாய் தோன்றினார் என்பதைக் காண்பிக்கின்றது. “யாவே” அல்லது யேகோவா” என்ற நாமத்தினால் தூதர்கள் தோன்றினார்கள், அவர்களடைய ஒவ்வொரு தோற்றமும் கர்த்தருடைய உடன்படிக்கையின் வாக்குத்த்த்தங்களுடன் அவருடைய அளவற்ற பிரசன்னத்தோடும், அவருடைய நம்பிக்கையுடனும் தொடர்புள்வையாக விருந்தன. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கிறுஸ்துவின் அடையாளமாக “இருக்கிறவராவே இருக்கறேன்”  என்ற கூறிய தூதர் கிறிஸ்துவாக   இருக்கிறார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன, கர்த்தரடைய ஒரேபேறான மகன் யேசுவாக அவதாரம் பெறுவதற்கு முன் துதராகத் தோற்றமளித்துள்ளார் என்று பலவேத ஆராய்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.

யேசுக்கிறிஸ்த்து பிறந்த பிற்பாடு  கர்த்தருடைய தூதர் என்ற பதம் எங்கும் பாவிக்கப்படவில்லை கிறிஸ்த்து அவதாரம் பெறுவதற்குமுன் தூதராகச் செற்பட்டிருந்தால் கர்த்தருடைய உடன்படிக்கையின் வாக்குத்தங்கள் புதிய கருத்துக்ளைக் கொண்டதாக இருக்கும். “பூமியிலுள்ள  வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்ற ஆபிரகாமுக்கு கர்த்தர் கொடுத்த வாக்குத் தத்தம் நீறைவேற இயேசு மாமிசத்தில் வந்தார், (அதி. 12:3) . எல்லோரும் கர்த்தருடன் தனிப்பட்ட உறவு மேற்கொள்ளும் வகையில் கிறிஸ்த்து சிலுலையில் மரித்தார், திரும்ப உயிரத்தெழுந்தார். இயேசுக்கிறிஸ்த்துதான் இரட்சகர் என்று நற்செய்திநூல் சொல்லும் செய்தியை ஏற்றக்கொள்ளும் போது, கர்த்தரின் உடன்படிக்கையுடன் தொடர்புள்ள விசுவாசிகள் கூட்டத்தில் நாங்களும் அங்கத்தவராகின்றோம். கர்த்தருடன் கொள்ளும் உறவு சாதாரணமாக  அவர் எப்போதும் ஜீவிக்கிறார், என்றும் ஜீவிப்பார், என்றும் தனது வார்த்தையில் உண்மையுள்ளவராய் இருப்பார்,என்ற  நம்பிக்கயை ஆரம்பத்திலிருந்து,ஆதாரமாயிருக்கிறது. ஆகரைப்போல் வழிகாட்டலையும் நடத்துலையும் கர்த்தரிடமிருந்து எங்களில் நாம் பொற்றுக் கொண்டிருக்கிறவர்கள் யார். ஆபிரகமைப்போல், நிச்சயமில்லாத, குழப்பம் நிறைந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். மோசேயைப்யோல உயிர்பெறக்கூடிய கனவு காண்கிறோமா? கிதியேனைப்போல எப்பலவீனங்ளையும் மேற்கொள்ளக் கூடிய பலம்கொண்டிருக்கிறேமா? எலியவைப்போல் எங்கள் வாழ்க்கையில்  தோல்விகளில் வெற்றி பெறும்படி தேற்றப்படுகிறோமா? தாவீதைப்போல் பாவம்செய்யும் போது பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெறுகிறோமா? எசேக்கியாவைப்போல் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுகிறோமா? , கர்த்தருடைய நல்ல எதிர்காலத்திட்டங்கள் எங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது

கர்த்தர் உடன்படிக்கை ஏற்படுத்தினார்.(ஆதி. 12: 1-3)

கர்த்தர் ஆபிரகாமுடன் ஏற்படுத்தின உறவு ஆதியாகமம்12 இல் ஆழமாகவுள்ளது.

ஆபிராம் என்ற மனிதனுக்கு கர்த்தர் காட்சிகொடுத்து ஊர் என்ற நகரத்தை விட்டு கர்த்தர் காண்பிக்கும் தேசத்திற்குப் போகும்படி சொல்லியிருந்தார். ஆதியாகமம் 12 இல் ஒருதொடர் வாக்குத்தத்தங்கள் பதிவாகியுள்ளன, அவைகள்​ முழுவதும் பழையஏற்பாட்டிற்கு ஒரு வடிவத்தையும் முக்கியத்தையும் கொடுக்கின்றன. கர்த்தர் கூறினார்

ஆபிராம்:-

நான் உன்னைபெரிய ஜாதியாக்கவேன்

நான் உன்னை ஆசீர் வதிப்பேன்.

உன்பெயரைப் பெருமைப் படுத்துவேன்

நீ ஆசீர் வாதமாய் இருப்பாய்.

