கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றுதல்.

கர்த்தருக்குக் கீழ்ப்படியும்படிவேதாகம்ம் மிகச் சிறப்பாக்க் கூறுகிறது.( உபாகமம்.4:30,11:132தானி.7:27,அப்5:29) விஷேடமாகஅவருடையவார்த்தையைக்கேட்டுஅதன்படிசெய்யும்படிகேட்கிறது.( யாக். 1:22)

கர்த்தர்மேல் நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடே கீழ்ப்படிதலாகும்.(1யோவான்.2: 3-4)கர்த்தரை நாம்நேசித்தால் , அவருக்கு நாம் ஊழியம்செய்ய விரும்புவோம். அத்துடன் அவருக்கு ஊழியம்செய்யும்போது , அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய விரும்புவோம். கீழ்படிதலின்வெளிப்பாடாக, கர்த்தரை ஆழமாகநேசிக்கிறோம் என்பதன் உள்ளார்ந்த வெளிப்பாடாக , எங்களை முழுவதும் அர்ப்பணம்செய்கிறோம். Read more »

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்.

தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் . பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்ளை விட்டு ஓடிப்போவான் (யாக் 4:7)

பிசாசு என்றால் என்ன? ஏன் நாம் அதற்கு எதிர்த்து நிற்கவேண்டும்.?

இக்கேள்ளிகள் இரண்டிற்கும் சரியான விடைநாம் கண்டுபிடித்தால் மட்டும்தான் ஒரு நல்ல கிறிஸ்தவனாக நாம் வாழமுடியும்.பிசாசு என்பதன் மறுபெயர் குற்றம் சாட்டுபவன்,அல்லது பழிசுமத்த பவன் என்பதாகும். விழுந்துபோன தூதனாகிய பிசாசின் பிரதான வேலை மனிதனுக்கும் கர்த்தருக்கும் பிரதான எதிரியாக இருப்பதேயாகும். பிசாசு என்பது அவனது பொதுவான பெயராகும்.அவன்கெட்ட ஆவியாகவே இருக்கிறான்.அவன் குற்றம் சுமத்து பவனாகவோ அல்லது ஏமாற்றுபவனாகவோ இருக்கிறான். “கெட்ட ஆவி (டெவில்)என்றசொல் கிரேக்கசொல்லில் இருந்து வந்த்தாகும். இதன் அர்த்தம் “ஒருபொய்ச்சாட்சி “ அல்லது “தொல்லை தரும் குற்றம் சாட்டுபவர்“ என்பதாகும். Read more »

கர்த்தர் எங்களுடன் எப்படிப்பேசுகின்றார்.

1. தன்னுடையவேதாகமத்தின் வார்த்தைக்கூடாக எங்களுடன்பேசுகிறார்.

வேதாகமம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு 40தேவ மனுசர்களினால் எழுதப்பட்வை..அதில் பழைய ஏற்பாட்டில் 39 புத்தகமும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகமுமாகமொத்தம் 66 புத்தகங்ளைக்கொண்டுள்ளது. இவை வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றோடொன்று தொடர்புள்ளதாவே காணப்படுகின்றன. அனுதினமும் இந்த வார்த்தைளை நாம் வாசிக்கும்போது அவை எங்களுடன் பேசிக்கொண்டேயிருக்கின்றன. எங்களுடைய சகலகேள்விகளுக்கும் வேதாகமத்திற்குள் விடை காணப்படுகின்றது அவற்றை புரிந்துகொள்ளும் கையில் மன அமைதலுடன் நாம் அவற்றை வாசிக்கும்போது அவை எங்களுடன் பேசுவதை நாம் உணர்ந்து கொள்வோம்.ஆனால், கர்த்தரடைய வார்த்தையைக் கவனிப்பது மட்டுமல்ல அதன்படி நாம்செயற்படலும்வேண்டும். அப்படி நாம்செய்யாவிடில் எங்ளை நாங்ளே ஏமாற்றுபவர்களாகவிருப்போம். வார்த்தயை அவதானித்தும் அதன்படி நடக்காதிருப்போமாகில் கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பவர்களைப்போலவே நாமும் இருப்போம். அதாவது கண்ணாடியில் எங்கள் தவறுகள் சுட்டுக்காட்டப்படும் அதனை சீர்செய்ய மறுப்பவர்ளேப்போலக் காணப்படுவோம்.(யாக்கோபு 1:22-23) Read more »

கர்த்ரோடு நாம்தொடர்பு கொள்ளும்போது நாம் என்னசெய்வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

நாம் அவருடைய பிள்ளையாகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

எப்படி  நீ தேவனடைய பிள்ளையாக மாறுவது. இது மிகவும் இலகுவான விடயம்.முதலில் இயேசுக் கிறிஸ்த்து என்னுடைய பாவங்களுக்கான தண்டனையை சிலவையில் சுமந்து தீர்த்துவிட்டார் என்பதை நீ விசுவாசிக்வேண்டும், அத்துடன் எனது பாவத்தின் விலைக்கிரயமாக (தண்டனயாக) அவருடைய  திருஇரத்தத்தை சிலவையில் சிந்தினார் என்தை நீ நம்வேண்டும்.. அப்படி நீ யேசுக்கிறீஸ்த்தவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நீ பாவி என்ற நிலையிலிருந்து நீதிமான் என்ற நிலைக்கு மாற்றடைகிறாய்.. எப்படி இந்த மாற்றம் உனக்கு உண்டாகின்றது. நீ யேசுக்கிறிஸ்த்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட படியால் உனக்கு பாவமன்னிப்பு கிடைக்கின்றது, அதனால் நீ நீதிமானாக்கப்படுகின்றாய். நீ நீதிமானாக்கப்பட்ட படியால் தேவனடைய பிள்ளை என்ற அதிகாரத்தைப்பெறுகின்றாய். (யோவான். 1:12, கலாத்தியா.3:26. 1யோவான்.5:1) Read more »