உன்னை ஆசீர்வதிக்கிறவர்ளை நான் ஆசீர்வதிப்பேன்

உன்னைச் சபிக்கிறவர்ளைச் சபிப்பேன்

பூமியிலுள்ள வம்சங்ளெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்.(ஆதி.12:1-3)

கர்த்தரடைய தூதன்:- இந்தப்பெயரில் சில தடவைகள் பழைய ஏற்பாட்டில் தூதர்கள் தோன்றியுள்ளார்கள்.வேதாகமத்தில் ஆகாருக்குத் தோன்றியதூதர் மிகவும் அற்புதமான துதராகும்.அவரை “கர்த்தரின் தூதன்” என்று அழைக்கிறார்கள், பல தடவைகள் பழைய ஏற்பாட்டில் இவர் காட்சியளித்துள்ளார்.

கர்த்தரடைய தூதன் அதிக  ஞானமுள்ள விடயங்ளைக் காண்பித்தார். (ஆதி. 16:8)

ஆகாரை தூதன் சந்தித்ததைப் பார்க்கும்போது பல விடயங்ளை நாங்கள் அவதானிக்க முடியும்.

கர்த்தரடைய தூதன் சொன்னார், ஆகார், சாராளுடைய அடிமை… இந்த்த் தூதனுக்கு ஆகார் யார் என்று மிகவும் சரியாகத்தெரிகிறது. அவளுடைய பெயர் சரியாகத்தெரிகிறது மட்டுமல்ல அவள் சாராளின் அடிமைப்பெண் என்றும் தெரிகிறது. ஆவிக்குரிய சம்பவங்கள் என்ன என்று எங்களுக்கு விளங்காது, ஆனால் தூதர்களுக்கு நன்றாக விளங்கும்,

எங்கிருந்து வருகிறாய் எங்கே போகிறாய்” ? இந்தக்கேள்வி அறியமையால் கேட்கப்பட்ட தல்ல, ஆகரை பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதற்காகன நோக்கத்துடன் கேட்கப்பட்டு, அவளுடைய பதிலினால்  வெற்றியும் அடைந்தார்கள்.

“ என்னுடைய எஜமாட்டி சாராளிடமிருந்து தப்பி ஓடுகிறேன்” ஆகார் இரண்டாவதுகேள்விக்கு விடைகூறவில்லை, எங்கேபோவது என்று தெரியாமல் ஓடுகிறாள். ஆகாரைப் நாமும் சிலவளைகளில் ஓடித்திரிகிறோமல்லவா?

கர்த்தரடைய தூதன் கர்த்தரடைய சொந்த அதிகாரத்தோடுபேசினார். (ஆதி.16:9-12)

கர்த்தரடைய தூதன் அவளுக்குச்சொன்னார் “ உன்னுடைய எஜமாட்டியிடம் திரும்பிப்போ, அவளுடைய கரங்களுக்குள் அடங்கியிரு” (9). இது ஒருவேண்டுகோள் அல்ல, ஆனால் கட்டளை. இந்தக் கட்டளை ஒரு வழிநடத்தலையும் செய்கிறது,  ஆகார் எங்குபோவது என்று அறியாதிருந்தாள், ஆனால் கர்த்தரடைய தூதருக்கு ஆகார் கட்டாயம் திரும்ப்போயாக வேண்டும் என்றுதெரியும்

கர்த்தரடைய தூதன் அவளுக்குச்சொன்னார், உன்னுடைய சந்ததியை நான் அதிகமாக்க​ப பெருகப் பண்ணுவேன், அதுபெருகி எண்ணி முடியாததாய் இருக்கும் என்றார், கர்த்தருடைய தூதன் இவ்வாறு உறுதிப்படுத்தினார்.

கர்த்தருடைய தூதன் என்பவரே தூதன் வேடத்தில் வந்த கர்த்தராக (கிறிஸ்துவாக) விருக்கிறார். (ஆதி.16:13.)

அவள் அவரை என்னைக் காண்கிறதேவன் என்றுபெயரிட்டாள். கர்த்தர் ஆகரை மட்டுமல்ல என்னையும் உன்னையும் காண்கிறவராவே இருக்கிறார். நீ அவருக்கு உண்மையாய் நடந்தால் உன்னோடும் அவர்பேசுவார், உன்னையும் வழிநடத்துவார்.

கர்த்தருடைய தூதன் மேசேக்கு காட்சி கொடுத்தல். (யாத்.1-3 அதிகாரங்கள்)

உடன்படிக்கையின் தொடர்பு (யாத்.1:15,16)

மேசேக்கு கர்த்தர் காட்சி கொடுத்போது இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள்

பார்வோன், இஸ்வேலர்கள் ஆண்பிள்ளைகள்பெற்றால் உடனடியாக அவற்றைக் கொல்லும்படி கட்ளையிட்டிருந்தான்.. இந்த அடிமைகள் ஆபிரகாமின் சந்த்தியினர்.அவருக்கு கர்த்தர் நல்ல வாக்குத்தத்தங்களை கொடுத்திருந்தார். நிச்சயமாக அவர் அவற்றை நிறைவேற்றுவா மேமசே மந்தைகளை மேய்த்துக் கொண்டிருக்கம்போது கர்த்தருடைய தூதன் ஒரு முள்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவலையிலே நின்று அவனுக்கு தரிசனமாகி, எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தைக் கண்டேன், அவர்கள் கூக்கரல் என் சமூகத்திற்கு வந்துள்ளத்து, அவர்களை எகிப்திலிருந்து விடுலையாக்கி பாலும்தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்கு கொண்டுசெல்ல சித்தமாயுள்ளேன். நான் உன்னை அந்வேலைக்காக அனுப்ப சித்தமாயுள்ளேன் என்றார்.

தூதர் மேசேயின் கனவைப் புதுப்புத்தல் (யாத். 3:7-10)

மேசேயினுடைய இளம்பிராயக் கனவு  40 வருடங்களாக மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்த காலத்தில் செயலற்று மரித்துப் போயிருந்த்து அவருடைய நம்பிக்கை வறண்டபோயிருந்த்து, ஆனால் அதேசெயற்பாட்டிற்காக கர்த்தருடைய தூதன் மீண்டும் மேசயை அழைக்கின்றார். அவர் நலிந்போயிருந்த நம்பிக்கயை மீண்டும் திடமான நம்பிக்கையாக மாற்றினார்.

தூதன் கர்த்தரடைய செயற்பாட்டை உறுதிப் படுத்தினார்.(யாத். 3: 12-20)

இந்தநேரத்தில் கர்த்தர் தன்னுடைய சொந்தப்பெரை (இருக்கிறவராகவே இருக்கியேன்) மேசேக்கு அறிவித்தார், அத்துடன் இந்தப் பெயராலேயே அவருடைய ஜனங்கள் எப்போதும் அறிந்துகொள்வார்கள் என்றார். இதற்கு மேல் என்ன வேண்டும், ​கர்த்தர் தனது செயல் விருப்பத்தை விளங்கப் படுத்தினார் தொடர்ச்சியான பல அற்புதச்செயல்கள்மூலம் இஸ்வேலர்ளை எகிபதைவிட்டு வெளியேகொண்டுவந்தார். அவர் தனது உடன்படிக்கயைக் காத்துக் கொண்டார். ஆபிரகாமின் சந்த்தியினர் அடிமை வாழ்வு வாழுவதற்கு நியமிக்கப்படவில்லை. ஆபிரகாமின் சந்த்தியாரை அடிமைத் தனத்திலிருந்து விடுவித்து வாக்குப் பண்ணப்பட்ட தேசத்திற்குள்கொண்டு செல்வதே அவரது நோக்கமாகும்.

கர்த்தரடைய தூதன் காட்சிகொடுத்தோர் விபரம்

பாலாம்                 எய்ணாகமம் 22: 22-35.

கிதயோன்               நியாயாதிபதிகள். 6: 11-22

மனோவா, மனைவி      நியாயாதிபதி. 13-16

தாவீது இராஜா          2 சாமு 24:, 1நாளாகமம்21: 12-18, 30

எலியா                 1 இராஜா. 19:7, 2இராஜா 1:3,15

அசீரியா இரானுவம் அழிப்பு   2இராஜா.19:35, ஏசாயா 37:36.

சகரியா                    சகரியா 3:5, 12: 18

4. கனவுகள் மூலமாகவும் தரிசனங்கள் மூலமாகவும் கர்த்தர் பேசுகின்றார்.

கர்த்தரின் விருப்பத்தின்படியும் அனுதினமும் அவரைத்துதித்து ஆராதனை செய்கிறவர்கள் மீது தேவன் பிரியமாய் இருக்கிறார். அதாவதுஅனுதினமும் ஜெபம் செய்யும் மனிதர்களுடன் தேவன் உறவாட விரும்புகிறார்.

கனவுகள்:- மனதில் ஏற்படும் சிந்னைகள் பதிவுகள் என்பன  மனிதனின் உறக்கத்தில் சிந்னைக்கூடாக கடந்துசெல்பவையாகும். பழைய சமய நுல்களில் கனவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன பழைய காலங்களில் கனவுகள் விஷேடமாக இராஜாக்களும்,  ஆசாரியர்களும், கடவுள் தன்னுடைய செய்திளை கனவுகளுக்கூடாகத் தெரியப் படுத்துகிறார் என்று கருதினார்கள்.(எண்ணாகமம் 12:6, ஆதி.31:10-13). வேதாகமத்தில் இவைகள் தீர்க்கதரிசன செய்திகளாகக் காணப்பட்டன. எலிகூ தன்னடைய கூற்றில்தெளிவாக கடவுள் கனவுகளுக்கூடாகபேசுகிறார் என்று கூறகிறார்

பாவம்செய்யால் தடுக்கிறார்.

கனவின் மூலமாக் கேகாரின் இராஜாவாகிய அபிமலேக்கை சாரளைத் தொடவேண்டாம் என்று கர்த்தர் எச்சரிக்கிறார், ஏனெனில் அவள் ஆபிரகாமுக்கு மனைவியாக இருந்தபடியால். (ஆதி 20:1-6)

ஆபிரகாமுடன் செய்த உடன்படக்கையை யாக்கோபோடும் புதிப்பித்தார்.

யாக்கோப்பு ஒரு இடத்தில் வந்து சூரியன் அஸ்தமித்தபடியால், அஙகே இராத்தங்கி, அவ்விடத்து கற்களில் ஒனறை எடுத்த, தன் தலையின் கீழ்வைத்து , அங்கே நித்தரைசெய்யும்படி படுத்துக்கொண்டான். அங்கே அவன் ஒரு

சொப்பனங்கண்டான், இதோ , ஒரு ஏணி பூமியலேவைக்கப்பட்டிருந்த்து, அதன் நுணி வானத்தை எட்டியிருந்த்து, அதிலேதேவதுதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்க்ள் அதற்குமேலாக கர்த்தர் நின்று  நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின்தேவனும், ஈசாக்கின்தேவனுமாகிய கர்த்தர், நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்த்திக்கும் தருவேன், உன் சந்ததி பூமியின் தளைப்போலிருக்கும், , நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும்,தெற்கேயும் பரம்புவாய், உனக்குள்ளும் உன் சந்த்திக்குள்ளும், பூமியுன் வம்சங்களெல்லாம்  ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடேயிருந்து , நீபோகிற இடமெல்லாம் உன்னைக் காத்து , இந்தத்தேசத்திற்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன், நான் உனக்கு சொன்தைச்செய்யுமளவும், உன்னைக் கைவிடுவதில்லைனெறு சொன்னார்.

இந்தக் கனவுக்கூடாக கர்த்தர் யாக்கோப்போடு பேசினார், அவர் உடன்படிக்கயை புதுப்பித்துக் கொள்வதாகவும், தன்னுடைய பிரசன்னமும் பாதுகாப்பும் யாக்கோப்புக்கு கிடைக்கும் என்றும் உறுதிப்படுத்தினார்.

இதுதேபோலவே , உன் தகப்பனோடு ஆண்டவர் உடன்படிக்கை செய்திருந்தால் உன்னோடும்  அதைப் புதுப்பித்துக் கொள்ளுவார் . நீ அதற்கு கர்த்தரோடு எப்போதும் தொடர்பு உள்ளவனாக்க் காணப்படவேண்டும்..(ஆதியாகமம் 28:10-22)

பழைய ஏற்பாட்டுக் காலங்களில் ஏற்பட்ட கனவுகளை இரண்டு வகையாக மொழி பெயர்ப்பாளர்கள் வகைப்படுத்தியுள்ளார்கள்.

யேசேப்புகான உயர்ச்சிக்கான கனவு

முதலாவது வகை யோசேப்புக்குரியது. யேசேப்பை எப்படி கர்த்தர் உயர்த்தப்போகிறார் என்பதை அந்தக் கனவுகள் மூலம் ஆண்டவர் வெளிப்படுத்தினார். இந்தக் கனவுகளின் அர்த்தத்தையும் யோசேப்புக்கு ஆண்டவர் கொடுத்தார்.(ஆதி. 37:5-10) கனவுளை கர்த்தர் எங்களுக்குத் தரும்போது அதனுடைய அர்த்தத்தையும் நாம் கேட்டுப்பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

தேசத்தைக் குறித்த தரிசனம்

நேபுகாச்நேச்சராகிய பாபிலோன் ராஜா கண்ட கனவுக்கு அவரால் அர்த்தத்தை அறிய முடியவில்லை அதனால் அவர் தனது இராஜ்ஜியத்திலுள்ள சகல சாஸ்திரிளையும்,யோசியர்ளையும்  அழைத்து தான் கண்ட தரிசனத்தையும் அதன் அர்த்தத்தையும் கூறம்படி அவர்களுக்கு கட்ளையிட்டான், அவர்கள் சொல்லத் தவறும் பட்சத்தில் சகல புத்திசாலிகள் என்ற அழைக்கப்படும் சாஸ்திரிளையும் யோசியர்ளையும் கொலை செய்து விடுவதாக கட்ளையிட்டான். தானியெல் கர்த்தரிடம் இந்தப்பிரச்னயைக் கொண்டுவந்தார், கர்த்தர் கனவையும் தானயேலுக்குக் காண்பித்து அதன் அர்தத்தையும் வெளிப்படுத்தினார். (தானி 2:14-45)

உனது வாழ்க்கையிலும் பிரச்னை ஏற்படும்போது அதனை நீ கர்த்தருடைய சமூகத்துக்குகொண்டுசென்று உதவிகேட்கும்போது அதற்கு ஆண்டவர் நிச்சயமாகப் பதில் தருவார்

பாபிலோனின் நேபுகாசநேச்சரினுடையதாகும். இரண்டு வகையான கனவுகளும் எதிர்காலத்தைக் குறித்தவையாகும். யேசேப்புவுக்கும் தானியேலுக்கும் அந்தக் கனவுகளை மொழிபெயர்க்கும் திறனைக் கர்த்தர் கொடுத்துள்ளார்.(ஆதி: 40: 8,  41:12,) (தானி 2: 20-45) ). பழைய ஏற்பாட்டுக் கனவுகள் அனேகமாக இஸ்ரவேலின் தீர்க்க தரிசிகளுடன் தொடர்புள்வைகளாகும். ( உபாகமம் 13: 1-5​ ஜெரேமியா23 25-32) ).

மேசியவைப் பற்றிய கனவு

புதிய ஏற்பாட்டில் , கர்த்தர் மரியாளின் கணவனாகிய யோசேப்புவுக்கு கனவில் தோன்றி வரப்போகின்ற இயேசுக் கிறிஸ்த்துவைப் பற்றிக் கூறினார்.(மத்தேயு 1:20). குழந்தை இயேசுவைப் பாதுகாக்கும்படி கனவில் கர்த்தர்பேசினார். (மத் 2: 13-14)

தரிசனம் என்பது மிகவும் அதிஉன்னத்தேவனின் எதிர்கால வெளிப்பாடாகும். கனவுகள் ஒரு மனிதனின் உறக்கத்தில்தோன்றுகின்றன, ஆனால் தரிசனம் என்பத்து ஒரு மனிதன் விழித்திருக்கும் வேளையில் ஏற்படுவதாகும்.(தானி. 10:1-11) வேதாகமத்தில் , தரிசனம்பெற்ற மனிதர்கள் கர்த்தரடைய விஷேசித்த விழிப்புணர்வுள்ள இருதயத்தைக் கொண்டிருந்தார்கள். இவர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள் எசேக்கியேலும் தானியேலுமாவார்கள் புதிய ஏற்பாட்டில் முக்கியமாவை லுக்கா சுவிஷேசம், அப்போஸ்தலப் புஸ்தகம்,வெளிப்படுத்தல் புஸ்தகமுமாமே. . தரிசனங்கள் கொடுக்கப்படுவதன் நோக்கம். வழிகாட்டுதலும், இயக்குதலமாகும். தானியேலின் தரிசனம் மேசியாவின் வருகைபற்றிக் கூறியது.(தானி. 8:1,17)

யோவேல் 2: 28.-29.(அப்,2:17-18)  அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்போது உங்கள் குமார்ரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம்சொல்வார்கள், உங்கள் மூப்பர்கள் சொப்பனங்ளையும் , உங்கள் வாலிபர்கள் தரிசனங்ளையும் காண்பார்கள்.

29. ஊழியக்கார்ர்மேலும் ஊழியக்காரிகள்மேலும் அந்நாள்களில் என் ஆவியை ஊற்றுவேன்.

5. அற்புதங்கள் மூலம் கர்த்தர் பேசுகின்றார்.;

கர்த்தருடன் மிகவும் அன்பாயிருந்த மரியாளுடைய சகோதரன் லாசரு வியாதிப்பட்டிருந்தான். கர்த்தருக்கு பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் துடைத்தவள் அந்த மரியளே. லாசரு வியாதிப்பட்டிருக்கிறான் என்றசெய்தி இயேசுக்கிறிஸ்த்துவுக்கு ஒரு ஆள்மூலம்சொல்லி அனுப்பப்பட்டது. ஆனால் இதைக்கேள்விப்பட்ட இயேசுமேலும் இரண்டு நாள்கள் அதேயிடத்தில் தங்குவதற்கு முடிவுசெய்தார். ஏனெனில் லாசருவின் வியாதிக்கூடாக அவர் பிதவை மகிமைப்படுத்த விரும்பினார்.

லாசரு மரித்துப்போனான் என்பதை இயேசு ஆவியலே உணர்ந்தகொண்டார்.  அவர் தன்னுடைய சீடர் களைப்பார்த்து லாசரு மரித்துப் போனான் நான் அவனை எழுப்பப்போகிறேன் , அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று அவர்ளை அழைத்துச் சென்றார். இயேசு அங்கு வந்போது அவன் கல்றையில்வைக்கப் பட்டு நான்கு நாள்களாயிற்று என்று அறிந்து கொண்டார். அங்கு மார்த்தாள் மரியாள் குடும்பத்தார்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அநேகர் அங்கு வந்திருந்தார்கள். மார்த்தாள் மிகுந்த துக்கத்துடன் இயேசுவினிடத்தில் வந்து நீர் இங்கு இருந்திருப்பீரானால் என் கோதரன் மரித்திருக்க மாட்டான் என்று வேதனையோடு கூறினாள். அதற்குயேசு உன் கோதரன் உயிர்த்தெழுவான் என்று கூறினார்.அதற்கு அவள் உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்து எழுவான் என்றாள். நனே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்றார். உயிரோடு இருந்து என்னை விசுவாசிகிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் இதை நீ விசுவாசிக்கிறாயா என்றார்.”

மரியாள் அழுவதைப்பார்த்து இயேசுயேசு கண்ணீர் விட்டார். .உண்மையாய் நீயும் இயேசவை விசுவாசித்தால் உன்னுடைய துக்கத்திலும் அவர் பங்குபற்றிக்கொள்வார். கல்றையினிடத்திற்கு வந்தார்.இயேசு வானத்தை நிமிர்ந்து பார்த்து பிதவைநோக்கி “ நீர் எப்பொழுதும் எனக்குச்செவகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கறேன், ஆனாலும் என்னை நீர் அனுப்பினதை சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும் படியாக அவர்கள் நிமித்தம் இதைச்சொன்னேன் என்றார்” தன்னை நம்பாதவர்கள் மத்தியில் தான் பிதாவினால் அனுப்ப்ப்பட்டவர் என்தைக் காண்பிக்கும் பொருட்டு இவ்வாறு நடந்துகொண்டார்.

பின்பு கல்றைக்கு அருகில் நின்று லாசரவே வெளயே வா என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டார். அப்பொழுது மரித்தவன் வெளியே வந்தான், அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தன.அவன் முகம் பிரேதச் சீலையால் சுற்றப்பட்டிருந்தது..(யோவான் 11:1-50)

இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டவர்களில் அனேகர் இயேசுவை விசுவாசித்தார்கள்.   இது தான் இன்றும் சபைகளில் நடைபெறுகின்றன. போதகர்களுக்கூடாக அற்புதங்கள் நடைபெறும் போது தேவன் பலரோடு பேசுகிறார், அதனால் அவர்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றக்கொணடு இரட்சிக்கப் படுகிறார்கள். இதற்காவேதான் அற்புதங்கள் செய்யும் வரங்கள் ஊழியர்களுக்கு தேவனால் வழங்கப்படுகின்றன. நீங்களும் தேவனடைய வரங்ளைப் பெற்றுதேவனடைய நாமத்தை மகிமைப் படுத்துங்கள்.

இயேசு இன்னும் சிலரை உயிரோடு எழுப்பியுள்ளார். யவீருவின் மகள்.(மத் 9: 18-26, மாற்கு 5:42, லுக்கா.8: 40-56) விவையின் மகன்.(லுக்கா 7: 11-15)

6. கர்த்தர் தன்னுடைய படைப்புக்களுக்கூடாகப்பேசுகிறார். இயற்கையின் அடையாளங்கள் யாவும் பேசுகின்றன.

மனிதர்களின் பாவம் பூமியில்பெருகிய போது ,தாம் மனுனை உண்டாக்கிய தற்காக கர்த்தர் மனுஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்திற்கு மிகவும் விசனமாயிருந்த்து. அப்போது கர்த்தர் மனுஷனைப் பூமியின் மேல்வைக்காமல் , மனுஷன் முதற்கொண்டு மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப்பவைகள் சகலவற்றையும் அழித்துப்போடுவேன் என்றும் அவர்களை நான் உண்டாக்கினது வீண்  என்றார்.(ஆதி. 61-8)

நோவாவுடன் தேவன் பேசினார். நீ கொப்போர் மரத்தால் உனக்கு பேழையை உண்டாக்கு, அந்தப்பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறமும் கீல் பூசு. அதை நீ பண்வேண்டிய விதமாவது பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதன் அகலம் ​ஐம்பது முழமும், அதன் உயரம் முப்பது முழமுமாய் இருக்க வேண்டும் என்றார். சகல விதமான மாம்சமான ஜீவன்களிலும் ஆணும்பெண்ணுமாக வகை ஒன்றிற்கு ஒவ்வொரு ஜோடியும் உன்னுடன் காக்கப்படுவதற்கு பேழைக்குள் சேர்த்துக்கொள் என்றார். .நோவா அப்படியேசெய்தான். (ஆதி. 6:: 11-22)

நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழைபெய்தது. அன்றயதினமே நோவாவின் குமாரரும் அவர்களது மனைவிமாரும்​ பேழைக்குள் நுழைந்தனர்.

இதனால் பேழைக்குள் இருந்தவர்களைத் தவிர மற்றவர்கள் யாவரும் அழிக்கப்பட்டனர்.

நோவா தங்கள் அனைரையும் காத்துக் கொண்டதற்காக , கர்த்தர் தங்கள்மீது காண்பித்த இரக்கத்திற் காகவும் கிருபைக்காக்கவும் நன்றிப்பலி ஏறெடுக்கின்றார். அவர் கர்த்தருக்கென்று ஒரு பல்லிபீடத்தைக் கட்டுகின்றான். கர்த்தரிடமிருந்து எந்தவித அளவுத் திட்டங்களும் கொடுக்கப்படவில்லை. பேழைக்குள் நுழையும்படி அவருக்கு விசேசித்த அழைப்புக் கொடுக்கப்பட்டது. வெளியலே வரும்படியும் அவருக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது.. கர்த்தரிடமிருந்து கிருபயைப் பெற்றவர்கள் கட்டாயம் அதற்கான நன்றியறிதலைச் செலுத்தல் வேண்டும். கட்டாயத்தின் நிமித்தமல்ல, மனப்பூர்வமாகச் செலுத்தல் வேண்டும். கர்த்தர் மன விருப்பத்துடன் கொடுக்கும் காணிக்கைகளிலும் துதிகளிலும் பிரியமாயிருக்கின்றார். அழிக்கப்பட்ட பூமிக்கு திரும்பவும் வந்தவுடன் தனக்கு ஒரு வீடுகட்வேண்டும் என்ற எண்ணமே பொதுவாக உருவாவேண்டும் மாறாக நோவா கர்த்தருக்கு ஒரு நன்றிப் பலிபீடத்தைக் கட்டினான். கர்த்தருடைய காரியங்களுக்கே நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும். கர்த்ரோடு காரியங்ளை ஆரம்பிப்பது எவ்வளவு சிறப்பானது.

நோவாவுடைய பலியைக் கர்த்தர் பிரியத்துடன் ஏற்றக்கொண்டது மட்டுமன்றி “ இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை, மனுஷனுடைய  இருதயத்தின் நினைவுகள் அவன் சிறு வயது தொடங்கிப் பொல்லாத்தாக விருக்கிறது, நான் இப்பொழுது செய்த்துபோல  இனி சகல ஜீவன்ளையும் சங்கரிப்பதில்லை, பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளவும் உஷ்னமும்,கேடைகாலமும்  மாரிகாலமும், இரவும் பகலும் ஒழிந்து போவதுல்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். (ஆதி. 8: 20-22)

அதுமட்டுமல்ல  நோவவையும் அவன் குமாரையும் ஆசீர்வதித்து பலுகிப்பெருகி  பூமியை  நிரப்புங்கள்  என்றார்.

பின்பு நோவாவையும் அவன் குமாரையும் நோக்கி நான் உங்ளோடும் உங்களுக்குப் பின்வரும் சந்ததியோடும் , உங்ளோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துகள்முதல் , இனிப்பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம் , பறவைளோடும் , நாட்டு மிருகங்ளோடும் ,உங்களிடத்திலிருக்கிற சகல காட்டு மிருகங்ளோடும் என் உடன்படிக்கயை ஏற்படுத்துகிறேன்.

  1. 1. இனி மாம்சமாவைகள் எல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லை.
  2. 2. பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை.

இந்த உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை மேகத்தில்வைத்தேன். நான் பூமிக்குமேலாய் மழைமேகத்தை வைக்குமபோது அந்த வில்தோன்றும். அப்பொழுது என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். இது எனக்கும் பூமியினமேலுள்ள மாம்சமான யாவுக்கும் நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடு சொன்னார். (ஆதி. 91-17)

வானவில்மேகத்தில் தோன்றும்போது , “ ‘நான் இனிவெள்ளத்தால் சகலரையும் அழிக்கமாட்டேன்”’ என்ற கர்த்தர்  எங்களுடன் பேசுகிநார்

தேவன் தாமே சர்வ்வல்மையுள்ளவர் என்தை தன்னுடைய படைப்புக்ளைப் பார்த்தே மனிதன் அறிந்துகொள்ளக்கூடியதாக அவ்வளவு சிறப்பாகவும் நுனுக்கமாகவும் சிருஷ்டித்திருக்கிறார். இதன்மூலம் காணப்படாத தன்னடைய நித்திய வல்மயையும் தேவதத்துவத்தையும் வெளிப்படித்தியிருக்கிறார். இதனைப் பார்க்கும் யாவரும்தேவன் ஒருவர் இல்லயென்றுசொல்வே முடியாது.(றோமர.1:19-20)

வானங்கள் தேவனடைய மகிமையை வெளிப்படுத்திக் காண்பித்துக் கொணடேயிருக்கின்றது,ஆகாய விரிவு அவருடைய கரங்களின் செயற்பாட்டை   அறிவித்துக்கொண்டே இருக்கிறது. இவை நாள்தோறும பேசுகின்றன, இரவுக்கு இரவு அறிவை வெளிப்படுத்துகின்றன அங்குபேச்சுமில்லை மொழியுமில்லை அங்கே அவைகளின் குரல் கேட்பதுமில்லை, அவற்றின் வார்த்தைகள் உலகின் கடைசிரை செல்கின்றன. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவை எல்லாவற்றிற்கூடாகவும் தேவன் எங்களுடன் பேசிக்கொணடேயிருக்கின்றார்.(சங்கீதம். 19:)

7..கர்த்தர் தனது மகனாகிய இயேசுக்கிறிஸ்த்துவுக்கூடாகப் பேசுகின்றார்.

யேயகோவா தேவன் எங்களுடன் பேசுவதற்காக அவரது திருத்துவத்தில் ஒருவராகிய இயேசுக்கிறுஸ்த்துவிற்கூடாவே மனிதர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். தேவனை ஒருவரும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமானே அரை வெளிப்படுத்தினார். (யோவான் 1:18) யேசுக்கிறிஸ்த்து மாமிசத்தில் உலகிற்கு வந்தார். அவர் கிருபையிலும் சத்தியத்திலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமயைப்பலர் கண்டார்கள். அது பிதாவுக்கு ஏற்ற மகிமையாவே இருந்தது. (யோவான். 1:14 )

பூர்வகாலங்களில் தீர்க்கதரிசிகளுக் கூடாகப் பேசியதேவன் கடைசிநாட்களில் தன்னுடைய குமாரன் மூலமாவே பேசினார். அதுமட்டுமல்ல எங்களடைய பாவங்கள் அனைத்தையும் சிலுவையிலே தன்னுடைய திரு இரத்த்த்தைச் சிந்தி நீக்கியவராகக் சிலவையில் பலியானார். ( எபரேயர்.1:1-3)

8. கர்த்தர் தனது பரிசுத்த ஆவிக்கூடாகப்பேசுகின்றார்.

இயேசுக்கிஸ்த்து பரத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முன்,  தனது சீடர்களோடு போசியது என்வென்றால், நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள், அப்போது உங்களுடன் என்றென்றைக்கும் கூட இருக்கும்படி பரிசுத்த ஆவியானரை பிதா உங்களுக்கு அனுப்பிவைப்பார். அவர் உங்களுனே கூடவிருந்து உங்ளைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார், நான்கூறிய எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவூட்டுவார்,உலகம்சத்திய ஆவியானரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது. ஆனால் அவர் உங்களுனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளேயிருப்பதால் நீங்கள் அரை அறிவீர்கள். நான் என்பிதாவிலும் நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருப்தை  அந்நாளில் அறிவீர்கள். அதாவது நாங்கள் யேசுவோடு இணைந்திருப் போமானால் பரிசுத்த ஆவியானவர் எங்களுடன் இணைந்திருந்து  எங்ளை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார் .இயேசவோடும் பரிசுத்த ஆவியானரோடும் நாம்இணைந்திருப் போமானால் அவருடைய மெய்யான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.(யோவான். 14:15-31.யோவான் 16:15,யோவான் 14:26,யோவான் 15:26,யோவான். 16:8, 13றோமர் .8:16.)

  1. 9. எங்களுடைய சொந்த மனச்சாட்சிக் கூடாகவே பேசுகிறார்.எங்கள் மனச்சாட்சியின் சத்தத்தை அனுதினமும் நாம் கேட்கவேண்டும்.

இயேசு ஒலிவலையிலிருந்து தேவாலயத்திற்கு வந்தபோது ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள், அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உதேசம் பண்ணினார். அப்போது விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரியை வேதபாரகரும் பரசேயரும் அவரிடத்தில்கொண்டுவந்து , அளை நடுவே நிறுத்தி :போதரே இந்த ஸ்திரி விபசாரத்தில் கையும்மெய்யுமாப் பிடிபட்டாள், இப்படிப்பட்டவர்ளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மேசே நியாயப்பிரமாணத்தில் நமக்கு கட்ளையிட்டிருக்கிறரே, நீர் என்ன சொல்கிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றம் சுமத்தும்படி காரணம் உண்டாகும்பொருட்டு இப்படிச்சொன்னார்கள், இயேசு குனிந்து விரலினால் தரையில் எழுதிக்கொணடேயிருந்தார்.

அவர்கள்ஓயாமல் அவரைக்கேட்டுக் கொண்டிர்க்கையில் அவர் நிமிந்து பார்த்து உங்களில் பாவமில்லாதவன் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார். அவர்கள் அதைக்கேட்டு தங்கள் மனச்சாட்சியினால் கடிந்தகொள்ளப்பட்டு பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். (யோவான் 8:1-9)

இங்கு அவர்கள் எல்லோரும் தங்களுடைய மனச்சாட்சியினூடாக கர்த்தர் பேசினபடியால் கலைந்துசென்றார்கள்.  எங்களுக்கும் எங்கள் மனச்சாட்சியூடாக கர்த்தர்பேசும்போது அதற்கு நாம் கீழ்படியவேண்டும்.

நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிமக்கள்சுபாவமாய் மனச்சாட்சியின் படி யேசெய்கிபோது  நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்ளே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். (றோமர் 2: 14-15)

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply